யெஹேவா சாட்சிகள் (அ) வேத மாணாக்கர்கள்
ஆயிரமாண்டு மறுசீரமைப்பு கிறித்தவ இயக்கம் என்று அறியப்படும் வேத மாணாக்கர்கள் யார் என்பது பற்றியும், அவர்களுடைய கொள்கை எவ்வாறு அடிப்படை கிரிஸ்தவ நம்பிக்கைக்கு விரோதமாக இருக்கிறது என்பது பற்றியும், அவர்களுடைய சிக்கலான கேல்விகளுக்கு விடை காணும் பதிவாக இது இருக்கும்.
இந்த இயக்கமானது சார்லஸ் டேஸ் ரஸ்ஸல் (1852–1916) என்பவரால் உண்டானது. 1881 ஆம் ஆண்டு இவர் சீயோனின் வாட்ச் டவர் ட்ராக்ட் சொஸைடி என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வேத மாணாக்கர்கள் என்றோ, சர்வ தேச வேத மாணாக்கர்கள் என்றோ, ஒருங்கினைந்த வேத மாணாக்கர்கள் என்றோ சுயாதீன வேத மாணாக்கர்கள் என்றோ அறியப்பட்டனர்.
1876 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ரஸ்ஸல் சுயாதீன அட்வன்டிஸ்ட் போதகர் நெல்ஸன் எச் பார்பர் மற்றும் ஜான் எச் பேடொன் போன்றோரை சந்திக்கிறார். அவர்கள் கிறிஸ்து மறைவாக 1874 ஆம் ஆண்டு இப்பூமிக்கு வந்து விட்டார் என்று அவரை நம்ப வைத்தனர். பின்பு அவர்கள் இந்த திகதிகளை அனேக முறை மாற்றியும் இருக்கிரார்கள். (அதை நாம் இப்பொழுது பார்க்கப் போவதில்லை)
ரஸ்ஸெல், பார்பர் என்பவருடனான கருத்து வேருபாடு காரனமாக 1879 ஆம் ஆண்டு பிரிந்து சீயோனின் வாட்ச் டவர் மற்றும் யெஹோவாவின் ராஜ்யத்தை அரிவிக்கும் வாட்ச் டவர் ய்ன்ற மாத பத்திரிக்கியை இவரே துவங்கினார்.
2019 கணக்கெடுப்பின்படி 8.7 மில்லியன் ஜனங்கள் இந்த கள்ள கூட்டத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.
இவர்கள் கிரிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கையான திரித்துவ தேவனை நிராகரிக்கிரார்கள். கிறிஸ்து வணக்கத்திற்குரிய தேவன் அல்ல என்பதும், பரிசுத்த ஆவியானவர் ஆள்தத்துவமற்றவர் என்றும், நித்திய ஆக்கினைத்தீர்ப்பான நரகம் என்பதே இல்லை என்றும் சாதிப்பவர்கள்.
1. பிதா ஒருவரே கடவுள்:-
பழைய ஏற்ப்பாட்டில் நாம் அதிகம் பார்க்கும் யெஹேவா என்னும் பெயரில் பிதா மாத்திரம் அறியப்படுகிறார் என்றே இவர்கள் நம்புகிறார்கள்.
கிறிஸ்தவர்கள் பாரம்பரியமாக நம்பி வரும் திரித்துவ கொள்கையை நிராகரிக்கிரார்கள். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்ற தேவனின் மூன்று ஆள்தத்துவத்தை நம்புவது மூன்று தேவர்களை நம்புவதர்க்கு சமம் என்று இவர்கள் கருதுகிறார்கள்.
இவர்கள் திரித்துவத்தை நிராகரிக்கிரபடியால், இயேசு கிறிஸ்து கடவுல் அல்ல என்றும், அவர் உண்டாக்கப்பட்டவர் என்றும் இவர்கள் போதிக்கின்றனர். மிகாவேல் தூதனே இயேசுவாக தோன்றப்பட்டார் என்று கூருவர். மேலும் திரித்துவத்தில் ஒருவரான பரிசுத்த ஆவியானவர் ஒரு நபர் அல்ல, அது வெரும் தெய்வ சக்தி என்றும் கூருவர்.
2. நித்திய தண்டனை இல்லை:-
யெஹோவாவின் சாட்சிகள் (அ) வேத மாணாக்கர்கள் ஏதேன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் பாவம் செய்து வீழ்ந்த போது தேவன் கொடுத்த மரண தண்டனை சரீரத்திற்கு மாத்திரமானது என்று போதிக்கிறார்கள். ஆத்துமா சரீரத்தோடு மரிக்கும்போது அழிந்து விடுகிறது என்பது இவர்கள் போதனை. ஆத்துமா அழியாதயாதது, மற்றும் மனிதன் மரித்தபின் ஆக்கினைத்தீர்ப்பு இருக்கிறது என்பதையும் இவர்கள் நிராகைக்கிறாரகள்.
அப்படியானால் ஏன் பலர் இந்த தந்திரம்மான வஞ்சகர்களிடம் சிக்கிக்கொள்கிறார்கள்?
காரணம்: இவர்கள் புதிய உலக மொழிபெயர்ப்பு என்னும் வேதத்தை கையில் வைத்து உங்களிடம் பேசுவார்கள். அந்த மொழிபெயர்ப்பில் தங்களுக்கு சாதகமாக கிறிஸ்துவின் தெய்வீகத்தை நிரூபிக்கும் பல வசனங்களை இவர்களுக்கு சாதகமாக பிதாவைக்குரிப்பதாக திரித்து எழுதியிருப்பார்கள். ஆகவே பலர், வேத பாட வகுப்புகளை அலட்சியப்படுத்தியதாலும், அனுதின வேத வாசிப்பு இல்லாததாலும் இவர்களின் கண்ணிக்கு தப்ப முடியாதபடி மாட்டிக்கொள்கிறார்கள்.
தற்போதைய தகவல் படி, இவர்கள் இளம் வாலிப தம்பி, தங்கைகளை குறி வைக்கிறார்கள்.
இனி வரும் நாட்களில், இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மை, பரிசுத்த ஆவியானவரின் ஆள்தத்துவம், நித்திய ஆக்கினை போன்றவற்றை வேதத்தின் கண்ணோட்டத்தில் பார்ப்போம்.
(ஆண்ட்ரூ கிங்ஸ்லி ராஜ்)
கருத்துகள்
கருத்துரையிடுக