திரித்துவம் || வேதம் || ஆதி சபை ஆலோசனைகள்
திரித்துவம் பிற மதக்கோட்பாடா? திருச்சபை வரலாரு என்ன? பார்க்கலாம்
திரித்துவம் என்ற கோட்பாட்டை முறைப்படுத்தி அதற்க்கான விளக்கம் நிசையா ஆலோசனை கூட்டத்தில் (கி.பி 325) கொடுக்கப்பட்டது. ஆகவே இது மனிதர்களால் உண்டான கோட்பாடு என்று மறுக்கிறார்கள் திரித்துவ மறுப்பாளர்கள். ஆனால், நிசையா ஆலோசனைக் கூட்டத்தின் காரனத்தையும், முக்கியத்துவத்தையும் நாம் அறுந்து கொள்வது அவசியம்.
ஆதி திருச்சபை காலத்தில் பல கள்ள உபதேசங்கள் சபைக்குள்ளாக பசுத்தோள் போர்த்திய ஓநாய்களால் தினிக்கப்பட்டன. இப்படிப்பட்டவர்கள் விசுவாசிகளோடு விசுவாசிகளாக கலந்து பின் இவர்களுடைய மாயமான போதனைகளை அரங்கேற்றினர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அப்போஸ்தலர்கள் சம்பந்தப்பட்ட சபைகளுக்குக் கடிதங்கள் எழுதி சரியான உபதேசத்தை நிலைனாட்டினர். மிக முக்கியமான ஆதி திருச்சபை இறையியளாலர்கள் இம்மாதிரியான தப்பறைகள் தங்கள் காலங்களில் வந்தபொழுது கிறிஸ்தவத்தில் இருந்து அவைகளைக் களைய எடுத்துக்கொண்ட முறையே ஆலோசனைக் கூட்டங்கள். இந்த கூட்டத்தில் தவறான போதனை செய்த மனிதர்கள் அழைக்கப்பட்டு கேள்விகள் முன்வைக்கப்படும். அவர்களின் உபதேசம் வேத ஆதாரமற்றது என நிரூபிக்கப்பட்டபின் சரியான கோட்பாடு வரையருக்கப்பட்டு பதிவு செய்யப்படும். மேலும் தவறான உபதேசத்தைப் பிரசங்கித்தவர்கள் சபையிலிருந்து ஒதுக்கிவைக்கப்படுவர்.
ஆதி திருச்சபைகாலத்தில் நிலவிய சில கள்ள உபதேசங்கள்
1. டாஸிடிஸம்
பரப்பியவர்: அந்தியோகியனாகிய செராப்பியன்
இவர்களின் கொள்கை:
இயேசு கிறிஸ்து மனிதனாக வரவில்லை. அவர் மனித உருவில் காணப்பட்டாலும் வின்னக (அல்லது) ஆத்தும உடலில் இருந்தார். ஆகவேதான் அவர் உயிர்த்தெழுந்தது போல் தோன்றினார். அவர் மனித உடலில் இல்லமையால் உயிர்த்தழுதலையும், பரமேறுதலையும் மருக்கிறோம்.
(நாஸ்டிஸிஸம் என்ற தப்பறை கொள்கையோடு முகவும் ஒத்துப்போனது)
இதற்க்கெதிராய் குரல் கொடுத்தவர்: அந்தியோகியராகிய இக்நேஸியஸ் (கி.பி. 37-107)
2. மொண்டானிஸம்
பரப்பியவர்: மொண்டானஸ்
இவர்களின் கொள்கை: இரண்டாம் நூற்றாண்டில் மைனர் ஏசியாவில் வாழ்ந்த மொண்டானஸ் பரிசுத்த ஆவியானவர் தன்னிடமும், தன் பக்தர்களிடமும் மட்டும் இருப்பதாகவும், மேலும் வேதத்தைத்தாண்டிய புதிய வெளிப்பாடுகள் தங்களுக்கு கிடைப்பதாகவும் கூறினர். மொண்டானஸ் தன்னைத்தான் தீர்க்கதரிசி என அழைத்துக்கொண்டார்.
3. ஏரியனிஸம்:
பரப்பியவர்: அலக்ஸாந்தியனாகிய ஏரியஸ்
கொள்கை: இயேசு எப்போதும் இருந்ததில்லை. அவர் இல்லாத காலமும் உண்டு, இயேசு படைக்கப்பட்டவர்.
