சுவிஷேசம் கட்டளையா? கடமையா?
சுவிஷேசம் அறிவிப்பது, மற்றவனை கிறிஸ்துவின் பாதையில் வழிநடத்துவது ஒவ்வொரு மெய் கிறிஸ்தவனின் கடமை. 1 கொரி 9:16
இயேசு கிறிஸ்து தமது சீஷர்களுக்கு சொல்லிப்போன மகா பெரிய கட்டளையும் அதுவே.
இயேசு: "நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிஷேசத்தைப் பிரசங்கியுங்கள்." மாற்கு 16:15
ரோம மெய்யியலாலரான சிசேரோ கடமை நான்கு மூலங்களில் இருந்து ஏற்படக்கூடும் என்று குறிப்பிடுகின்றார்.
அவை,
1. மனிதனாக இருப்பதன் விளைவாக
2. ஒருவன் தனது வாழ்வில் இருக்கும் இடத்தினால் (நாட்டு கட்டளைகள்)
3. ஒருவருடைய இயல்பின் காரணமாக
4. ஒருவருடைய ஒழுக்கம் சார்ந்த எதிர்பார்ப்புகளின் காரணமாக
அன்னாரது கூற்றிலிருந்து நான் சொல்ல வருவது,
ஒவ்வொரு கிறிஸ்தவனும் சுவிஷேசம் அறிவிக்க வேண்டும். காரணம்,
1. அவன் கிறிஸ்தவனாக இருப்பதன் விளைவாக
2. கிறிஸ்துவின் உடலில் அங்கத்தினனாக இருப்பதன் விளைவாக
3. கிறிஸ்துவின் சிந்தையை அணிந்ததன் விளைவாக
4. மற்றவனும் தன்னைப்போல அந்த அன்பை ருசித்து மனம் மாறுவதைக் காணும்படியாக
ஒரு கணவன் தன் மனைவிக்கு பிறந்த நாளிலோ (இதர நாளிலோ) பரிசளிக்கிறான் என்றால், அது யாரை பிரியப்படுத்த, மனைவியையா? தன்னையா? இரண்டும் தானே. மனைவியை மகிழ்சியாக பார்த்துக்கொள்வது கணவனின் கடமை மாத்திரம் அல்ல. அதுவே அவன் மகிழ்வாகவும் இருக்கும். அதுபோல, ஒரு கிறிஸ்தவனாக, நம் ஒவ்வொருவரின் கடமையும், பெரும் மகிழ்வும் சுவிஷேசம் அறிவிப்பதில் இருக்க வேண்டும்.
எனவே, சுவிஷேசம் அறிவிப்பது ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் கொடுக்கப்பட்ட பெரிய கட்டளை என்பதையும் தாண்டி நமது கடமையாக இருக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக