நான் இரட்சிப்படைய வழி என்ன?
நீங்கள் பசியாய் இருக்கிரீர்களா? சரீரத்தில் அல்ல, உங்கள் ஆத்துமாவில் ஏதும் பசி இருப்பதை உணர்கிரீர்களா? உங்களுக்குள் ஏதோ திருப்தியடையா ஆழ்ந்த பசி இருக்கிரதா? அப்படியானால், இயேசுவே அதற்கு வழி. இயேசு சொன்னார், "ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாய் இருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்." (John 6:35 யோவான்)
நீங்கள் குளம்பி உள்ளீர்களா? உங்கள் வாழ்க்கைக்கான பதையை, வாழ்க்கைக்கான அர்த்தத்தை இன்னும் கண்டுபுடிக்கவில்லையா? மின் விளக்குகளையெல்லாம் யாரோ அனைத்தது போலவும் சுவிட்ச் எங்கே இருக்கிரது என்றே தெரியாமல் தேடி தவிக்கிரீர்களா? அப்படியானால், இயேசுவே உங்களைக் காப்பாற்ற (இரட்சிக்க) வழி. இயேசு சொன்னார், "நான் உலகத்திற்கு ஒளியாய் இருக்கிறேன். என்னை பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்." (John 8:12 யோவான்)
உங்களுடைய வாழ்க்கை பூட்டப்பட்டது போல் உணர்கிறீர்களா? பல கதவுகளைத் தேடி அழைந்தும், அதைத்திரந்து பார்க்கும்போது மறு பக்கும் வெற்றிடமாகவும் (வெறுமையாகவும்) அர்த்தமற்றதாகவும் உள்ளதா? அர்த்தமுள்ள ஒரு வாழ்வுக்கான நுழைவாயிலை தேடுகிரீர்களா? அப்படியானால், இயேசுவே மீட்புக்கான வழி! இயேசு சொன்னார், "நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று மேய்ச்சலைக் கண்டடைவான்." (John 10:9 யோவான்)
உங்களை மற்ற மனிதர்கள் கீலே தள்ளுகிறார்களா? உங்கள் உறவு வெறுமையாக, காலியாக உள்ளதா? உங்களை மற்றவர்கள் பயன்படுத்திவிட்டு தூகி எரிகிறார்களா? அப்படியானால், இயேசுவே உங்களை விடுவிக்க வழி! இயேசு சொன்னார், "நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக ஜீவனை கொடுக்கிறான்... நானே நல்ல மேய்ப்பன்... நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்கக என் ஜீவனையும் கொடுக்கிறேன்." (John 10:11,14 யோவான்)
வாழ்க்கைக்கு பின்னர் என்ன நடக்கும் என உங்களுக்கு தெரியவில்லையா? கெட்டு அழிந்துபோகிற நிரந்தரமில்லாத வாழ்க்கையை வெறுக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா என்ற அதிகமாக யோசிக்கிறீர்களா? நீங்கள் மரித்தபின்பும் (நித்தியமாக) வாழ விரும்புகிறீர்களா? என்றால், அதற்கு இயேசுவே வழி. இயேசு சொன்னார், "நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாக இருக்கிறேன், என்னை விருவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்." (John 11:25-26 யோவான்)
எது வழி? எது சத்தியம்? எது ஜீவன்? இயேசு சொன்னார், "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்திற்கு வரான்." (John 14:6 யோவான்)
உங்களுக்கு இருக்கும் பசி ஆத்தும பசி. அந்த பசியை ஆற்ற இயேசு கிறிஸ்துவால் மட்டுமே முடியும். அக காரிருளை மாற்ற வல்லவர் இயேசு ஒருவரே. திருப்தியான வாழ்க்கையின் கதவு இயேசு ஒருவரே. நீங்கள் தேடும் உற்ற நன்பனும், நல்ல மேப்பனுமாக இயேசு இருப்பார். இப்பூமியிலும், மறுபூமியிலும் இயேசு உங்களுக்கு வாழ்வாக இருப்பார். இயேசுவே உங்கள் மீட்பர் (இரட்சகர்).
