"Expiation" மற்றும் "Propitiation" என்றால் என்ன?
Expiation: பாவ நிவிர்த்தி
Propitiation: சினம் தனித்தல் / கிருபாதார பலி / கோப நிவாரன பலி
பாவ நிவிர்த்தியின் மோசமான பக்கத்தைக்குறித்துப் பேசும்போது இரண்டு கலைச்சொற்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன. அவையாவன "Expiation" மற்றும் "Propitiation". குறிப்பிட்ட ஒரு கிரேக்க வார்த்தையை மொழிபெயர்க்க இவைகளில் எந்த வார்த்தை பொருத்தமுடையதாக இருக்கும் என்பது விவாதத்திற்குறியதாக இருந்து வருகிறது. சில வேத மொழிபெயர்ப்புகள் Expiation என்ற வார்த்தையையும், மற்ற சில வேத மொழிபெயர்ப்புகள் Propitiation என்ற வார்த்தையையும் பயன்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. "Expiation" மற்றும் "Propitiation" என்ற இவ்விரண்டு வார்த்தகளுக்குமான வித்தியாசம் என்ன என்பதை விளக்கப்படுத்தும்படி நான் அடிக்கடி கேட்கப்படுகிறேன். சிரமம் என்னவென்றால், இந்த இரண்டு வார்த்தைகள் பரிசுத்த வேதாகமத்தில் காணப்பட்டாலும், நம் அன்றாட வாழ்க்கையில் வலக்கொழிந்த சொற்களாக இருக்கின்றன. எனவே, வேதத்தில் இவை என்ன தொடர்புகொள்ள வருகின்றன என்பது நமக்கு தெரிவதில்லை. இந்த வார்த்தைகள் தொடர்பாக போதிய அளவில் குறிப்புகளும் நம்மிடம் இல்லை.
"Expiation" மற்றும் "Propitiation"
இனி, இந்த வார்த்தைகள் எதைக் குறிக்கின்றன என்பதைப் பற்றி பார்ப்போம். முதலில் "Expiation". "Expiation" என்ற வார்த்தையின் முதல் பகுதியான "Ex" - "வெளியே" அல்லது "இதிலிருந்து" என்று பொருள் தறக்கூடியதாக இருக்கிறது. எனவே, "Expiation" என்ற வார்த்தை எதையாவது அகற்றுவது அல்லது நீக்குவது என்று பொருள்படும். வேதாகமத்தின் அடிப்படையில், இது குற்றத்தை எடுத்துப்போடும்படியாக கொடுக்கப்படும் பலி அல்லது அவதாரம் செலுத்துதலோடு தொடர்புடையது. மாறாக, "Propitiation" என்பது "Expiation" னுடைய தாக்கத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது. "Pro" என்றால் "அதற்காக" என்று பொருள். ஆக, "Propitiation" என்பது தேவனுடைய குணத்தில் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. இதனால், நம்மேல் இருந்த கடவுளுடைய பகைமையிலிருந்து அவர் மாறுகிறார் (அ) சாந்தமடைகிறார். "Propitiation" என்ற உன்னத செயலின்மூலம் கடவுளுடன் இனக்கமான உறவையும் தயவையும் பெறுகிறோம்.
ஒரு வகையில் சொன்னால், "Propitiation" என்பது தேவனுடைய கோபத்தைத் தனித்து சமாதானப்படுத்துகிறது (அ) சாந்தப்படுத்துகிறது. இரானுவ மற்றும் அரசியல் மோதல்களில் "சமாதானம்" என்ற வார்த்தை எப்படியாக செயல்படுகிறது என்பது நமக்குப் பரீட்சயமானதே. ஆரவாரத்தோடு உலகைக்கைப்பற்றிக்கொண்டிருக்கும் ஒரு ராஜா தம் பெரும்படையோடு வரும் சூழலில் நீங்கள் செச்சோஸ்லோவேக்கியாவிலுள்ள சுடட்டென்லேண்டையோ அல்லது உங்கள் நாட்டில் உள்ள மற்ற பெரிய பகுதியையோ அவரிடம் ஒப்படைப்பீர்கள். அவருடைய கூர்மையான வாளுக்கு இரையாவதைப் பார்க்கிலும் இப்படி வெள்ளைக்கொடி காட்டுவீர்கள். அவருடைய கோபத்தைத் தனிக்கும்படி நீங்கள் எதையோ கொடுத்து இப்படி சமாதானத்தை ஏற்படுத்துவீர்கள். இது உலகத்தாரால் ஒருவரை சாந்தப்படுத்த செயல்படுத்தப்படுகிற ஒரு யுக்தி. நீங்கள் கோபமாக இருந்தாலோ, நான் ஏதோ என்றில் மீறினாலோ, நான் உங்கள் கோபத்தை தனித்தால், சமாதானப்படுத்தினால், நான் மீண்டும் தயவு பெற்று உங்களோடு ஒப்புறவாக முடியும். இப்படி ஒரு பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவரலாம்.
