கடவுள் மீது ஏங்குதல் - தூய்மைவாதிகளின் ஜெபம்
என் அன்பான தேவனே !
நான் உம்மைத் தவிர வேறொன்றிற்காகவும் ஏங்கவில்லை என்பதும்,
பரிசுத்தத்தைத் தவிர வேறொன்றிற்காகவும் ஏங்கவில்லை என்பதும்,
உமது சித்தத்தோடு ஒன்றிணைவதைத் தவிர வேறொன்றிற்காகவும் ஏங்கவில்லை என்பதும்,
உமக்குத் தெரியும் என்று என்னால் சொல்ல முடியும்.
நீர் இந்த விருப்பங்களை எனக்குக் கொடுத்திருக்கிறீர்,
மேலும் நீர் மட்டுமே விரும்பியதை எனக்குக் கொடுக்க முடியும்.
எனக்குள்ளேயே வாசம் செய்யும் பாவங்களை,
குறிப்பாக ஆவிக்குரிய பெருமையை அழிப்பதற்காக,
என் ஆத்துமா உம்மோடு ஐக்கியம் கொள்ள ஏங்குகிறது.
தெய்வீகத்தன்மை மற்றும் உண்மையான பரிசுத்தத்தின் மர்மத்தைக் குறித்த,
ஒரு மென்மையான உணர்வோடும், தெளிவான பயத்தோடும் இருப்பது எவ்வளவு விலைமதிப்பற்றது.
ஒரு உயிரினம் அதின் படைப்பாளரைப் போல் இருப்பது எவ்வளவு சாத்தியமோ,
அந்த அளவுக்கு உம்மைப் போல இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்.
ஆண்டவரே, உமது ரூபத்தை எனக்கு அதிகமாகத் தந்தருளும்;
பரிசுத்தத்தின் முழுமையைக் கொண்டிருக்கும்படி
என் ஆத்துமாவைப் பெரிதாக்கும்.
எனது ஆவிக்குரிய அனுபவங்கள் மற்றும் இனிமையான ஐக்கியங்களுக்குப் பிறகு,
நான் நிம்மதியாக உணரும் போது குறைவான திருப்தியுடன் இருக்க எனக்கு உதவும்.
எனக்குத் தெரிந்ததும் நான் செய்வதும் மிகக் குறைவு என்று எனக்குக் கற்றுக் கொடும்.
ஸ்தோத்தரிக்கப்படும் தேவனே !
நான் உமக்கருகில் ஏறி, அன்பு செய்து, ஏங்கி, மன்றாடி உம்முடன் மல்யுத்தம் செய்யட்டும்,
பாவ சரீரத்திலிருந்து விடுதலைக்காக துடிக்கட்டும்,
ஏனென்றால் என் இதயம் அலைந்து திரிகிறது, உயிரற்றதாய் இருக்கிறது,
என் ஆத்துமா என் நேசரை எப்போதாவது இழக்க நேரிடும் என்று நினைத்து வருந்துகிறது.
நான் நற்கிரியைகள் செய்வதற்கும், பாடுகளை அனுபவிப்பதற்கும் பொருத்தமானவனாக இருக்கும்படி,
தெய்வீக அன்பில் என் வாழ்வை போர்த்திக்கொள்ளும்,
என்னை எப்போதும் உம்மிடம் நேசம் வைக்கச் செய்யும்,
எப்பொழுதும் பணிவாகவும், உமது விருப்பத்திற்கு இணங்கவும்,
உம் மீது இன்னும் உறுதியாக இருக்கச் செய்யும்.
ஆமென் !
The Valley of Vision (The Collection of Puritan Prayers and Devotions)
LONGING AFTER GOD
Translation: Collin
கருத்துகள்
கருத்துரையிடுக