மார்டின் லூதர் - சிறிய அறிமுகம்
15ஆம் நூற்றாண்டின் கிறிஸ்தவ சீர்திருத்தத்தின் தந்தையான மார்டின் லூதர் அவர்களைப் பற்றிய சிறிய அறிமுகம்.
அது ரோமன் கத்தோலிக்க மதம் கிறிஸ்தவம் என்ற பெயரில் வேதத்திற்கு புறம்பான காரியங்களை துணிகரமாக நடப்பித்துக்கொண்டிருந்த காலம். தேவன் ஊதி மனிதர்களுக்குக் கொடுத்த தம் சட்ட புஸ்தகத்தை பொது மக்களிடம் கொண்டுபோகாமல் ஒழித்துவைத்து மனிதர்களுடைய பாரம்பரியங்களை கிறிஸ்தவத்திற்குள் திணித்துக்கொண்டிருந்த காலம். கடவுள் தரும் இலவசமான பாவ மன்னிப்பையும், இரட்சிப்பையும் காசுக்கு விற்ற தெய்வபயம் அற்ற மதவாதிகள் இருந்த காலம். அப்படிப்பட்ட காலத்தில் ஜூலை 17, 1505 அன்று மார்டின் லூதர் அவர்கள் இறையியல் கற்கும்படியாக அகஸ்தீனிய மடாலயத்திற்குச் சென்றார். அவருடைய பெற்றோர் அவ்வளவு எளிதாக மடாலயத்திற்கு அனுப்பிவிடவில்லை. அவர்கள் மகன் வேறு நல்ல துறையில் அதிகாரியாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். தேவன் ஒருநாள் தங்கள் மகனை பயன்படுத்தி தமது வார்த்தையை நிலைநாட்டுவார் என்பது அன்று அவர்களுக்கு தெரியாது. லூதர் தனது தீர்மானத்தில் உறுதியாக நின்று மடாலயத்திற்கு சென்றார். லூதர் இரட்சிப்பின் நிச்சயம் இன்றி தனது ஆத்துமாவைக் குறித்த பயத்தோடுதான் மடாலயத்திற்கு சென்றார். காரணம் ரோமன் கத்தோலிக்க மதம் தேவனுடைய நித்திய இரட்சிப்பின் சத்தியத்தை போதிக்கவில்லை. லாதர் தனது இரட்சிப்பின் நிச்சயமின்மையை தனது வாழ்க்கையில் இருந்த ஒரு பெரிய இன்னலாகவே பதிவிடுகிறார். இரட்சிப்பைக் குறித்த கவலையால் பலமணி நேரம் பக்தி காரியங்களில் ஈடுபடுவார். ஆனாலும் அது அவருக்கு உதவவில்லை. பலமணி நேரம் தனது பாவத்தை மடத்தில் உள்ள குருமாரிடம் அறிக்கை செய்துவந்தார். இவருடைய இந்த செயல்பாடுகளைப் பார்த்த அவருடைய வழிகாட்டியான ஒருவர் குருமார்களைத் தேடுவதை நிருத்தி கிறிஸ்துவின்மீது மாத்திரம் கவணம் செலுத்தும்படி அறிவுறை வழங்கினார். இந்த வார்த்தையானது பின்நாட்களில் அவருடைய மனந்திரும்புதலுக்கு காரணமாக விளங்கியது.
1510ஆம் ஆண்டு ரோமாபுரிக்கு புனித பயணம் செய்த லூதர் தேவனுடைய திருச்சபையில் அரங்கேரிய அவலத்தைப் பார்த்து மனம் கொதித்தார். 1511ஆம் ஆண்டு விட்டன்பர்கில் உள்ள மடாலயத்திற்கு மாற்றப்பட்ட லூதர் அங்கே இறையியலில் முனைவர் பட்டம் பெற்று அங்கே புதிதாக நிரூவப்பட்ட பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிய ஆரம்பித்தார். சங்கீத புஸ்தகங்களை விளக்கும்போது ரோமன் கத்தோலிக்க மதத்தைக் குறித்து விமர்சனம் செய்ய ஆரம்பித்தார். பின் அப்போஸ்தலனாகிய பவுல் ரோமாபுரியாருக்கு எழுதின நிரூபத்தை விளக்கும் போது கத்தோலிக்க மதத்தைக் குறித்த் அவருடைய விமர்சனம் வீரியம் பெற்றது (1515 மற்றும் 16களில்). வேத சத்தியங்களை கற்றுக்கொள்ளவும், சக இறையியலாளரோடு வாதிடவும் ஆரம்பித்தார். ஒரு மனிதன் நீதிமானாவது கிருபையினாலும், விசுவாசத்தின் மூலமாகவும், கிறிஸ்துவில் மாத்திரம் மட்டுமே என்பதை அறிந்துகொண்டார். அவருக்கு பலநாட்கள் போராட்டமாக இருந்த இரட்சிப்பின் நிச்சயத்தையும் சுவிசேஷத்தின் மூலம் பெற்றார். இது சபை வரலாற்றின் மிகப்பெரிய திருப்புமுனையாகவே அமைந்தது. கத்தோலிக்க மதத்தினால் பூட்டப்பட்டிருந்த வேதம் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தது. அநேகர் கர்த்தருடைய வேதத்தை தேடி வாசிக்க ஆரம்பித்தனர்.
