திருச்சபை வரலாற்றில் இன்று,
16 அக்டோபர், 1555வொர்செஸ்டரில் உள்ள திருச்சபையில் பிஷப்பாக இருந்த ஹியு லேட்டிமர் மற்றும் நிக்கோலஸ் ரீட்லே ரோமன் கத்தோலிக்க மத குருமார்களால் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள பல்லியொல் கல்லூரியின் முன்பு உயிருடன் எரிக்கப்பட்டார்கள்.
இவர்கள் ரோமன் கத்தோலிக்கப் பாரம்பரியமான மதச்சடங்குகளை கேள்விகேட்டதோடு, இரட்சிப்பு இவ்வித எவ்வித கிரியையுனாலும் அடைந்துவிட முடியாது, அது கிறிஸ்துவின் பெயரில் வைக்கும் விசுவாசத்தினாலும், தேவ கிருபையினாலும் மாத்திரமே சாத்தியம் என்று வாதிட்டனர். மேலும் தாங்கள் எந்த திருச்சபைத் தலைவர்களின் எழுத்துகளையும், வேதத்தோடு ஒத்துப்போகாத பட்சத்தில் நம்புவது இல்லை என்று மத குருமார்கள்முன் தைரியமாக கூறினர். வேதம் மாத்திரமே அதிகாரமுடையது என முழங்கி சுவிசேஷப் போராளிகளாக விழங்கி இரத்த சாட்சியாக வீர மரணம் அடைந்த இவர்கள் நமக்கு ஒரு எடுத்துக்காட்டு. நாமும் இப்போதும் சுவிசேஷத்திற்க்காக இவர்களைப்போல் துணிவாக நிற்கவேண்டிய காலகட்டத்தில்தான் இருக்கிறோம் என்று மறந்துவிடவேண்டாம்.
லாட்டிமரின் கடைசி வார்த்தைகள்: "என்னுடைய இந்த மரணத்தின் மூலம் தேவனை மகிமைப்படுத்தும்படியாக இம்மட்டுமாக என்னை ஜீவனோடு காத்துவந்த தேவனுக்கு என் இதயத்திலிருந்து ஸ்தோத்திரம் செலுத்துகிறேன்."
"ரிட்லே, தைரியமாக இரு. மரணம் நேருடுகிறதேயாயினும் ஒரு தேவ தாசனாக தைரியமாக இந்த மரணத்தை எதிர்கொள். நாம் தேவனுடைய கிருபையால் இங்கிலாந்தில் இன்று ஏற்றப்போகிற இந்த வெளிச்சம் இனி என்றும் அனைக்கமுடியாத காட்டுத்தீயாக மாறும்."