இயேசுவே என் மருத்துவர் மாற்கு 2:17
இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
மாற்கு 2:17
வரி வசூலிப்பவரான லேவி மற்றும் அவரது நண்பர்களுடன் இயேசு உணவருந்துகிறார்
அந்த பண்டைய நாட்களில், பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் தங்களை நீதிமான்கள் என்றும், விருந்தில் அமர்ந்திருந்த மோசமான பாவிகள் தீண்டத்தகாதவர்கள் என்றும் ஆணவத்துடன் நினைத்தார்கள். அதனால் முணுமுணுத்தார்கள். தாங்கள் பாவிகள் என்பதை உணரத் தவறிவிட்டனர். அவர்களுக்கு இயேசு, நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவை, சுகமாக இருப்பவர்களுக்கு தேவை இல்லை என்றும் நீதிமான்களையல்ல, பாவிகளையே மனம்திரும்புகிறதற்கு தான் அழைக்கவந்ததாகவும் அதிரடியாக பதில் கூறினார்.
சுகமுள்ளவன் ("ischuo") - ஒருவர் உடல் சக்திகளைக் கொண்டு நல்ல ஆரோக்கியமாக இருப்பது.
பிணியாளி ("ekho") - ஒரு உதவியாளர் தேவை, குணமடைய வேண்டும்.
இவரே நம் அன்புக்குரிய கடவுள்.
அவர் தீண்டத்தகாதவர் என்று ஒருவரையும் தூக்கி எறிவதில்லை.
இந்த உவமை இயேசுவை ஒரு மருத்துவராக சித்தரிக்கிறது. எந்த நோயையும் குணப்படுத்தும் மருத்துவர் இயேசு. இந்த மருத்துவரால் இறந்த மனிதனை கூட பிழைக்க வைக்க முடியும். கடவுளின் சக்தி ஒருவனை உயிர்ப்பிக்கும் வரை நாம் அனைவரும் ஆவிக்குரிய மரணத்தில் இருக்கிறோம் என்று பைபிள் கூறுகிறது. (எபே 2:1) பாவம் என்பது கீழ்ப்படியாமையால் ஒரு மனிதனுக்குள் வந்து எல்லா மனிதர்களுக்கும் பரவிய ஒரு வைரஸ்.
இயேசுவின் மருத்துவமனை எப்போதும் திறந்த வாசலோடிருக்கிறது.
இங்கே யார் வேண்டுமானாலும் வந்து குணமடையலாம்.
ஆனால் அவர் அடிக்கடி நடத்தும் மருத்துவ முகாமில் நான் குணமடைந்தேன். ஆம், அவர் வந்து என்னைத் தேடினார், எனக்கு அவர் தேவை என்று கண்டுபிடித்தார். நான் இறந்துவிட்டதால், நான் சுயநினைவை இழந்திருந்தேன். இப்போது, "இயேசு என் மருத்துவர்" என்று என்னால் சொல்ல முடியும்.
3 பரிதாபமான மக்கள்:
எண் 1) அவரைப் பற்றி தெரியாதவர்கள்;
எண் 2) அவரைப் பற்றி அறிந்தும் அவரை நம்ப மறுப்பவர்கள்;
எண் 3) அவர் தேவை என்று ஒப்புக்கொள்ளாதவர்கள்.
அவர் தம்முடைய எல்லா மருத்துவமனைகளையும் மூடிவிட்டு மருத்துவ முகாம்களை நடத்துவதை நிறுத்துவதற்குள் அவர்கள் ஒரு நாள் அல்லது இன்னொரு நாள் குணமடைய அவர்களுக்காக தொடர்ந்து நாம் பிரார்த்தனை செய்வோம். முடிந்தால் அப்படிப்பட்டவர்களை மருத்துவர் இயேசு கிறிஸ்துவிடம் கூட்டிக்கொண்டு (தூக்கிக்கொண்டு) வருவோம்.
(ஆண்ட்ரூ கிங்ஸ்லி ராஜ்)
Jesus is my Physician
And when Jesus heard it, he said to them, “Those who are healthy do not have need of a physician, but those who are sick. I have not come to call the righteous, but sinners.” (Mk 2:17)
Jesus dines with Levi the tax collector and his friends
Back in those ancient days, Pharisees and Scribes arrogantly thought they were righteous people and the notorious sinners at the banquet were untouchable outcasts. So they murmured. They failed to realize they were sinners. But Jesus gave them a mass reply that those who are healthy don't need a physician, but those who are sick do and that HE has not come to call the righteous, but sinners.
Healthy ("ischuo") - having one's physical powers and thus to be in good health or be healthy.
Sick ("ekho") - needing one helper, needing getting healed.
This is our all-loving GOD.
HE don't throw away anyone untouchable.
This illustration portrays Jesus as a Physician. Jesus is the Physician who can heal any sickness. This Physician even can make a dead person alive. The Bible says all of us are in Spiritual death until the power of GOD makes them alive. (Eph 2:1) Sin is a virus that came into one man because of disobedience and spread to all men.
Jesus' Hospital is wide open.
Anyone can come in and get healed.
But I was healed in a Medical Camp HE conducts frequently. Yes, HE came and searched for me and found I needed Him. As I was dead, I was out of consciousness. Now, I can say "Jesus is my physician"
3 Pathetic people:
No 1) those who do not know about Him;
No 2) those who know about Him but refuse to trust Him; and
No 3) those who will not admit that they need Him.
We will continue to pray for them that they may be healed one day or another before HE closes all His Hospitals and ceases to conduct Medical Camps. If possible, let us bring such people to the doctor Jesus Christ atleast by stretcher.
கருத்துகள்
கருத்துரையிடுக