நீங்கள் பசியாக இருப்பதற்கான காரணம், இருளில் நீங்கள் உங்களை தொலைத்துவிட்ட்டெர்கள். நீங்கள் கடவுலை மறந்து, அவரைவிட்டு விலகிச்சென்றதால், அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்கிறீர்கள். பரிசுத்த வேதம் சொல்கிறது, நாம் எல்லோரும் பாவம் செய்தபடியால், கடவுளை இழந்தோம். (Ecc 7:20 புலம்பல், Rom 3:23 ரோமர்). உங்கள் இருதயத்தில் காணப்படும் வெற்றிடம் கடவுள் உங்கள் வாழ்க்கையில் இல்லாததாலேயே. நம் பாவத்தினிமித்தமாக கடவுளுடனான உரவை இழந்தோம். நம் பாவமும், நித்தியமாக இம்மையிலும் மறுமையிலும் கடவுளை நாம் இழக்க காரணமாகிப்போனது. (Rom 6:23 ரோமர், John 3:36 யோவான்)
இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது? மீட்படைய (இரட்சிப்படைய) இயேசுவே வழி! நம் பாவத்தையெல்லாம் இயேசு தம் உடலில் சுமந்து ஏற்றுக்கொண்டார். (2 Cor 5:21 2 கொரி) நாம் சாகவேண்டிய இடத்தில் இயேசு மரித்தார். (Rom 5:8 ரோமர்) நமது தண்டனையை அவர் அனுபவித்தார். (Isa 53:5 ஏசா) மூன்றாம் நாள் நம் ஆண்டவர் இயேசு பாவத்தையும் மரணத்தை ஜெயித்து, உயிர்த்தெழுந்தார். (Rom 6:4-5 ரோமர்) இவைகளையெல்லாம் ஏன் செய்தார்? இயேசுவே அதற்கான பதிலை கூறினார்: "ஒருவன் தன் சினேகிதனுக்காக ஜீவனைக்கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவனிடத்திலுமில்லை." (John 15:13 யோவான்) இயேசு மரித்தது நாம் வாழ்வடையவே. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம் பாவங்களுக்காக மரித்தார், மரித்து பின் உயிர்த்தெழுந்தார் என்பதை சந்தேகமின்றி நம்பினால், உங்கள் பாவங்கள் அனைத்தும் சுத்தமாக கழுவப்பட்டு நீங்கள் புதிதாவீர்கள். பின் உங்கள் ஆத்தும பசி நீங்கியதை உணர்வீர்கள். வெளிச்சம் உதிக்கும். உன்மையான சந்தோசம் கிடைக்கும். அர்த்தமுள்ள வாழ்வை காண்பீர்கள். உங்கள் உற்ற தோழனும், நல்ல மேய்ப்பனுமாக இயேசு உங்கள் வலதுபுறம் இருப்பார். மரணத்தைக்குறித்த பயமில்லாத வாழ்வு கிடைக்கும். இன்று மரித்தாலும், அடுத்த வினாடி இங்கே மூடிய கண் பரலோகில் இயேசுவின் அருகில் திறக்கும் என்ற நிச்சயம் கிடைக்கும்.
"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்."
(John 3:16 யோவான்)
இதை வாசித்து, இயேசு கிறிஸ்துவை நம்ப தீர்மானம் எடுத்தீர்களா?
என்றால், எங்களுக்கு எழுதுங்கள். உங்களை நாங்கள் தொடர்புகொண்டு, நல்ல சபையின் விலாசத்தைக்கொடுத்து, இயேசு கிறிஸ்துவைப்பற்றி மேலும் உங்களுக்கு கற்றுக்கொடுப்போம்.
தொடர்புகொள்ள வேண்டிய மின்ன்ஞ்சல், andrewkingslyraj@yahoo.com
இன்ஸ்டாக்ராம்: @andrew_kingsly_raj
பேஸ்புக்: Andrew Kingsly Raj
கருத்துகள்
கருத்துரையிடுக