யார் பியூரிட்டன்கள் (அ) தூய்மைவாதிகள்?

   16, 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் திருச்சபை சீர்திருத்ததிற்கு தங்கள் எழுத்துகளின் மூலம் அலப்பரிய பங்காற்றியவர்களை தூய்மை வாதிகள் என்கிறோம் (ஆங்கிலம்: பியூரிடன்ஸ்). இவர்களின் சிந்தனைகள் அறிவொளி யுகத்தில் வாழ்ந்த யதார்த்தமான மக்களின் அறிவு, சிந்தனையோடு தொடர்புடையது. மக்கள் கடவுளைப்பற்றி உயரிய நம்பிக்கை கொண்டனர். வேதபுத்தகத்தை சாமானியன் படிக்கக்கூடாதென தடுத்துவைத்திருந்த வெள்ளையங்கியனிந்த கத்தோலிக்க குருமார்களிடமிருந்து சபை விடுதலையடைந்து, தனது விசுவாசத்தை கலாச்சார பாரம்பரியங்களிலிருந்து வேருபடுத்தி, வேத புத்தகத்தினை உயர தூக்கி பிடித்து, அதன் அடிப்படையிலேயே தனது விசுவாசத்தை அமைத்துக்கொண்டது. ஆம், மக்கள் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டதாலும், வேதம் சாமானிய மக்களை சென்றடைந்ததாலும், மக்கள் வேத புத்தகத்தை ஆர்வத்தோடு வாசிக்கத்தொடங்கினர். அன்று நிறுவப்பட்ட அனைத்து சபைகளும் வேத வாசிப்பை வலுவாக ஊக்கப்படுத்தியது. சில பியூரிட்டன்கள அனாபாப்டிஸ்டுடனும், சில பியூரிட்டன்கள் இங்கிலாந்து சபையுடனும் இனைந்து கலப்பணியாற்றினர். தூய்மைவாதிகள் (பியூரிட்டன்ஸ்) என்ற வார்த்தை முதன்முதலில் 1560களில் கிறிஸ்தவ வழிபாடு மற்றும் கோட்பாடுகளில் (வேதத்தின் அடிப்படையிலான) தூய்மையை விரும்பியவர்களுக்கு கிண்டலாக கொடுக்கப்பட்ட பட்ட பெயர்.

   அமேரிக்கர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஆங்கில தூய்மைவாதிகள், ஆங்கில சீர்திருத்தம் போதுமான அளவு சரியானதாக இல்லை எனவும், ரோமன் கத்தோலிக்கத்தில் உள்ளது போன்ற குருத்துவ படிநிலை தலைமை, குரு உடை, ஒரு சில சடங்குகள் போன்றவற்றை முழுவதும் களையாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு வைத்தனர். பல பியூரிட்டன்கள் தங்களை சபை பிரிவுகளுக்குள் அடங்கியிருந்தால் கிறிஸ்தவத்தில் மறுமலர்ச்சியை கொண்டுவர முடியுமா என்ற கேள்வியோடு இர்ந்தனர். ஆனால் பெரும்பாலானோர், சபையின் உள்ளிருந்து தங்கள் எழுத்துகளினாலும், போதனைகளாலும் கிறிஸ்தவ மறுமலர்ச்சியைக் கொண்டுவர முடியும் என்று அசையா நம்பிக்கை கொண்டனர். வேதாகமத்தின்மீது உயர்ந்த பார்வையை வைத்தனர். வேதம் சொல்லாத (கத்தோலிக்க) சடங்குகளை, பாரம்பரியத்தை அறவே ஒழித்தனர். கத்தோலிக்க நம்பிக்கையான பாதர், பிக்ஷப், போப் போன்ற மனித மத்தியஸ்தர்கள் எந்த ஒரு மனிதனுக்கும் தேவையில்லை என்றும், மனிதன் கடவுளை தரிசிக்க ஒரே மத்தியஸ்தர் மனிதனாக வந்த தெய்வம் இயேசு கிறிஸ்து மாத்திரமே என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்து ஜனங்களை பாரம்பரிய கத்தோலிக்க சபையிலிருந்து விடுதலையடையச் செய்தனர் (1 தீமோ 2:5). ஆரம்ப கால பியூரிட்டன்கள் தோற்றுவித்த சபையே அமேரிக்க மாகானத்தில் இன்று நாம் காணும் காங்க்ரிகேக்ஷனல் சர்ச். சபை ஆட்சி, சடங்குகளை பியூரிட்டன்கள் அறவே வெறுத்தாலும், சபை ஆட்சி மற்றும் ஒரு சில சடங்குகளை கடைபிடிக்கும் இன்றைய சபை போதகர்கள் கூட பியூரிட்டன்களின் போதனைகளை ஒரு சில கோட்பாடுகளில் மாற்று நம்பிக்கை இருந்தாலும்) வாசிப்பதை உற்சாகப்படுத்துகிறார்கள்.

