யார் இந்த ஏரோது? வேதம் முரன்படுகிறதா? மத்தேயு 2 vs மத்தேயு 14
நாம் அனைவரும் நன்கறிந்த விஷயம் யாதெனில், கர்த்தராகிய இயேசு பாலன் பிறந்தபொழுது ஏரோது ராஜா 2 வயதிற்கு குறியவான குழந்தைகள் யாவரையும் கொள்ள ஆனைபிறப்பிக்கிறான். அச்சமையம் இயேசு பாலனை காப்பாற்ற யோசேப்பு பிள்ளையையும் அதன் தாயாகிய மரியாளையும் எகிப்து நாட்டிற்கு கூட்டிச்செல்கிறான். பின் ஏரோது ராஜாவின் மரண செய்தியை கேட்டபின் சொந்த நாட்டிற்கு திரும்புகிறான் (மத் 2:19,20). அப்படியிருக்க ஏரத்தாள 30 வருடத்திற்க்குபின் மத்தேயு 14 ஆம் அதிகாரத்தில் ஏரோது என்று படிக்கிறோமே இவன் யார்?
பதில்: மத்தேயு 14:1 இல் காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது என்று படிக்கிறோம். ஆங்கிலத்தில் 'tetrarch' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. யூத காலவரிசையாளராகிய டேவிட் கான்ஸ் தன்னுடைய புத்தகத்தில் விளக்கும்போது, மத்தேயு 14ஆம் அதிகாரத்தில் நாம் பார்க்கும் ஏரோது ராஜா இயேசுவின் பிறப்பின்போது அரசாண்டவன் அல்லவென்றும், அவனுடைய மகன் என்றும் பதிவிடுகிறார். இயேசுவின் பிறப்பின்போது அரசாண்ட ஏரோது ராஜாவின் மரணத்திற்குபின் ராஜ்யம் 4 பங்காக பிரிந்து நான்கு வெவ்வேறு ராஜாக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. அந்த நான்கு ராஜாக்களில் ஒருவன் தன் தகப்பனுடைய அதே பெயரை தாங்கியவனாக இருந்தான். அவன் பெயரே ஏரோது. இந்த ஏரோது ராஜாவின் சகோதரன் தான் பிலிப்பு. இருவரும் காற்பங்கு தேசாதிபதியாக இருந்தார்கள். (மத் 14) மீதி இரண்டு பங்கு லிசானியா, பொந்தியு பிலாத்து ஆகிய இருவர் கைவசமானது. (லூக்கா 3:1)
Referance: David Ganz. Tzemach David, par 1, Juchasin, fol. 142. 2.
பரிசுத்த வேதாகமம் உள்ளதை உள்ளத்வென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லும் புத்தகம். எனவேதான், கிறிஸ்தவர்களாகிய நாங்கள் பரிசுத்த வேதாகமத்தை முழுவதுமாக நம்புகிறோம். அதில் உள்ள வார்த்தை எங்களுக்கு உண்மையில் பாதைகாட்டும் தீபமாக இருக்கிறது. நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் மிகப்பெரிய இரகசியத்தை சொல்லும் ஒரே புத்தகம் பரிசுத்த வேதாகமம் மட்டுமே.
கருத்துகள்
கருத்துரையிடுக