அப்போஸ்தலனாகிய பவுல் ரோமாபுரியாருக்கு எழுதின நிருபத்தில் "தேவ நீதி"யைக் குறித்து எழுதுகிறார். ஆரம்பத்தில் இந்த பதத்தை லூதர் வெறுத்தார். ஏனென்றால், தேவன் நீதியான நியாயாதிபதியாக இருந்து அவருடைய ஜனத்தை அவர்களுடைய நீதியின் அடிப்படையில் நியாயந்தீர்ப்பார் என்று புரிந்து வைத்திருந்தார். ரோமன் கத்தோலிக்க திருச்சபை அப்படியே போதித்து வந்தது. இங்கே சிக்கல் என்னவென்றால், மனிதனுடைய நீதி எப்போதும் பரிசுத்த தேவனை திருப்தி படுத்த முடியாது என்பதை லூதர் நன்கு அறிந்திருந்தார். ஆகவே மிகவும் கவணத்தோடு வேதத்தை படிக்க ஆரம்பித்தார். பொதுவாக கத்தோலிக்க துரவிகள் வேதத்தை படிப்பதில்லை, வேதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதும் இல்லை. இப்படி வேதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதில் கடவுள் வெளிப்படுத்திய சத்தியத்திலிருந்துதான் தன் நம்பிக்கையை கட்டமைக்க வேண்டும் என்பதில் உருதியாயிருந்தார். வேதத்தை வாசிக்கும்போது அப். பவுல் உண்மையில் என்ன போதிக்கிறார் என்பதை லூதர் கண்டுகொண்டார். அதாவது 'நீதி என்பது தேவனுடைய கிருபையினால், கிறிஸ்துவின்மேல் வைக்கும் விசுவாசத்தின் மூலம் மட்டுமே கிடைக்கப்பெறுகிற இலவச பரிசு' என்பதை கண்டுகொண்டார். தேவன் எதிர்பார்ப்பது எதுவோ, அதை தேவன் கிறிஸ்து இயேசுவின் மூலம் கொடுக்கிறார். நீதிமானாகுதல் என்ற வேத சத்தியத்தை லூதர் கண்டுகொண்டது உண்மையில் அவருடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது என்றால் மிகையாகாது. கத்தோலிக்க துரவி சீர்திருத்தவாதியானார்.
அக்டோபர் 31, 1517 அன்று லூதர் தனது 95 ஆய்வறிக்கைகளின் பட்டியலை விட்டன்பர்கில் உள்ள ஆலயத்தில் அறைந்தார். இந்த ஆய்வறிக்கைகள் ரோமன் கத்தோலிக்கத்தில் இருந்த பாவமன்னிப்பு சீட்டு போன்ற மூட நம்பிக்கைகளை கடுமையாக விமர்சித்தது. கிருபை மாத்திரமே ஒரு மனிதனை நீதிமானாக்க முடியும் என்ற அடிப்படை சத்தியத்தை இந்த ஆய்வறிக்கைகள் பிரகடணம் செய்தது. லூதர் இந்த ஆய்வறிக்கைகளின் நகலை ஆர்ச் பிஷப்பான ஆல்பிரட்சுக்கு அனுப்பி பாவ மன்னிப்பை வியாபாரப்படுத்துவதை உடனடியாக நிறுத்தும்படி அறிவுறுத்தினார். ஆனால், ஆல்பிரட்ச் லூதரின் வைராக்கியத்தை மதிக்கவில்லை. இதைக் குறித்த செய்தி ரோமிற்கு சென்றது. லூதரின் 95 ஆய்வறிக்கையின் பட்டியல் போப்பின் அதிகாரத்தை தாக்குவதாகப் பார்த்தார்கள். 1518ஆம் ஆண்டு ஹைடல்பர்கில் நடந்த ஒரு கூடுகையில் லூதர் தனது நிலைபாட்டை நிலைநாட்டினார். இங்கே லூதர் முழங்கிய தெளிவான சத்தியம் இறையியல் புரட்சியைப் பற்றவைத்தது. இங்கே நடைபெற்ற விவாதம் தான் சிலுவையைப் பற்றிய சத்தியத்தை மீண்டும் வெளிக்கொண்டுவந்தது.
ஹைடல்பர்கில் லூதர் எடுத்தியம்பிய சத்தியத்தை மறுக்கும்படி போப்பின் அடுத்த அதிகாரியிடமிருந்து உத்தரவு வந்தது. ஆனால் லூதரோ "வேதமும் தெளிவான காரணமுமின்றி" தன் கருத்தை மறுப்பது முடியாது என்று கூறிவிட்டார். இது லூதரை ரோமன் கத்தோலிக்க சபையிலிருந்து வெளியேற்ற காரணமாக அமைந்தது.