கிறிஸ்துவின் உன்னத சாதனை என்னவென்றால், அவர் நமக்கு எதிராக பற்றி எரிந்துகொண்டிருந்த கடவுளுடைய கோபத்தை தனித்தார். ஒரே கிரேக்க வார்த்தையானது, "Expiation" மற்றும் "Propitiation" என்ற இரண்டு வார்த்தைகளால் மொழிபெயர்க்கப்படுகிறது. ஆனால், இவ்விரண்டு வார்த்தைகளுக்குமிடையே சிறிய வித்தியாசம் உண்டு. "Expiation" என்பது நம்மீதாக இருந்த கடவுளுடைய மனநிலையை மாற்றுவதோடு தொடர்புடையது. இதைத்தான் கிறிஸ்து சிலுவையில் செய்தார். கிறிஸ்து சிலுவையில் செய்த "Expiation" என்ற செயலின்மூலம் "Propitiation" உண்டாகிறது - கடவுளுடைய கோபம் திருப்பப்பட்டது. பூமியில், ஒருவர் அவதாரத்தை செலுத்துவதும், அந்த அவதாரத்தைப் பெருவதுமான காரியத்தோடு மிக நெருங்கிய தொடர்புடையதாக சிலுவை காணப்படுகிறது.
கிறிஸ்துவின் செயல் சமாதானப்படுத்தும் செயல்:
"Expiation" மற்றும் "Propitiation" என்ற இரண்டு கிரியையின் கூட்டுத்தொகையாகவே சமாதானப்படுத்தும் செயல் காணப்படுகிறது. கிறிஸ்து சிலுவையில் செய்த அவருடைய செயலின்மூலம் கடவுளுடைய கோபத்தை சாந்தப்படுத்தினார். இப்படி கடவுளுடைய கோபத்தை சாந்தப்படுத்தும் கருத்து நவீன இறையியலாளர்களின் கோபத்திற்கு ஆளாகிறது. உன்மையில், கடவுளுடைய கோபத்தை தனிக்கும் இந்த முழு கருத்துக்கு எதிராக எரிச்சல் உள்ளவர்களாக, கோபம் உள்ளவர்களாகவே நவீன இறையியலாளர்கள் காணப்படுகிறார்கள். நாம் எதாவது செய்து கடவுளை சாந்தப்படுத்த வேண்டும் என்ற இந்த கருத்து கடவுளின் மரியாதையை கொச்சைப்படுத்துவதாக இருக்கிறது என்று நவீன இறையியலாளர்கள் நினைக்கிறார்கள். கடவுளுடைய கோபத்தைக் குறித்து புரிந்துகொள்வதில் நாம் மிகுந்த கவணம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். நான் இந்த இடத்தில் தெளிபடுத்த வேண்டும் என்று நினைப்பது, கடவுளை சாந்தப்படுத்துவது இறையியலில் வெறும் புறநிலையானதும் தொடுநிலையானதுமல்ல. இது இரட்சிப்பின் சாரமாக இருக்கிறது.
இரட்சிப்பு என்றால் என்ன?
ஒரு அடிப்படைக் கேள்வியைக் கேட்கிறேன்: இரட்சிப்பு (அ) மீட்பு என்ற பதம் எதைக் குறிக்கிறது? இதனை விரைவாக விளக்க முயல்வது தலைவலியை ஏற்படுத்தலாம். ஏனெனில், வேதத்தில் இரட்சிப்பு என்பது சுமார் எழுபது விதமாக யன்படுத்தப்பட்டுள்ளது. யாராவது குறிப்பிட்ட போரின் தோழ்வியிலிருந்து மீட்கப்பட்டால், அவர் இரட்சிப்பை அனுபவிக்கிறார். உயிருக்கு ஆபத்தான நோயிலிருந்து உயிர் பிழைத்தால், அந்த் நபர் இரட்சிப்பை அனுபவிக்கிறார். ஒருவரது செடிகள் வாடிப்போய்விடாமல் காப்பற்றப்படுவதும் இரட்சிப்பு தான். இவையெல்லாம் பரிசுத்த வேதாகம மொழி நடைதான். இருந்தபோது, இவை நம் சொந்த நடையிலிருந்து வேறுபட்டதல்ல. நாம் பணத்தை மீட்கிறோம். ஒரு குத்துச்சண்டை வீரர் அடிக்கப்படும் மணியால் இரட்சிக்கப்படுகிறார். அதாவது, அவர் நாக்-அவுட் மூலம் சண்டையின் தோல்வியிலிருந்து காப்பாற்றப்படுகிறார். அதற்காக அவர் கடவுளின் நித்திய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கிறார் என்று அர்த்தம் அல்ல. சுருக்கமாக சொன்னால், தெளிவாக, தற்போதைய ஆபத்துகளிலிருந்து மீட்கப்படும் எந்தவொறு அனுபவமும் இரட்சிப்பின் ஒரு வடிவமாக இருக்கிறது.
