இஸ்லாமிய நாடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் அநேகர் தங்கள் கணவுகளில் (அ) நேரடியாக இயேசுவைக் கண்டோம், பின் இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டோம் என்று சொல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. பரவச கூட்டத்தார் என்றரியப்படும் பெந்தெகோஸ்தே கூட்டத்தார் இந்த வீடியோக்களை (அ) செய்தியை ஆதாரமாக வைத்து இன்றும் ஆண்டவர் தங்கள் சபைகளில் தீர்க்கதரிசிகளை ஏற்படுத்துகிறார் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் தீர்க்கதரிசிகள் வேதத்தின் சத்தியத்திற்க்கு மாறாக ஒன்றுக்கும் உதவாத தீர்க்கதரிசன கதைகளையே அவிழ்த்துவிடுவதை பார்க்கிறோம். இநிலையில் இஸ்லாமியர்கள் காணும் கணவுகளை நாம் எப்படி அநுகுவது என்பதே கேள்வி.
பாரம்பரிய பிரிவினை சபை கோட்பாடான "வேதம் மட்டுமே" என்பதை நம்பும் நான், தேவன் தன்னை முழுமையாக வேதத்திலுள்ள 66 புத்தகங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்று நம்புகிறேன். அப்படியானால், இஸ்லாமியர்கள் சொல்வது பொய்யா? நிச்சயமாக இல்லை. வேதபுத்தகம் கிடைக்கப்பெறாத நிலையில் வாழுபவர்களுக்கு, சுவிஷேசகர்கள் செல்லமுடியாத இடத்தில் வாழுபவர்களுக்கு தேவன் தன்னை கணவுகளின் மூலமாகவோ, தரிசனங்களின் மூலமாகவோ வெளிப்படுத்தமுடியும். ஆனால் அவர்கள் காணும் அந்த கணவோ, தரிசனமோ தொடர்சியானது அல்ல. அவை இயேசு கிறிஸ்து அவர்களுடைய (நம்முடைய) பாவத்திற்க்காக சிலுவையில் அடிக்கப்பட்டு உயிர்த்தெழுந்தார் என்ற சுவிஷேசத்தை அறிவித்து அவர்களை இரட்சிப்பில் வழிநடத்தும். பாருங்கள், இந்த வெளிப்பாடு அவர்களுடைய மார்க்க வேதமான குரானுக்கு முற்றிலும் எதிர்மறையான ஒரு காட்ச்சி. குரான் கர்பிப்பது, "இயேசு சிலுவையில் அறையப்படவுமில்லை; உயிர்தெழும்பவுமில்லை. அவருக்கு பதிலாக வேறொருவனுக்கு அல்லா ஆள்மாராட்டம் செய்து சிலுவையில் கொன்றான்." இப்படி அவர்கள் வேதம் சரித்திரத்தை மாற்றி எழுதி இஸ்லாமியர்களை ஏமாற்றி வைத்திருக்கிறது. அப்படிப்பட்டவர்களுள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு இயேசு கிறிஸ்து தம்மை சிலுவையில் அறையப்பட்டவராகவும், உயிருள்ளவராகவும் காட்டமுடியும். சில இஸ்லாமியர்கள், இயேசு தங்கள் முன் தோன்றி "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னையல்லாமல் ஒருவனும் பிதாவிடம் வரான்." (யோவான் 14:6) என்று சொன்னதாக கூறுவதை பார்த்திருக்கிறேன். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் கேட்டிராத ஒரு வசனத்தை / சத்தியத்தை அந்த கணவிலோ / தரிசனத்திலோ கேட்கிறார்கள். இதன் மூலமாக இரட்சிப்படைய (அ) தேவனிடத்தில் சேர ஒரே வழி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்று அறிந்து ஏற்றுக்கொள்கிரார்கள். எனவே, தேவன் கணவுகள் மூலமாகவும், தரிசனங்கள் மூலமாகவும் பேசமுடியும். இப்படி இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் பின் ஒரு நல்ல போதகரை அநுகி, சபையில் இனைய வேண்டும். இதன் பின்னர், இவர்கள் வேதத்தை வாசிக்கவேண்டும். ஏனெனில், தேவன் கர்த்தருடைய வார்த்தை முழுமையாக நமக்கு தந்திருப்பதால், வேதத்தின்மூலமாக மட்டுமே கிறிஸ்தவர்களாகிய நம்மோடு இடைபடுவார்.
அப்போஸ்தலனாகிய பவுலுடைய வாழ்க்கையை உதாரனமாக எடுத்துக்காட்டுகிறேன்.
⁕ உயிர்தெழுதலை நம்பாத பரிசேயனின் மகன் பவுல் (அப் 23:6)
⁕ பவுல் கண்ட தரிசனம் (அப் 9)
⁕ இயேசு கிறிஸ்து தம்மை உயிருள்ளவராக வெளிப்படுத்துகிறார். கர்த்தருடைய ஊழியக்காரனை காணும்படி அறிவுருத்துகிறார்.
⁕ பின் ஆக்கில்லா, ப்ரிஸ்கில்லா ஆகியோரிடம் வேதபுத்தகத்தை படிக்கிறார். (அப் 18:26)
⁕ புத்தகங்களில் தேடி படிக்கிறார். (2 தீமோ 4:13)
கிறிஸ்தவர்களாகிய நமக்கு கணவுகள் / தரிசனங்கள் தேவையில்லை. பரிசுத்த வேதபுத்தகமே போதுமானது.கணவுகளையும், தரிசனங்களையும் நாம் நாடித்தேடி ஒடவேண்டிய அவசியம் இல்லை.
"வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினாலே அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகளை உபடதேசத்திற்க்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்குன், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது." 2 தீமோ 3:16-17
உணமையாக தேவன் தம்மை ஒருவனிடம் வெளிப்படுத்துகிறார் என்றால், நிச்சயம் அவனை வேதபுத்தகத்தினிடம் திரும்புவான். அவன் வாசிக்கும்போது, தேவன் அவனுடைய மனக்கண்களைத்திரந்து வேதத்தின்மூலம் மட்டுமே அவ்னோடு இடைபடுவார். இனி புதிய வெளிப்பாடுகளோ, தீர்க்கதரிசனங்களோ நமக்கு கிடையாது. அவைகள் நின்றுபோயிற்று. (1 கொரி 13:8)
ஆனால், இன்றைய பரவசநிலை சபைகளில் நாம் பார்க்கும் தரிசனங்களும், கணவுகளும் போலியே என்பதில் சந்தேகமே இல்லை.
Martin Luther said, "I have covenanted with my Lord that He should not send visions, or dreams or even angels! I am content with this gift of the Scriptures, which teaches and supplies all that is necessary both for this life and that which is to come."
(ஆண்ட்ரூ கிங்ஸ்லி ராஜ்)