ஊழியத்தின் முதன்மை நோக்கம் மாற்கு 1:15
ஊழியத்தின் முதன்மை நோக்கம்: சுவிஷேசத்தை அறிவித்தல்
அற்புத அடையாளங்கள்: இரண்டாவதே. அவைகள் இயேசு தேவனால் அனுப்பப்பட்ட தேவனுடைய குமாரன் என்பதற்கு அத்தாட்சியாக இருந்தது. (யோவான் 3:2, அப் 2:22, கொரி 12:12)
காலம் நிறைவேறிற்று: யூத சபையின் காலம் நிறைவேறிற்று (அ) மோசேயின் காலம் நிறைவேறிற்று (அ) நியாய பிரமானத்தின் காலம் நிறைவேறிற்று. மேசியா தம்மை வெளிப்படுத்துகிற (முழுமையான) காலம் வந்துவிட்டது.
தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று: தேவனுடைய ராஜ்யம் கிறிஸ்தவர்களுக்குள் வந்து தங்கி தாபரிக்கிறது.
தேவனுடைய ராஜ்யத்தைத் தேடி நாம் இங்கும் அங்கும் அலைந்துத்திரிய வேண்டாம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற எவனுடைய இருதயத்திற்குள்ளும் தேவனுடைய ராஜ்யம் வந்து குடிகொள்ளும். (லூக்கா 17:21)
மனந்திரும்பு: பாவ வழியிலிருந்து திரும்பி கடவுள் காட்டும் வழியில் நடக்க ஆரம்பி.
உன்னுடைய இயலாமையை அறிந்துகொண்டு, தாழ்த்தி கடவுளின் துணையை தேடு. இயேசுவே வழி. (யோவான் 14:6)
சுவிஷேசத்தை விசுவாசி: முன்னர் உன்மீது கொண்ட நம்பிக்கையை மாற்றி கிறிஸ்து இயேசுவை நம்பு. உன்னுடைய கிரியைகளால் மீட்படைய முடியாதென்பதை உணர்ந்து, மனந்திரும்பு. விசுவாசிப்பதால் மீட்படையும் சுவிஷேசத்தை விசுவாசி. (ரோமர் 1:17, கலா 2:16)
சுவிஷேசம்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமது பாவங்களுக்காக சிலுவையில் மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு பின் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். (1 கொரி 15:3-4)
Primary priority of ministry: Proclaiming the Gospel
Miraculous Signs: Secondary. They were proves that Jesus was the Son of God sent by God and that all that He spoke was true. (John 3:2, Acts 2:22, 1Cor 12:12)
The time is fulfilled: The time of the Jewish church is fulfilled (a) The time of Moses is fulfilled and (a) The time of Torah is fulfilled. The (fullness of) time has come for the Messiah to reveal Himself to the world.
The kingdom of God is at hand: The kingdom of God has come and dwells within Christians. Let us not wander here and there seeking the kingdom of God somewhere else. The kingdom of God will come and dwell in the heart of anyone who believes in the Lord Jesus Christ. (Luke 17:21)
Repent: Turn from the way of sin and start walking in God's way. Jesus is the way. (John 14:6)
Know your weakness, humble yourself and seek God's help.
Believe in the Gospel: Change your former faith in yourself and believe in Christ Jesus. Realize that your works cannot redeem you, and repent.
Believe the gospel that saves by faith. (Rom 1:17, Gal 2:16)
கருத்துகள்
கருத்துரையிடுக