திருமனத்தில் நிபந்தனையற்ற காதல் - பால் வாஷர்
எல்லா நிபந்தனைகளையும் பூர்த்தி செய்த ஒருவரைத்தான் நீங்கள் திருமணம் செய்துகொள்வீர்கள் என்றால், எப்படி நிபந்தனையற்ற காதலை கற்றுக்கொள்வீர்கள்?
உங்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்காத ஒருவரைத்தான் நீங்கள் திருமணம் செய்துகொள்வீர்கள் என்றால், இரக்கம், சகிப்புத்தன்மை, நீடிய பொறுமை, இதயப்பூர்வமான பரிவு ஆகியவற்றை எப்படிக் கற்றுக்கொள்வது? உங்களுடன் ஒருபோதும் கடினமாக இல்லாதவர் யார்?
உங்களுக்கு எதிராக ஒருபோதும் தவறு செய்யாதவருடனோ, தங்கள் தவறை ஒப்புக்கொள்வதில் அல்லது மன்னிப்பு கேட்பதில் தாமதம் உள்ளோரையோ திருமனம் செய்யாமல் நீங்கள் எப்படி மன்னிப்பைக் கற்றுக்கொள்வீர்கள்?
எல்லா நல்ல விஷயங்களுக்கும் எப்போதும் தகுதியான ஒருவரை நீங்கள் திருமணம் செய்துகொண்டால், தகுதியற்ற ஒருவர்மீது தயவாக இருப்பது பற்றி எப்படி கற்றுக்கொள்வீர்கள்? நீங்கள் கிருபையைக் கற்றுக்கொள்வது எப்படி? இதை சிந்தித்துப் பார்க்கிறீர்களா?
திருமணத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால், உங்கள் திருமணத்தின் மூலம், நீங்கள் இருவரும் இயேசு கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக மாறுகிறீர்கள்.
பரிசுத்தமாகுதலின் மிகப்பெரிய கருவி திருமனம். நிபந்தனையற்ற காதலைக் கற்றுக்கொள்வதற்காக எல்லா நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யாத ஒருவரை நீங்கள் திருமணம் செய்துள்ளீர்கள். பரிவு தேவைப்படும் ஒருவரை நீங்கள் திருமணம் செய்து கொண்டீர்கள், அதனால் நீங்கள் அதைக் கொடுக்க கற்றுக்கொள்கிறீர்கள். தகுதியில்லாத ஒருவரை நீங்கள் திருமணம் செய்து கொண்டீர்கள், அதனால் சரியான முறையில் பதிலளிக்காத ஒரு நபர் மீது உங்களை அளவில்லாமல் ஊற்ற கற்றுக்கொள்ளுங்கள். இதனால் நீங்கள் நாம் ஆராதிக்கும் ஆண்டவரின் சாயலுக்கு ஒப்பாக மாறுகிறீர்கள்.
- பால் வாஷர்
(தமிழில் சற்றே மாற்றி)
கருத்துகள்
கருத்துரையிடுக