சர்வ வல்லமையுள்ள இயேசு கிறிஸ்து

 யார் இந்த இயேசு? சர்வ வல்லமையுள்ளவர்

     இயேசு கிறிஸ்து மனிதனாக வந்த கடவுள் என்றே தொன்று தொட்டு கிறிஸ்தவர்கள் நாங்கள் நம்பி வருகிறோம்.

     இயேசு கிறிஸ்து கடவுள் அல்ல என மறுக்கும் வேத மாணாக்கர்கள் என்றறியப்படும் யெஹேவா சாட்சியினர், இயேசு வல்லமையுள்ள தேவன் (mighty God) என்று வேதம் சொல்லினும் சர்வ வல்லமையுள்ள தேவன் (almighty God) என்று வேதம் எந்த இடத்திலும் சொல்லவில்லை என ஒரு பொய்யான வாதத்தை வைக்கிறார்கள். இந்த வாதம் வேதம் வாசிக்கும் ஒருவரிடம் வைப்பின் நிமிடம் கூட தாக்குப்பிடிக்காது. 

     ஒரு கிறிஸ்தவணாக கடவுள் யார் என்பது பற்றியும், நான் யார் என்பது பற்றியும், எனக்கு கடவுள் என்ன செய்துயிறுக்கிறார் என்பது பற்றியும் வேதம் என்ன சொல்கிறதோ அதையே நம்புவேன். இந்த பதிவில் இயேசு சர்வ வல்லமையுள்ள தேவன் என்பதற்க்கான வேத ஆதாரங்களைப் பட்டியலிடுகிறேன்.

இயேசு கிறிஸ்து வல்லமையுள்ள தேவன் (mighty God) என ஏசாயா 9:6 இல் வாசிக்கிறோம். 

Isaiah 9:6 ஏசாயா -> நமக்கு ஒரு பாலகன் (இயேசு) பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோழின் மேல் இருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, >>வல்லமையுள்ள தேவன்,<< நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். 

     சரி, இங்கே வல்லமையுள்ள தேவன் என்று தானே உள்ளது. சர்வ வல்லமையுள்ள தேவன் என்றில்லையே. அப்படியென்றால் வேத மாணாக்கர்களின் வாதத்தின் படி இயேசு ஆராதனைக்குறிய தேவன் அல்லவே என்று நீங்கள் ஒருவேளை நினைக்கலாம்.  அதற்கான தெழிவான பதிலைக்கண்டரிய தொடர்ந்து இந்த பதிவை வாசியுங்கள்.

     அவர்களுடைய வாதத்தின்படி இயேசு கிறிஸ்து வெறும் வல்லமையுள்ள தேவன் என்றே வேதம் சொல்கிறது, சர்வ வல்லமை தேவன் என்று சொல்லவில்லை. ஆகவே அவர் ஆரதனைக்குறியவர் அல்ல எங்கிறார்களே. அதே வேதம் யெஹோவா என்னும் நாமம் உள்ள தேவனை வல்லமையுள்ள தேவனாக (mighty God) காட்டுகிறது. 

உதாரனமாக Isaiah 10:21 ஏசாயா -> "... வல்லமையுள்ள தேவனிடத்தில் திரும்புவார்கள்" , (mighty God)

Jeremiah 32:18 எரேமியா -> ஆயிரம் தலைமுறைகளுக்கு கிருபை செய்கிறவரும், பிதாக்களுடைய அக்கிரமத்தை அவர்களுடைய பின்னடியார் பிள்ளைகளின் மடியிலே சரிகட்டுகிறவருமாகிய சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள மகத்துவமும் >>வல்லமையுமுள்ள தேவனே<<" (mighty God)

Genesis 49:24 ஆதியாகமம் -> "... அவன் புயங்கள் >>யாக்கோபுடைய வல்லவருடைய<< கரங்கலால் பலத்தன..." (mighty God of Jacob)

Deuteronomy 7:21 உபாகமம் -> "... அவர் >>வல்லமையும் பயங்கரமுமான தேவன்<<" (mighty God and terrible)

Psalm 132:5 சங்கீதம் -> "கர்த்தருக்கு ஆணையிட்டு, >>யாக்கோபின் வல்லவருக்குப்<< பொருத்தனை பண்ணினான்." (mighty God)

 

     மேற்க்கூறிய அனைத்து வசங்களும் யாக்கோபின் தேவன் என்றறியப்படும் யெஹோவா தேவனை வல்லமையுள்ள தேவன் என்றே காட்சிப்படுத்திகிறது. ஆகவே, வேத மாணாக்கர்கள் என்றறியப்படும் வேத மாணாக்கர்கள் யெஹோவா தேவன் ஆராதனைக்குறியவர் அல்ல என்று சொல்லிவிடுவார்களா? அல்லவே. 

     யெஹோவா தேவன் சர்வ வல்லமையுள்ள தேவன் (almighty God) என பதிவு செய்கிற அதே வேதம் அவரை வல்லமையுள்ள தேவன் (mighty God) என்றும் பதிவு செய்கிறது. அது அவருடைய தெய்வீகத்தை எந்த வகையிலும் குறைப்பதன்று.

     மேலும் Isaiah 42:8 ஏசாயா இல் யெஹோவா தேவன் சொல்கிறார், "நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்."

     வல்லமையுள்ள யெஹோவா என்னும் நாம சங்கீர்த்தனமுள்ள தேவன், இயேசு கிறிஸ்து வல்லமையுல்ல தேவன் என்றே தனது வேதத்தில் வெளிப்படுத்துகிறார். ஆகவே பிதா ஆராதனைக்குப் பாத்திரராய் இருப்பதுபோல குமாரனும் ஆராதனைக்குறியவர். 

     கடைசியாக, ஒரு முக்கிய குறிப்பு, இயேசு வல்லமையுள்ள தேவன் என்று காட்டிய அதே வேத வசனம் "கர்த்ததுவம் அவர் தோழின்மேல் இருக்கும்" என தெழிவாக இயம்புகிறது. (Isaiah 9:6 ஏசாயா) 

     முடிவுரை: கர்த்தராகிய (சர்வ) வல்லமையுள்ள இயேசு கிறிஸ்து வழிபாட்டிற்க்குறிய தேவன்.



கருத்துகள்