   பியூரிட்டன்கள், அவர்கள் வாழ்ந்த காலத்தில் உலக ஆட்சியில் அமர்ந்த அரசர்களாலும், திருச்சபையில் அதிகாரம் படைத்தவர்களாலும் அதிகமான மதிப்பையும் பாதுகாப்பையும் பெற்றனர். அநேக நேரங்களில் அதிகாரிகளால் வெருப்புடன் பொறுத்துக்கொள்ளப்பட்டனர். மற்ற சமையங்களில் பல துன்பங்களையும் கிறிஸ்துவினிமித்தமாக பெற்றுக்கொண்டனர். இங்கிலாந்தின் அரசர் சார்லஸ் 1,இங்கிலாந்திலிருந்து அனைத்து பியூரிட்டன்களையும் அப்புறப்படுத்த விரும்பினார். இதன் காரணமாக பல பியூரிட்டன்கள் ஐரோப்பிய மற்றும் அமேரிக்க நாடுகளுக்கு குடி பெயர்ந்து சென்றனர். மாசச்சூசெட்டு விரிகுடாக் குடியேற்றம் போன்ற இடங்களில் வசித்த பிரிவினைவாத பியூரிட்டன்கள் இங்கிலாந்து மற்றும் ஹோலந்து பகுதிகளிலிருந்து துரத்தியடிக்கப்பட்டனர்.

   அமேரிக்கா மற்றும் கிரேட் ப்ரிட்டன் அது சுவாசிக்கும் சுதந்திரத்திற்க்காக பியூரிட்டன்களுக்கு மிகவும் கடன்பட்டுள்ளது. ராஜாக்களின் ”டிவைன் ரைட்" என்ற தத்துவம் சாமானியனுக்கு மத நம்பிக்கைக்கான சுதந்திரத்தைக் கொடுத்தது. "யாங்கீ வொர்க் எதிக்" என்ற வாக்கியம் மனிதனுடைய எந்த வேலையும் கடவுளின் அனுமதியுடன் இருக்கவேண்டும் என வழியுருத்தியது. பியூரிட்டன்கள் முதன்முதலில் ராக்ஸ்புரியில் 1635ல் பள்ளியும், ஹார்வர்டில் கல்லூரியும் 1639ல் அமைத்து சாமானியனும் முறையான வேத ஆராய்ச்சி படிப்புகளைப் பெற வழிவகை செய்தனர். பியூரிட்டன்களின் தெய்வபயமுள்ள வாழ்க்கையே ஒன்றிய நாடுகளின் ஒழுக்க சட்டங்களுக்கு வழி கொடுத்தது. ஜனநாயக குடியரசின் காரண கர்த்தா பியூரிட்டன்களே என 1830களில் அமேரிக்காவில் படித்த அலக்ஸ் டே டோக்குவில்லே அறிவித்தார்.

   ஜோன் பன்யன் (மோட்ச யாத்திரை), ஜோன் விந்த்ரொப் (செய்தி: மலையின் மீதுள்ள பட்டணம்), ஜோனத்தான் எட்வர்ட்ஸ் (கோபமுள்ள தேவனின் கரத்தில் பாவிகள்), தாமஸ் குட்வின் (கிறிஸ்துவின் இதயம்), ஜோஸப் அல்லின் (மனமாற்றம் அடையாதோர்க்கு எச்சரிக்கை), ராபர்ட் பிரவுன், ஸ்டீபன் கார்னோக் (தேவனின் இருத்தலும், குணமும்), ஜோன் பிலேவல் (பராமரிப்பின் விந்தை), ஜோன் ஓவன் (பாவத்தைக் கொல்லுதல்), மேத்யூ பூல் (வேத விளக்கவுரை), மேத்யூ ஹென்றி (வேத விளக்கவுரை), காட்டன் மாதெர், ஜோன் பாக்ஸ் (பாக்ஸின் இரத்தசாட்சிகளின் புத்தகம்) போன்றோர் மிக பிரபல்யமான பியூரிட்டன்களுல் ஒரு சிலர்.

கருத்துகள்