சபை சரீதத்தில் இன்று (06/10/1536), அக்டோபர் திங்கள் 1536ஆம் ஆண்டு இதே நாளில் பரிசுத்த வேதாகமத்தை எல்லாரும் வாசித்து அறிந்துகொள்ளும்படியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த குற்றத்திற்காக ரோமன் கத்தோலிக்க மத வெறியர்கள் வில்லியம் டிண்டேலை கழுத்தை நெறித்து கொன்று அவர் உடலை நெருப்புக்கு இறையாக்கின அவலம் அரங்கேறியது.
டிண்டேல் வேதம் மக்களுக்கானது, அது ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளின் கைகளிலும் இருந்து வாசிக்கப்பட வேண்டும் என்ற அதிக உறுதிப்பாடோடு இருந்தார்.
டிண்டேல் அவர்களின் கடைசி வார்த்தை, *"ஆண்டவரே, இங்கிலாந்து இளவரசரின் கண்களைத் திறந்தருளும்."*
அவருடைய ஜெபத்திற்கு பதில் கிடைத்தது. டிண்டேலின் மரணத்தை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் இளவரசர் 8ஆம் ஹென்றி வேதத்தை அச்சில் ஏற்ற அனுமதித்தார்.
தேவன் இப்படிப்பட்ட வைராக்கிய வாஞ்சையுடைய தேவ பிள்ளைகளை எழுப்பியதால் தான் இன்று நாம் நம் சொந்த மொழிகளிலே வேதத்தை வாசிக்க முடிகிறது.
இரத்தக்கறை படிந்து உங்கள் கைகளில் கிடைக்கப்பெற்ற பரிசுத்த வேதத்தை தூசி படிய அலமாரியில் வைத்திருப்பது என்ன!
"நான் போப்பையும், அவரது சட்டங்களையும் எதிர்க்கிறேன். தேவன் என் உயிரை காப்பாற்றினால், சில ஆண்டுகளில் பயிர் விளைவிக்கும் ஒரு சிறுவனை, வேதத்தை அவர் அறிந்ததை விட அதிகமாக கற்றுக்கொள்ளச் செய்வேன்." - வில்லியம் டிண்டேல்