உருவிலாய் போற்றி! - திரு. பொன். வ. க
உருவிலாய் போற்றி!
மறுவிலாய் போற்றி!
ஒருவராய்ப் பரவெளி
நிறுவினாய் போற்றி!
ஆதியே போற்றி!
சோதியே போற்றி!
வீதியே வியந்தநல்
நீதியே போற்றி!
மன்னவா போற்றி!
என்னவா போற்றி!
சின்னவ ராகிய
முன்னவா போற்றி!
கன்னலே போற்றி!
மின்னலே போற்றி!
விண்ணிலே உறைந்திடும்
அண்ணலே போற்றி!
அன்பினாய் போற்றி!
முன்பினாய் போற்றி!
நண்பனாய்த் திகழ்ந்திடும்
பண்பினாய் போற்றி!
அருவமே போற்றி!
உருவமே போற்றி!
அருவுரு திருவென
நிறுவினாய் போற்றி!
அந்தமே போற்றி!
பந்தமே போற்றி!
கந்தையும் அணிந்தயெம்
சொந்தமே போற்றி!
ஆண்டவா போற்றி!
நீண்டவா போற்றி!
மாண்டவா மரித்துபின்
மீண்டவா போற்றி!
தந்தையே போற்றி
சிந்தையே போற்றி!
நிந்தைக ளேற்றமா
விந்தையே போற்றி!
தூக்கினாய் போற்றி
ஆக்கினாய் போற்றி!
ஆக்கினை யாவையும்
நீக்கினாய் போற்றி!
9715 552 552
#பொன்வக #பொன்வகலைதாசன்
#பொன்வககவிதைகள் #ponvaka #ponvakalaidasan #ponvakapoems
கருத்துகள்
கருத்துரையிடுக