பிள்ளைகளோடும் உடன்படிக்கை
உனக்கும் உனக்குப் பின்வரும் என் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும் உனக்குப் பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே என்உடன்படிக்கையை ஸ்தாபிப்பேன் (ஆதி 17:7).
ஆண்டவரே என் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவில் உம் ஊழியக்காரனான என்னோடு ஓர் உடன்படிக்கை செய்திருக்கிறீர். அதன் நிபந்தனைகள் இப்போது என்பிள்ளைகளுக்கும் பொருந்தத் தக்கவையாய் இருக்கச் செய்யுமாறு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன். மேலே கொடுக்கப்பட்ட வாக்குறுதியை ஆபிரகாமுக்கு அளித்தது போல எனக்கும் அளித்திருக்கிறீர் என்று நம்பச்செய்யும். மற்ற மக்களின் பிள்ளைகள் போல் என் பிள்ளைகளும்துர்க்குணத்தில் உருவாகி பாவத்தில் கர்ப்பந்தரித்தருக்கிறார்கள். ஆகையால் அவர்கள் பிறப்பைச் சார்ந்ததாக நான் எதையும் வேண்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் மாம்சத்தால் பிறப்பது மாம்சமாயிருக்கும். ஆண்டவரே உம்முடைய பரிசுத்த ஆவியினால் அவர்களை உம் கிருபையின்உடன்படிக்கையின் கீழ்ப் பிறக்கச் செய்யும்.
தலைமுறை தலைமுறையாக என் மரபில் பிறப்பவர்களுக்காகவெல்லாம் நான் வேண்டிக்கொள்கிறேன். நீர் என் கடவுளாயிருப்பது போல் அவர்களின் கடவுளாயும் இரும். உமக்கு ஊழியம் செய்ய என்னை அனுமதித்திருப்பதே எனக்குக்கிடைத்த பெரும் வாய்ப்பாகும். வரும் ஆண்டுகளில் என் மரபினர் உமக்கு ஊழியம் செய்வார்களாக! ஆபிரகாமின் கடவுளே ஈசாக்கின் கடவுளாயும் இரும். அந்நாளின் கடவுளே அந்நாளின் சாமுவேலை ஏற்றுக் கொள்ளும்.
ஆண்டவர் என் குடும்பத்தினருக்கு ஆதரவு காட்டியிருக்கிறீர்.உம்முடைய ஆசீர்வாதத்தைப் பெறாத நிலையிலிருக்கும் மற்றக் குடும்பத்தினருக்காக உம்மைவேண்டிக் கொள்ளுகிறேன். இஸ்ரவேலின் எல்லாக் குடும்பங்களுக்கும் கடவுளாயிரும். உமக்குப் பயப்படுகிறவர்கள் கடவுள் பயமில்லாத துன்மார்க்கமான குடும்பத்தினரால் சோதனைக்கு ஆளாகாமல்இருப்பார்களாக. இயேசு கிறிஸ்துவின் மூலம் இந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளும்.
கருத்துகள்
கருத்துரையிடுக