இஸ்ரவேல் பற்றிய கேள்வி பதில்

அண்மை காலத்தில் கேட்கப்படும் பெரிய கேள்விகளுக்கு எனது சுருக்கமான பதில்கள்: 

1. யார் பாலஸ்தீனியர்கள்? 

பதில்: இன்றிருக்கும் பாலஸ்தீனியர்கள் உண்மையான பாலஸ்தீனியரகள் அல்ல. இவர்கள் இஸ்லாம் மதம் கிபி 6 ஆம் நூற்றாண்டில் பிறந்த பிறகு தற்போது சிரியா, ஜோர்டான், இஸ்ரேல், பாலஸ்தீனம், போன்ற பகுதியில் வாழ்ந்த, யூதர்கள் மற்றும் கிறித்தவர்கள் ரோமர்கள், கிரேக்கர்கள், சிரியர்கள், போன்ற அனைவரையும் படையெடுத்து வந்து அழித்து குடியேறிய கூட்டம். ஒரிஜினல் பாலஸ்தீனியர்கள் பெளிஸ்தியர் என்று அழைக்கப்பட்டவர். அவர்கள் இப்பொழுது இல்லை. 

2. இன்று இருக்கும் பாலஸ்தீனியர்கள் இந்த நிலத்தின் உண்மையான குடிகளா? 

பதில்: இல்லை. 

3. ஹமாஸ் தீவிரவாத இயக்கமா அல்லது புரட்சியாளர்கள் தானா?

பதில்: அதிகமான பொது மக்கள் கூடும் இடங்களாக இருக்கும் மசூதிகள், தேவ ஆலயங்கள், மருத்துவமனைகள் மற்றும் தியேட்டர்கள் ஆகிய இடங்களுக்கு கீழோ அல்லது நடுவிலோ தங்கள் தலைமை அலுவகங்களையும், ஆயுத கிடங்குகள் போன்றவற்றை வைத்திருப்பவர்கள் புரட்சியாளரா? தீவிரவாதிகளா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இராணுவ வீரர்களோடு யுத்தம் செய்வதை விட்டு விட்டு, பொதுமக்களையும், குழந்தைகளையும் கொல்லுபவர்கள் தீவிரவாதிகளா? புரட்சியாளர்களா? 

4. இஸ்ரவேல் காசாவை ஆக்கிரமிக்கிறதா? 

பதில்: 2006 முதல் காஸாவை இஸ்ரவேலர் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்கவில்லை. காசாவில் அரசாட்சி செய்பாவர்கள் ஹமாஸ் தான். இஸ்ரவேலர் அங்கு போய் குடியேற முடியாது. ஆனால், தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை இஸ்ரவேலர் தான் தருகின்றனர். பல தீவிர இடதுசாரி சிந்தனையாளர் மற்றும் தீவிர இஸ்லாமிய ஆதரவாளர்களும் இந்த உண்மையை மறைக்கின்றனர். 

5. இஸ்ரவேல் போர் செய்வது தவறா? 

பதில்: மனிதநேயத்தின் அடிப்படையில் தவறுதான். ஆனால் தேசம், மக்கள் நிலப்பரப்பு என்று வரும்போது எதிரியிடம் இருந்து தேசத்தை காத்தல், எதிரியை அழித்தல், எதிரியின் இருப்பிற்கான காரணிகளை அழித்தல் போன்ற நிலையில் என்ன சொல்ல முடியும்? 

6. பாலஸ்தீன பகுதியில் மக்கள் சாவதற்கு யார் காரணம்? 

பதில்: மக்களை மனித கேடயமாக பயன்படுத்தி மக்களை வெளியேற விடாமல் தடை செய்து தங்கள் சொந்த லாபத்திற்காக மக்களை சாகக்கொடுக்கும் ஹமாஸ் தான் பாலஸ்தீன மக்கள் சாவிற்கு காரணம். 

7. நான் போரை ஆதரிக்கிறேனா?

பதில்: இல்லை. எந்த விதத்திலும் நான் போரை ஆதரிக்கவில்லை. யதார்த்தத்தை நான் எனது பதில்களாக சொல்கிறேன். யூத வெறுப்பு காரணமாக பாலஸ்தீனத்தை ஆதரிப்பவர்கள் மற்றும் வெறும் மோடி வெறுப்பினால் பாலஸ்தீனத்தை ஆதரிப்பவர்கள், தீவிரவாதத்தை தான் ஆதரிக்கிறீர்கள் என்பதை மறந்து விட வேண்டாம். உள்ளூர் அரசியலில் மோடி எதிர்ப்பு என்பது வேறு, இஸ்ரேல் பாலஸ்தீனம் விஷயத்தில் வேறு.

சங்கீதம் 122 சொல்கிறது போல், எருசலேம் நகரத்தின் சமாதானத்திற்காக நான் ஜெபிக்கிறேன். 

நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நண்மையினாலே வெல்லு எனும் விவிலிய கூற்றை நான் விசுவாசிக்கிறேன்.

சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள் எனும் இயேசு மேசியாவின் கூற்றை கடைபிடிக்க முயலுகிறேன். 

ஷாலோம். உங்களுக்கு சமாதானம்.

உங்கள் ,
விவிலிய போதகர், இயன்முறை மருத்துவர் மற்றும் எழுத்தாளர்.
#israel #palestine #hamas

கருத்துகள்