நற்செய்தித் திருப்பணி இயக்கத்தின் சிறப்புப் பயிலரங்குகள்

     சகோதரர் பொன்.வ.கலைதாசன் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு கடந்த கால் நூற்றாண்டுகாலமாக இந்தியா முழுவதும் சுவிசேஷக் களப்பணி ஆற்றிவரும் நற்செய்தித் திருப்பணி இயக்கம் ( Gospel Outreach Mission) சபைப் பாகுபாடற்ற ஓர் அருட்பணி இயக்கமாகும்.

   நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பலதரப்பட்ட சபைகளுடனான எங்கள் கள அனுபவத்திலிருந்து நாங்கள் கற்றுக்கொண்டவற்றை சிறப்புப் பாடத்திட்டங்களாக்கி அவற்றைப் பயிற்றுவித்தும் வருகிறோம்.

நாங்கள் அளிக்கும் பயிற்சிகள்:- 

1. சீடத்துவப் பயிலரங்கு 
   Discipleship Workshop.
ஒரு சாதாரண கிறித்தவர், கிறித்துவின் வலிமைமிக்க சீடராகத் திகழ பயிற்றுவித்தல். (காலை முதல் மாலைவரை)

2. சுவிசேஷவியல் 
    Evangeneering.
இது சீடத்துவத்தின் இரண்டாம் நிலை. சீடரான ஒருவர், இன்னொருவரைச் சீடராக்கப் பயிற்றுவித்தல். (காலை முதல் மாலைவரை.)

3. சிறுவர் ஊழியப் பயிற்சி வகுப்பு
    Child Evangelism Training Class
சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடம் ஊழியம் செய்(ய விரும்பு)வோருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி. (காலை முதல் மாலைவரை.)

4. படைப்பு அறிவியல் கருத்தரங்கு 
    Creation Science Seminar
இறைமறுப்புக் கோட்பாட்டை கிறித்தவ நம்பிக்கையின் அறிவியல்பூர்வமான அடிப்படையில் எதிர்த்து படைப்பு அறிவியல் அறிஞர்களால் நிகழ்த்தப்படும் கிறித்தவத் தற்காப்பியல் சொற்பொழிவுகள்.
(அரைநாள் நிகழ்ச்சி. காலை - மதியம்.)

5. களம் 
    The Field
இது முற்றிலும் சுவிசேஷக் களப்பணியாளர்களுக்கானது. ஒரு களப்பணியாளரிடம் காணப்படவேண்டிய, மறையறிவு, அர்ப்பணிப்பு, விசுவாசம், களத்தில் அவர் சந்திக்கும் சிக்கல்கள் மற்றும் அவற்றிற்கான நடைமுறைத் தீர்வு பற்றிய வேதாகம அடிப்படையிலான கலந்துரையாடல். (அரைநாள் நிகழ்ச்சி. காலை - மதியம்.)

6. தமிழ்த் திண்ணை
அருளுரையாளர்களுக்கான தமிழ் மொழித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி. பேசுதல், எழுதுதல், உச்சரிப்பு, வாக்கிய அமைப்பு போன்றவை கற்பிக்கப்படும். 
தமிழில் மட்டும்!  (அரைநாள் நிகழ்ச்சி. காலை - மதியம்.)

7. குரலின் பொருள் 
    Meaning of Voice
சொல்லவரும் செய்தியைத் தெளிவாகவும் சுவையாகவும் எளிமையான முறையிலும் கூறுவதற்கான பயிற்சி. செய்தியின் கரு, வடிவம், நேரம், பாவனை, வேத ஆழம் உள்ளிட்டவற்றைப் பயிற்றுவித்தல்.
(அரைநாள் அல்லது முழுநாள்  நிகழ்ச்சியாக சூழலுக்கேற்ப நடத்தப்படும்.)

8. எழுத்தாளர் பயிலரங்கு
    The Writer's Workshop
இலக்கியப் படைப்பாக்கப் பயிற்சி.
எழுத்து, மொழிபெயர்ப்பு, வடிவமைப்பு மற்றும் வெளியீடு பற்றிய ஆலோசனை, பயிற்சி மற்றும் வழிகாட்டுதல். அடிப்படை நிலை [Basic level.] (அரைநாள் அல்லது முழுநாள்  நிகழ்ச்சியாக சூழலுக்கேற்ப நடத்தப்படும்.)

9. முன்னோடி 
The Pioneer
   தேவனுடைய ஊழியனின் அழைப்பு, உழைப்பு & பிழைப்பு பற்றிய தற்பரிசோதனைக்கும் புதிய (இடத்தில்) ஊழியம் / சபை தொடங்குவதற்குமான வழிகாட்டுதல். தனிநபரின் தேவ அழைப்பும் சபையின் அங்கீகாரமும் -  வேதபூர்வ ஆலோசனை. (அரைநாள் நிகழ்ச்சி. காலை - மதியம்.)

10. கனிதரும் குடும்பம் 
Fruitful Family
குடும்பமாக கர்த்தருடைய பணியில் ஈடுபடுதல் தொடர்பான வகுப்புகள்.
(அரைநாள் நிகழ்ச்சி. காலை - மதியம்.)

******

   20 ஆண்டுகால அனுபவம் மிக்க பயிற்சியாளர்களைக் கொண்டு ஞாயிறு தவிர பிற நாட்களில் உங்கள் இடத்திற்கே வந்து நடத்திக்கொடுக்கப்படும்

நிகழ்ச்சி எண் 4 ஐத் தவிர அனைத்தும் இலவசப் பயிற்சிகள்.

இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள கீழ்க்காணும்  எண்களில் தொடர்புகொள்க.

கிறிஸ்துவுக்குள்,
கிஷோர் குமார் (KK)
இயக்குநர்,
  
அழைக்க:
நற்செய்தித் திருப்பணி இயக்கம்
+91 9715 552 552

கருத்துகள்