எதிர்ப்பு: நிசையா அலோசனைக்கூட்டம்
4. நெஸ்டோரியனிஸம்:
பரப்பியவர்: நெஸ்டோரியஸ்
கொள்கை: இயேசுவின் தெய்வீகத்தன்மையும் மனிதத்தன்மையும் ஒன்றற தமது சித்தத்தினாலேயே கலந்துள்ளது. தெய்வீகத்தன்மையும் மனதத்தன்மையும் உன்மையாக அவரிடம் காணப்படவில்லை.
எதிர்ப்புகள்: எபேசு ஆலோசனைக்கூட்டம் கி.பி 431, சால்ஸிடோனியன் ஆலோசனைக்கூட்டம் கி.பி 451
5. மோனோஃபிஸ்டிஸம்:
கொள்கை: இயேசு ஒரு நேரத்தில் தெய்வீகத்தன்மை அல்லது மனிதத்தன்மை ஏதோ ஒன்றைத்தான் தாங்கினார். ஒரே நேரத்தில் இரு தன்மையும் உடையவராய் உன்மையாக தெய்வமாகவும், உன்மையாக மனிதனாகவும் அவர் இருக்கவில்லை.
எதிர்ப்பு: சால்ஸிடோனியன் ஆலோசனைக்கூட்டம் கி.பி 451
6. மோடலிஸம்:
கொள்கை: பிதா, குமாரன், பரிசுத்த ஆவி இவைகள் கடவுளின் முப்பரிமான கோனங்களை (அ) தன்மைகளைக்காட்டுகிறதே தவிற மூன்று நபர்களாக இருக்கவில்லை.
எதிர்ப்பு: அத்தானேஸிய விசுவாச பிரமாணம்
7. பெலேஜியனிஸம்:
பரப்பியவர்: பெலேஜியஸ்
கொள்கை: ஜென்ம பாவம் மனிதனை ஆட்கொண்டுள்ளது என்ற வேத சத்தியத்தை நிராகரித்தனர். மேலும் மனிதன் தன் சுய சித்தத்தின் மூலம் பாவமற்ற வாழ்வு வாழும் பெலன் உள்ளவனாய் இருக்கிறான் என்று கருதினர். மேலும் மனிதன் பரிசுத்தமாக வாழ்வதன் மூலமாகவே இரட்சிப்பை அடைய முடியும் என்று நம்பினர்.
எதிர்ப்பு: ஆரஞ்ச் ஆலோசனைக்கூட்டம் (கி.பி. 529), சீர்திருத்த இயக்கங்கள் (லூதரனிஸம், கால்வினிஸம்)
இப்படிப்பட்ட இக்கட்டான காலகட்டங்களில் சபையின் சத்தியத்தை தொடர்ந்து கள்ள போதனைகளிடமிருந்து காப்பாற்றவே பல ஆலோசனைக்கூட்டங்கள் நடத்தப்பட்டு, வேதத்திற்க்கு எதிரான கருத்துகளை சபையை விட்டு நீக்கி வைத்தனர்.
இந்த பதிவின் மூலம் ஆலோசனைக்கூட்டத்தின் முக்கியத்துவத்தையும், விசுவாச பிரமானத்தின் முக்கியத்துவத்தையும் பற்றி புரியும்படி சுருக்கமாக எழுதியிருக்கிறேன் என நம்புகிறேன். இந்த பதிவில் பார்த்த கள்ள போதனைகளின் தாக்கம் இன்று சில பிராட்டஸ்டன்ட் சபைகளிலும் பார்க்க முடிகிறது என்பது வேதனை. இந்த ஆலோசனிக்கூட்டங்களின் முடிவுகள் வேத ஆதாரத்தோடே எடுக்கப்பட்டது என்பதை பின்னர் என்னால் கூடியமட்டும் பதிவிட முயற்சிக்கிறேன். திரித்துவம் வேதபூர்வமானது என்னும் பதிவில் உங்களை சந்திக்கிறேன்.
இவைகளை நீங்கள் படிக்க விரும்பினால் "கிறிஸ்தவ திருச்சபைகளின் விசுவாச அறிக்கைகள்" என்ற புத்தகத்தை தமிழில் வாங்கிப்படியுங்கள். இந்த புத்தகத்தைப்பிரசூரிப்போர், கிருபை வெளியீடுகள், மதுரை - 625 016, தமிழ்நாடு, இந்தியா.
வலைதளம்: www.gracegospelchurches.org
(ஆண்ட்ரூ கிங்ஸ்லி ராஜ்)

கருத்துகள்
கருத்துரையிடுக