இருப்பினும் லூதர் தளர்ந்துவிடவில்லை. 1519 முழுதும் அவர் தொடர்ந்து விட்டன்பர்கில் கற்ப்பித்து வந்தார். அவ்வாண்டு ஜூன்-ஜூலையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று மன்னிப்பைப் பற்றியும் போப்பைப் பற்றியும் ஆக்ரோஷமாக விமர்சனம் செய்தார். போப்பின் வேதத்திற்கெதிரான செயல்பாடுகளைப் பொருக்க முடியாத லூதர்
போப்பை "ஆண்டவருடைய திராட்சைத் தோட்டத்தில் இருக்கும் காட்டு பன்றி" என்று விமர்சித்தார். ஜூன் 15, 1520 அன்று லூதரை கத்தோலிக்க சபையிலிருந்து வெளியேற்றப்போவதாக போப்பிடமிருந்து பயமுறுத்தும்படியான கடிதம் வெளிவந்தது. அக்டோபர் 10ஆம் தேதி பெற்ற லூதர் இந்த கடிதத்தை டிசம்பர் 10ஆம் தேதி பொதுவெளியில் எரித்து அதன்மீதுள்ள வெறுப்பை காட்டினார்.
1521ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லூதரை சபையிலிருந்து துரத்துவதற்கான கடிதமும் வந்தது. பேரரசர் ஐந்தாம் சார்லஸ், லூதர் பக்க நியாயத்தை எடுத்துக்கூறும்படி அவருக்கு அழைப்பு விடுத்தார். அங்கேயும் லூதர் தன் எழுத்துகளை மறுக்கமாட்டேன் என்றார். ஆதலால் லூதர் தடை செய்யப்பட்ட நபரானார்.
இப்பொழுது லூதர் தேடப்படும் குற்றவாழியானார். அவரைக் கொல்வதற்கு துடியாக துடித்துக்கொண்டிருந்த ரோமன் கத்தோலிக்கர்களிடமிருந்து தப்பித்தது ஆச்சரியமே. வாஸ்ட்பர்க் கோட்டையில் 1522ஆம் ஆண்டு மே மாதம் வரை ஒழிந்துகொண்டிருந்தார். பின் பழையபடி சத்தியத்தை போதிக்க ஆரம்பித்தார். லூதர் தனது துரவு வாழ்க்கையைத் துரந்து கேத்தரினா வொன் போரா என்ற கத்தோலிக்க கண்ணியாஸ்திரியை மணந்தார்.
விட்டன்பர்க்கில் 1533 முதல் தனது மரணம் வரை (1546) இறையியல் ஆசிரியராக பணிபுரிந்தார். ஐஸ்லெபன் என்ற இடத்தில் பிப்பிரவரி 18, 1546 அன்று கர்த்தருக்குள் நித்திரையடந்தார்.
தனது வாழ்நாளில் கர்த்தருடைய சுவிஷேசத்திற்க்காக வைராக்கியமாக நின்ற இவரின் வாழ்க்கை இன்று பல கிறிஸ்தவர்களுக்கு ஆசீர்வாதமாக இருந்துவருகிறது. தேவனை மாத்திரமே உயர்த்தி, அவருடைய வார்த்தையே சகல அதிகாரம் நிறைந்தது என்பதை எடுத்துக்கூறி, வேதத்திலிருக்கும் சத்தியத்தையே திருச்சபை போதிக்கவும் கடைபிடிக்கவும் வேண்டும் என்று வலியுருத்திய மார்டின் லூதருக்கு இன்றை புராட்டஸ்டண்ட் திருச்சபைகள் மதிப்பளிக்காமல் புதிய வெளிப்பாடுகள் இன்னமும் உண்டு என்று தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் பெந்தேகோஸ்தே சபைகளைப் பார்த்தால் மனவேதனையாக இருக்கிறது. தேவன் கிருபையாக கொடுக்கும் இரட்சிப்பை மனிதனுடைய சாதனையாக போதிக்கும் இன்றைய புராட்டஸ்டண்ட் சபைகளைப் பார்த்தால் மனம் வேதனையாக இருக்கிறது. மனந்திரும்புங்கள். வேதத்தின் பக்கம் திரும்புங்கள். கிறிஸ்துவின் பக்கம் திரும்புங்கள். தேவனுடைய கிருபையை சார்ந்துகொள்ளுங்கள். அவர் மீது மாத்திரம் விசுவாசம் வையுங்கள். தேவன் ஒருவருக்கே மகிமையை செலுத்துங்கள். தொடரட்டும் சீர்திருத்தம் தேவ வார்த்தையை மட்டும் கொண்டு.

கருத்துகள்
கருத்துரையிடுக