இயேசு வழிபாட்டிற்க்குறியவர்
முந்தைய பதிவில் யெஹோவா சாட்சியினரின் இரண்டாம் குழுவான வேத மாணாக்கர்கள் பற்றி பார்த்தோம். இந்த பதிவில் அவர்களுடைய குளப்பமான வாதங்களுக்கு வேதத்தின் மூலம் பதில் காணுவோம்.
முதலாவது இவர்கள் இயேசு கிறிஸ்து வணக்கத்திற்குரிய தேவன் அல்ல என்கிறார்கள். மிகாவேல் தூதன் மணிதனாக பிதாவினால் அனுப்பப்பட்டான் என்று சொல்கிறார்கள். இவர்களிடம் நீங்கள் யோவான் 1:1 (Jn 1:1) போன்ற வசனங்களை வைத்து இயேசு தேவன் என்று வேதம் சொல்கிறது என்று சொன்னால், பிதாவானவர் பழைய ஏற்ப்பாட்டில் மோசேயை பார்வோனுக்கு தேவனாக்கினார் என்பார்கள் (Exo 7:1 யாத்). ஏசாயா 9:6 (Isa 9:6) போன்ற வசங்களைக்காட்டினால், இயேசு வல்லமையுல்ல தேவன்; ஆனால் சர்வ வல்லமையுள்ள தேவன் அல்ல, ஆதலால் அவர் வணக்கத்திற்குறியவர் அல்ல என்பார்கள்.
இப்பொழுது ஒரு சில வசனங்கள் மூலம் இயேசு சர்வ வல்லமையுல்ல வணக்கத்திற்க்குறிய தேவன் என்பதைப் பார்ப்போம்
வணக்கத்திற்க்குறிய கர்த்தராகிய இயேசு:
1. கர்த்தரே வணக்கத்திற்க்குறியவர் - பழைய ஏற்ப்பாட்டு வசன ஆதாரங்கள்
Exodus 20:3 யாத்திராகமம் -> என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
Deuteronomy 6:13 உபாகமம் -> உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவருக்கே ஆராதனைசெய்து, அவருடைய நாமத்தைக்கொண்டே ஆணையிடுவாயாக.
அதேபோல வேதம் இயேசு கிறிஸ்துவை வணக்கத்திற்குறிய தேவன் என காட்டுகிறது. இயேசு கிறிஸ்து பழைய ஏற்ப்பாட்டை நன்கு அறிந்தவர். மேற்கூறிய வசனங்கள் அவர் அறிந்ததே. ஆகவேதான் அவர் பிசாசினால் சோதிக்கப்பட வணாந்திரத்திற்க்கு போகையில், சோதனைக்காரனான பிசாசுக்கு மருமொழியாக, "உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே” என்றார் (Luke 4:8 லூக்கா).
2. ஆராதனைக்குறியவர் கர்த்தர் மாத்திரம் என்று நன்கு அறிந்த சீஷர்கள்:
கொர்நேலியு இயேசு கிறிஸ்துவின் சீஷனான பேதுருவைப்பார்த்தவுடன் பணிந்துகொள்ளுகிறான். உடனே, கர்த்தரே தொழுகைக்குறியவர் என்பதை அறிந்த பேதுரு, தான் தொழுகைக்குறியவன் அல்ல என்கிறான்.
Acts 10:25-26 25 அப்போஸ்தலர் நடபடிகள்
25 பேதுரு உள்ளே பிரவேசிக்கிறபொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான். 26 பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனுஷன்தான் என்றான்.
3. கர்த்தரே ஆராதனைக்குறியவர் என்றறிந்த தேவ தூதன்:
இயேசு கிறிஸ்துவின் சீஷருள் ஒருவரான யோவான் தரிசனத்தில் ஒரு தூதனைக்கண்டு வணங்கும்படி பாதத்தில் விழுந்தான். உடனே கர்த்தரே ஆராதனைக்குறியவர் என அறிந்த தூதன், நான் ஒரு ஊழியக்காரன் தான். தேவனைத்தொழுதுகொள் என்றான்.
Rev 19:10 வெளி
அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார் உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.
4. நாம் ஆராதிக்கும் தேவனாகிய கர்த்தர் உண்டாக்காபட்டவர் அல்ல; உண்டாக்கியவர் என அறிந்த பவுல் அப்பொஸ்தலன்.
Romans 1:25 ரோமர்
தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.
5. ஆராதனையை ஏற்றுக்கொள்ளும் இயேசு கிறிஸ்து:
கர்த்தரே ஆராதனைக்குறியவர் என்பதை இயேசு கிறிஸ்துவோடு பயணித்த சீஷர்கள் அறிந்திருந்தார்கள், பரலோகத்தில் காணப்படும் தூதர்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே, எவனாகிலும் ஒருவன் தெரியாமல் தங்களை வழிபட குனிந்தால், உடனே அவர்களைத் தடுத்து தாங்கள் வெரும் மனிதன் (அ) ஊழியக்காரன் தான்; தேவனைத்தொழுதுகொள்-- என்று சொல்வதை கவனித்தோம். ஆனால், இயேசு கிறிஸ்துவை மனிதர்கள் பனிந்துகொள்ளும்போது, அதை அவர் தடுக்காதபடி, அந்த ஆராதனையை ஏற்றுக்கொள்ளுகிறார்.
Matthew 2:11 மத்தேயு -> அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் (இயேசு பாலனை) பணிந்துகொண்டு (worshiped), தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
Luke 24:52 லூக்கா -> அவர்கள் அவரைப் (இயேசுவைப்) பணிந்துகொண்டு (worshiped), மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பிவந்து,
John 9:38 யோவான் -> உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் (இயேசுவைப்) பணிந்துகொண்டான் (worshiped).
இந்த வசனங்களில் எல்லாம் இயேசு கிறிஸ்துவை மனிதர்கள் வழிபடுவதைப் பார்க்கிரோம். ஆனால், இயேசு கிறிஸ்து ஒரு இடத்திலேயும் தான் ஒரு மனிதன் தான் என்றோ, தான் ஒரு தூதன் தான் என்றொ சொல்லி அவர்களுடைய வழிபாடைத் தடுக்கவில்லை. மாறாக அந்த ஆராதனையை ஒரு இறைவனாக ஏற்றுக்கொள்வதைப் பார்க்கிறோம். இதுவே நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழிபாட்டிற்க்குரிய கடவுள் என்பதர்க்கு போதுமான சான்று.
இனி வரும் பதிவில், இயேசு கிறிஸ்து வெறும் வல்லமையுள்ள தேவன் அல்ல; அவர் சர்வ வல்லமையுல்ல தேவன் என்பதைப்பார்ப்போம்.
(ஆண்ட்ரூ கிங்ஸ்லி ராஜ்)
கருத்துகள்
கருத்துரையிடுக