பரிசுத்த ஆவியானவரே !
சூரியன் ஒளியால் நிறைந்திருப்பதைப் போல,
சமுத்திரம் நீரால் நிறைந்திருப்பதைப் போல,
பரலோகம் மகிமையால் நிறைந்திருப்பதைப் போல,
என் இருதயம் உம்மால் நிறைந்திருக்கட்டும்.
என்னை மறுபடியும் ஜெநிப்பிக்கும் தேவனுடைய வல்லமையுள்ள கிரியை என்னில் நிகழ்ந்திராதிருந்தால்,
கிறிஸ்துவைப் பார்க்கும் கண்களை நீர் எனக்குத் தந்திராதிருந்தால்,
காணா உலகின் எதார்த்தங்களை நீர் எனக்குக் காண்பியாதிருந்தால்,
தெய்வீக அன்பின் அனைத்து நோக்கங்களும்
கிறிஸ்து செய்த மீட்பின் பணியும் வீணாக இருக்கும்.
தடையில்லா நீரூற்றைப் போல,
தீராத ஐஸ்வரியங்களைப் போல,
அளவில்லாமல் உம்மை எனக்கு அருளும்.
என் கடினத்தன்மை, வறுமை, வெறுமை,
குறைவான பார்வை, சோர்வுற்ற ஊழியம்,
ஜெபமற்ற ஜெபங்கள், துதியற்ற துதிகளை குறித்து நான் புலம்புகிறேன்.
நான் உம்மை துக்கப்படுத்தாமலும் எதிர்க்காமலும் இருக்கும்படி என்னை வருத்தும்.
ஒவ்வொரு எதிர்க்கும் இச்சையையும் வெளித்தள்ளவும்,
உச்சக்கட்டமாக என்னை நீர் ஆளுகை செய்யவும்,
என்னைப் பாதுகாக்கவும் - வல்லமையாய் வாரும்.
எல்லா சத்தியத்திற்குள்ளும் என்னை வழிநடத்தவும், எல்லாப் புரிதலால் என்னை நிரப்பவும் - ஆசானாய் வாரும்.
நான் பிதாவை வணங்கும்படியாகவும், என் எல்லாமுமாய் அவரில் அன்பு செலுத்தும்படியாகவும் - அன்பாய் வாரும்.
வேதத்தை வெளிச்சம் காட்டவும், அதின் பிரமானங்களில் என்னை வனையவும் - ஒளியாய் வாரும்.
சரீரம் ஆத்துமா உமக்கென்று முழுமையாக்க, பரிசுத்தப்படுத்துபவராய் வாரும்.
பலத்தோடு என்னை ஆசீர்வதித்துக் காக்கவும், என் ஒவ்வொரு நடையை இயக்கவும் தேற்றரவாளனாய் வாரும்.
ஒழுங்கின்மையில் இருந்து ஒழுங்கையும், குழப்பத்தில் இருந்து அருமையானவற்றையும் கொண்டுவர அழகுபடுத்துபவராய் வாரும்.
நீர் என்னில் பெரிதாகி, உமது மகிமையை எனக்குப் பெரிதாக்கி, உம் நறுமணத்தின் இனிய மணமாய் என்னை உருவாக்கும். ஆமென் !
The Valley of Vision (The Collection of Puritan Prayers and Devotions)
SPIRITUS SANCTUS
Translation: Collin
Tags:
Prayers of Puritans