தேடல் தொடர்கிறது ... - திரு. பொன்.வ.கலைதாசன் (சிறகடிப்பு)
ஈராயிரம் ஆண்டுகளாய்
இறைமகன் தேடுகிறார்;
இன்னும் கிடைக்கவில்லை,
தேடல் தொடர்கிறது...
அன்றும் இருக்கவில்லை,
இன்றும் கிடைக்கவில்லை.
இயேசு தேடுகிறார்,
தேடல் தொடர்கிறது...
எழுதும் நானுமல்லன்
படிக்கும் நீருமல்லர்;
இறைவன் தேடுகிறார்,
தேடல் தொடர்கிறது...
அடுத்தடுத்த கல்லெறிய
அளவற்றோர் இங்குள்ளார்;
முதலாவது கல்லெறிய
முழுத்தகுதி வாய்ந்த நபர்
ஒருவர் கிடைத்தாலும்
தேடல் முடிந்துவிடும்;
ஒருவரும் கிடைக்கவில்லை,
தேடல் தொடர்கிறது...!
சிறகடிப்பு (2015 ஜனவரி
பிப்ரவரி) இதழில் நான் எழுதியது.
#பொன்வக #பொன்வகலைதாசன்
#பொன்வககவிதைகள் #ponvaka #ponvakalaidasan #ponvakapoems
கருத்துகள்
கருத்துரையிடுக