வேதாகம ரீதியில் இரட்சிப்பைக் குறித்துப் பேசும்போது, நாம் இறுதியில் எந்த நிலையிலிருந்து இரட்சிக்கப்படுகிறோம் என்பதைக் குறிப்பிடுவதில் கவணமாக இருக்க வேண்டும். அப்போஸ்தலராகிய பவுல் நமக்காக இதை சரியாக செய்கிறார். 1 தெச 1:10 இல் இயேசு "இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிறார்" என்று தெளிவு படுத்துகிறார். உட்சபட்சமாக, இயேசு மரித்தது நம்மை கடவுளுடைய கோபத்திலிருந்து தப்புவிக்கும்படியாகவே. இதைவிடுத்து, நாம் நாசரேத்தூராரான இயேசுவின் போதனையையும் பிரசங்கத்தையும் வெறுமனே புரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால், உலகம் முழுதும் தெய்வீக நியாயத்தீர்ப்புக்கு இரையாக வைக்கப்பட்டிருக்கிறது என்று அவர் தொடர்ந்து ஜனங்களை எச்சரித்தார். நியாயத்தீர்ப்பைக்குறித்த சில எச்சரிக்கைகள் பின்வருமாரு: "நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்." மத் 5:22; "மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." மத் 12:36; "யோனாவின் பிரசங்கத்தைக்கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதொ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்பின் நாளிலே நினிவே பட்டனத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்." மத் 12:41; இயேசுவின் இறையியல் நெருக்கடியின் இறையியல். நெருக்கடி என்பதன் கிரேக்க வார்த்தைக்கு நியாயத்தீர்ப்பு என்று பொருள். இயேசு பிரசிங்கித்த நெருக்கடியானது உலகில் வரவிருக்கும் நெருக்கடியான நியாயத்தீர்ப்பின் நாள் ஆகும். அந்த நாளில் கடவுள் இரட்சிக்கப்படாதவர்கள், துன்மார்க்கர், பாவத்தை உணர்ந்து மனந்திரும்பாதோர் மேல் தமது கடுங்கோபத்தை ஊற்றப்போகிறார். ஊற்றப்படப்போகிற அந்த கடவுளின் கடுங்கோபத்திலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரே வழி கிறிஸ்துவின் பலி மரணத்தினால் மூடப்படுவது மட்டுமே.
எனவே, சிலுவையில் கிறிஸ்துவின் உட்சபட்ச சாதனை கடவுளின் கோபத்திலிருந்து அவர் சமாதானப் படுத்திய செயல். ஒரு வேலை கிறிஸ்துன் பலி மரணத்தினால் மூடப்படாதவர்களாக இருந்திருப்போமென்றால், கடவுளின் கடுங்கோபத்திற்க்கு பங்காளிகளாயிருப்போம். எனவே, யாராவது சமாதானப்படுத்துவது என்ற கருத்துக்கு எதிராக பேசினால், அல்லது கிறிஸ்து கடவுளின் கோபத்தை சாந்தப்படுத்தினார் என்ற கருத்துக்கு எதிராக யாராவது பேசினால் கவனமாக இருங்கள். ஏனென்றால், சுவிஷேசம் ஆபத்தின் விளிம்பில் உள்ளது. இது இரட்சிப்பின் சாராம்சத்தைப் பற்றியது — கிறிஸ்துவின் பலி மரணத்தினால் மூடப்பட்டவர்களாக, எந்த ஒரு மனிதனும் உட்பட இருக்கின்ற ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டுகிறோம். கடுங்கோபமுள்ள ஒரு பரிசுத்த தேவனின் கரங்களில் விழுவது ஒரு பயங்கரமான விஷயம். ஆனால், பாவங்களுக்கான பிராயச்சித்தம் கட்டப்பட்டவர்களாக காணப்படுபவர்கள் மேல் கோபம் இல்லை. இதுவே இரட்ச்சிப்பு.
Source: LIGONIER MINISTRIES
Translator: Andrew Kingsly Raj