தேவனுக்காக (சேவை மற்றும் ஊழியம்) - தூய்மைவாதிகளின் ஜெபம்
சர்வ ஏகாதிபத்தியமுள்ள தேவனே,
எனக்காக அல்ல, உமக்காக என் இருதயம் துடிக்கிறது. சாத்தான் ஆளும் எல்லா இடங்களிலும் உமது ராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்பட பெரிய சுதந்தரத்தோடு உம்மிடம் முறையிடுகிறேன். உம்மை மகிமைப்படுத்தும்; நான் மகிழுவேன். ஏனெனில், உமது நாமத்திற்கு கனத்தை சேர்ப்பதே என்னுடைய முழுமுதல் வாஞ்சையாக இருக்கிறது.
நீரே தேவன் என்று உம்மை தொழுகிறேன். மற்றவர்களும் இந்த சத்தியத்தை அறிந்து, உம்மை உணர்ந்து, உம்மில் மகிழவேண்டும் என்று தீரா ஆசைகொள்கிறேன். ஓ, எல்லா மனிதர்களும் உம்மை நேசித்து, உம்மைத் துதிக்கிறவர்களாக இருந்தால் எப்படி இருக்கும்! இந்த நுண்ணறிவுள்ள உலகின்மூலம் எல்லா மகிமையும் உமக்கு உரித்தாவது எவ்வளவு இன்பமானதாக இருக்கும்!
உமது நாமத்தினிமித்தம் பாவிகள் உம்மண்டை கூட்டிச்சேர்க்கப் படுவார்களாக! என்னுடைய அறிவின்படி மற்றவர்களுடைய மனமாற்றம் நடு இரவின் இருளைப்போல் சாத்தியமற்றதாக தெரிகிறது. ஆனால், உம்மால் பெரிய காரியங்களை செய்ய முடியும். நீரே காரணர். நீர் மகிமைப்படும்படியாக மனிதர்கள் இரட்சிக்கப்படவேண்டும்.
ஆண்டவரே, நீர் விரும்புகிறபடி என்னை பயன்படுத்தும். உமது விருப்பத்தின்படி எனக்கு செய்யும். ஓ, நீர் உம்மை உயர்த்தும். உமது ராஜ்ஜியம் வருவதாக. உமது ஆசீர்வதிக்கப்பட்ட சித்தம் எந்த பூமியில் விருத்தியடைவதாக!
ஓ, நீர் இயேசுவுக்காக பெரிய எண்ணிக்கையை கொண்டுவருவீரோ! அந்த மகிமையான நாளை நான் காணட்டும். பெருங்கூட்டமான ஆத்துமாக்களை பிடிக்கிறவனாக மாற்றும். அதன் கடைத்தொகைக்காக நான் மரிக்கவும் துனியும்படிச் செய்யும். நான் உயிரோடிருக்கையில், என்னுடைய பெலத்தின் கடைசிமட்டும் நான் உமக்காக ஊழியம் செய்யட்டும். இந்த ஊழியத்தில் பெலத்திலும் பெலவீனத்திலும் நேரத்தை ஆதாயமாக நான் பயன்படுத்தவேண்டும். உமக்காகவும் உமது ராஜ்ஜியத்திற்காகவுமே நான் ஏங்குகிறேனேயன்றி எனக்காக அல்ல. ஓ, தேவரீர் என் வேண்டுதலுக்கு பதில் தாரும்.
கருத்துகள்
கருத்துரையிடுக