இயேசுவே யெஹோவா
ஆம், திரித்துவத்தில் இரண்டாம் நபராக அறியப்படுகற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து யெஹோவா என்னும் நாம சங்கீர்த்தனத்தைத் தாங்கியவர். ஆதாரங்களை இந்த வலைப்பதிவில் பார்ப்போம்.
நீங்கள் அறிந்திருக்கிறபடி, வேத மாணாக்கர்கள் என்று அறியப்படும் யெஹோவா சாட்சியினர் தமிழ்நாடெங்கும் கவர்ந்திலுக்கும் கிறிஸ்தவ தலைப்புகளில் தங்களின் கூடுகையை நடத்துகிரார்கள். அவர்களுடைய நயவஞ்சகமான உரையாடலில் வேதம் முறையாக அறியாத பல கிறிஸ்தவர்கள் சிக்கிக்கொள்வதைப் பார்க்க நேர்ந்தது. அவர்களுடைய குளப்பமான வாதங்கலுக்கு இந்த வலைதளத்தில் பதில்களைத்திரட்டி வந்தேன். அந்த வகையில் இன்று வேதம் காட்டும் யெஹோவா என்னும் பெயரை இயேசு கிறிஸ்து தாங்கியவராக இருக்கிறார் என்பதற்கான ஆதாரங்களை சேகரித்து இங்கே தர விரும்புகிறேன்.
யாத்திராகமம் 3 ஆம் அதிகாரத்தில் முட்செடியின் நடுவிலிருந்து பேசிய தேவனிடத்தில் உம்முடைய நாமம் என்ன என்று மோசே கேட்க 'இருக்கிறவராகவே இருக்கிறேன்' என்றார். தமிழ் வேதாகமத்தில் 'இருக்கிறவராகவே இருக்கிறேன்' என்று சரியாகவே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதன் மூல மொழியில் நாங்கு எழுத்துகளை தாங்கிய 'YHWH' என்றே உள்ளது. இந்த எபிரேய வார்த்தையின் விரிவாக்கமே (அ) வாசிக்கும் முறையே 'யாஹ்வே', ஆங்கிலத்தில் 'ஜெஹோவா', தமிழில் 'யெஹோவா'. 'YHWH' என்பதன் அர்த்தம் இருக்கிறவராகவே இருக்கிறேன் என்பதே.
கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசு கிறிஸ்து மெய்யாகவே கடவுள் என்று நம்புகிறோம். யாத்திராகமம் 3 ஆம் அதிகாரத்தில் நாம் பார்க்கும் யெஹோவா தேவன் இவரே. வேதம் Deu 6:4 உபாகமம் இல் தெளிவாக சொல்லுகிறது "இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்" என்று. ஆகவே நாம் ஆராதிக்கும் தேவன் ஒருவரே. ஆனால் கிறிஸ்தவர்களாகிய நாம் வேதம் சொல்லுகிறபடி அவர் மூன்று ஆள்தத்துவமுள்ளவராய் தம்மைக்காட்டுகிறபடி நம்புகிறோம். ஆம், சாதாரன மனித கன்னோட்டத்தில் பார்க்கும்பொழுது இது ஒரு புதிராகவே தொடர்கிறது. ஆனால், நாம் வேதம் என்ன சொல்லுகிறதோ அதை எவ்வித ஐயமுமின்றி நம்புகிறோம். மேலும் Psalm 2 சங்கீதம் ஆம் அதிகாரத்தில் இப்படியாக வாசிக்கிறோம் "கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம் பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி: அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கல் கயிறுகளை நம்மைவிட்டு எருந்துபோடுவோம் எங்கிறார்கள்.... இப்பொழுதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள். பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள். குமாரன் கோபம்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெறியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவாங்கள்." ஆகவே, தேவ குமாரன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கோபத்திற்க்க்குத்தப்ப ஒரே வழி, அவரை அண்டிக்கொண்டு, அவரையே தொழுது சேவிக்கவேண்டும்.
சரி, இனி இயேசு கிறிஸ்து எங்கு யெஹோவா என்ற நாமம் தனக்குறியது என்று சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்போம்.
Isa 48:12 ஏசாயா வசனத்தில் யெஹோவா தேவன் தன்னைப்பற்றி சொல்லும்போது "நான் முந்தினவரும், நான் பிந்தினவருமாமே" என்றார்.
இயேசு கிறிஸ்து Rev 1:17 வெளி வசனத்தில் மிகவும் அழுத்தமும் தெழிவுமாக, "...பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்" என்றார்.
இந்த வெளி 1:17 வசனத்தை சொன்னது இயேசு அல்ல, பிதாவானவர் என்று வேத மாணாக்கர்கள் என்றறியப்படும் யெஹோவா சாட்சியினர் மறுக்க முயற்ச்சிப்பர்கள். ஆனால், அதற்கடுத்த வசனமே அவர்களுடைய வாதங்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்கிவிடும். ஏனென்றால், Rev 1:18 வெளி வசனத்தில் "மரித்தேன், ஆனாலும், இதோ, சதாக்காலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமேன்;..." என்று தேவன் (இயேசு கிறிஸ்து) சொல்லுகிறார். பிதா ஒருக்காலும் மரிக்கவில்லையே. அபடியிருக்க, "மரித்தேன், ஆனாலும், இதோ, சதாக்காலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்;" என்று சொன்னவர் இயேசு கிறிஸ்துதான் என்பதில் சந்தேகமில்லை.
Isa 48:12 ஏசாயா இல் "நான் முந்தினவரும், நான் பிந்தினவருமாமே" என்று சொன்ன அதே யெஹோவா தேவனே Rev 1:17 வெளி இல் "நான் முந்தினவரும், பிந்தினவரும் உயிருள்ளவருமாயிருக்கிறேன்" என்கிறார். இவரே நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.
ஆக, கிறிஸ்தவர்களாகிய நாம் வாரந்தோரும் யெஹோவா என்று அறியப்பட்டவரும், இப்பூமிக்கு மனிதனாக பிறந்து வந்தவரும், நம் பாவங்களுக்காக சிலுவை மரத்தில் மிரித்தவரும், பின்பு உயிரோடு எழுந்தவரும், இன்றும் ஜீவிக்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவையே ஆராதிக்கிறோம்.
குறிப்பு: யெஹோவா என்னும் நாமம் பிதாவுக்கு மட்டும் உரியதன்று. தேவன் தமது ஜனங்களோடு உடன்படிக்கை செய்யும்போது, உடன்படிக்கையின் பெயராக தன்னை 'யெஹோவா' என்ற பெயரால் அறிமுகப்படுத்துகிறார்.
இன்னும் அடுக்கடுக்கான வேத ஆதாரங்கள் நமது வேதாகமத்தில் குவிந்துள்ளது. வரக்கூடிய பதிவுகளில் அவைகளைக்கான்போம்.
(ஆண்ட்ரூ கிங்ஸ்லி ராஜ்)
கருத்துகள்
கருத்துரையிடுக