கேள்வி: அன்று நடைபெற்ற பலத்த அற்புத அடையாளங்கள் இன்று ஏன் செய்துகாட்டப்படுவதில்லை?

எனது சிறிய பதில்:-

 அற்புத அடையாளங்கள் ஆதியில் (அதாவது முதல் நூற்றாண்டில்) பன்னிரு அப்போஸ்தலர்களால் செய்யப்பட்டது. ஒவ்வொரு முறையும் ஆண்டவர் மனிதனோடு இடைபடும்போதும், அற்புத அடையாளங்களை செய்து காட்டி அந்த மனிதன் தன்னால் அனுப்பப்பட்டவன் என்பதை நிரூபிப்பார். உதாரணத்திற்கு மோசேயும் யோசுவாவும், எலியாவும் எலிசாவும், இயேசுவும் அப்போஸ்தலர்களும். இதன் இடைப்பட்ட காலத்தில் அற்புதம் நடைபெற்றதாக வேதத்தில் எந்த ஒரு ஆதார வசனமும் இல்லை. மேலும் அற்புதம் செய்யும் வரங்கள் ஒழிந்துபோகும் என நன்கு அறிந்த பவுல் அப்போஸ்தலன் 1 கொரி 13இல் குறைவான வரங்கள் ஒழிந்து போகும், ஆனால் அன்பு ஒழிந்து போகாது என எழுதுகிறார். மேலும் ஆதி திருச்சபையின் முதல் 4 நூற்றாண்டு சரித்திரத்தில் எந்த ஒரு போதகரும் அற்புதம் செய்து காட்டவில்லை. மாறாக சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவை மாத்திரம் போதித்தார்கள்.

1 கொரி 1:22,23 -> யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்; நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார்.

(ஆண்ட்ரூ கிங்ஸ்லி ராஜ்)

கருத்துகள்

  1. அப்ப இந்த காலத்துல அற்புதங்கள் தேவையில்லை வசனம் மட்டும் போதும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், வேதம் மட்டும் போதுமானது. அதுவே சீர்திருத்த முழக்கமாக மார்டின் லூதர் முழங்கினார். 'Sola Scriptura'
      மேலும் மார்டின் லூதர் ஒரு முறை கூறினார், "என்னுடைய சீர்திருத்த ஊழியத்தின் ஆரம்ப நாட்களிலிருந்தே கனவுகள், தரிசனங்கள் ஆகியவற்றை தரும்படியோ, தேவதூதர்களை அனுப்பும்படியோ தேவனிடம் ஜெபித்ததில்லை. மாறாக, தேவனுடைய வார்த்தையாகிய பரிசுத்த வேதாகமத்தை முறையாக புரிந்துகொள்ள வேண்டிய புரிதலைத்தான் என் ஜெபத்தில் கேட்டேன். ஏனென்றால், தேவனுடைய வார்த்தை என்னுடம் இருக்கும்வரை, நான் அவருடைய வழியில் நடக்கிறேன் என்றும், எந்த ஒரு தவறான நம்பிக்கையிலும், மாயையிலும் விழுந்துவிட மாட்டேன் என்றும் நிச்சயமாக அறிவேன்." மேலும் கலாத்தியர் புத்தகத்திற்கு அன்னார் எழுதிய விளக்கவுறையில் அற்புத வரங்களின் நோக்கத்தையும், அதன் முற்றுப்புள்ளியையும், வேதத்தின் போதுமானத்தன்மையையும் விளக்கியிருக்கிறார்.

      நீக்கு

கருத்துரையிடுக