பாவத்தை வெறுக்கும் கடவுள் - வெளி 6
நேற்று யோவானுக்கு வெளிப்படுத்தின விஷேசம் 6ஆம் அதிகாரத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் ஏழு முத்திரைகள் பற்றிய விவரங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. கடவுளுக்கு பிடிக்காத, கடவுளுக்கு எதிரான, கடவுளை எரிச்சலூட்டுகிற, கடவுளை கோபமூட்டுகிற பாவத்தையும் அக்கிரமத்தையும் அநாயாசமாக செய்துகொண்டிருக்கிற மனுஷன் மேல் வர இருக்கும் தண்டனையின் தன்மையைப் பற்றி சிந்திக்க முடிந்தது. கடவுளைத் தேடுகிற உணர்வற்றவர்களாக, கடவுளைப் பற்றி துக்கமற்றவர்களாக, கடவுள் மேல் பயமற்றவர்களாக தங்கள் மனதும் மாமிசமும் விரும்பினவைகளை தாராளமாக செய்துகொண்டிருக்கிற மனுஷன் மேல் ஊற்றப்படயிருக்கும் அவரது கோப கலசம் எவ்வளவு பயங்கறமானது! பாவம் எவ்வளவு கொடியது என்பதைப் பாருங்கள். பாவத்தின் விளைவு எவ்வளவு கொடுமையாக இருக்கும் என்பதை பாருங்கள். பரிசுத்தத்தில் பயங்கரமான தேவனுக்கு எதிராக பாவம் செய்கிற நம் ஒவ்வொருவரும் இந்த கொடிதான தண்டனைக்கு பாத்திரவான்களாக இருந்தோம். ஆனால், நம்முடைய பிதாவானவர் ஏற்ற வேலையில் தம் குமாரனை இந்த பூமியில் அனுப்பி நீசர்களாகிய நம்மேல் ஊற்றப்படயிருந்த தேவனுடைய கோப கலசத்தை இவர் மீது ஊற்றி இப்படி மீட்பை ஏற்படுத்தினார். நம் ஒவ்வொருவர் மீதும் வர இருந்து மகா கொடிதான தண்டனையை கிறிஸ்துவானவர் தம்மீது ஏற்றுக்கொண்டார் (ஏசாயா 53:4). நம்மில் ஒரு நன்மையும் காணப்படாமல், தேவனுக்கு பகைஞர்களாக ஜீவித்துக்கொண்டிருந்த நமக்காக அவர் மரணத்தை ருசி பாத்தார். இந்த மகா அன்பை பெற்றுக்கொள்வதற்கு எந்த முகாந்தரமும் காணப்படாமலிருந்தபோது நம்மீது அன்பு கூர்ந்தார் (ரோமர் 5:8, 1 யோவான் 4:10). எவ்வளவு ஆச்சரியமான அன்பு! புத்துக்கெட்டாத அன்பு! கல்வாரி சிலுவையில் திரையிடப்பட்ட அன்பு. கலங்கின கண்களோடு என் வாசிப்பை நிருத்தினேன்.
"என்னும் நன்மை ஏதும்
என்னிலே இல்லையே
பின்னை ஏன் நேசித்தீர்?
என்னை என் பொன் நாதா" என்ற பாடல் வரிகள் தான் நினைவிற்கு வந்தது.
ஒருவேலை இதை வாசித்துக்கொண்டிருக்கிற நீங்கள் உங்கள் பாவத்தின் எடையை / பாரத்தை உணருவீர்கள் என்று சொன்னால், வர இருக்கும் மகா கொடிதான தண்டனையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று சொன்னால் கிறிஸ்துவிடம் வாருங்கள். காலந்தாழ்த்தி தேவனிடம் வர முடியாது. அங்கே பாவத்தின் மீது வெளிப்பட்ட தேவனுடைய கோபத்தைக் கண்டு மனிதன் அழருகிறான். "...பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு,16 பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்;" வெளி 6:16 உங்கள் மீதும் என் மீதும் வர இருந்து தேவ கோபத்தை பெரும் கண்மலையாக நடுவாக இருந்து தடுத்து, தம்மீது பெற்று நம்மை மீட்டிருக்கிறார். இலவசமாக கிருபையாக இம்மகா ஈடினையற்ற மீட்பை நமக்கு வளங்குகிறார். என்னால் என்னை காப்பாற்றிக்கொள்ள முடியாது என்பதை ஒத்துக்கொண்டு விரித்த வெறுங்கையோடு வருகிற ஒவ்வொறு பாவிக்கும் இந்த இலவசமான மீட்பைக் கொடுப்பேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறார் (யோவான் 6:37). இதோ, இப்பொழுதே அநுக்கிரக காலம், இப்பொழுதே இரட்சணிய நாள் (2 கொரி 6:2).
கருத்துகள்
கருத்துரையிடுக