வேதம் தெளிவாக கற்பிக்கும் சத்தியம் யாதெனில் நாம் அனைவரும் தேவனுடைய படைப்புகளாக இருக்கிறோம் (கொலோ 1:16), தேவன் இவ்வுலகினை மிகவும் நேசிக்கிறவராக இருக்கிறார் (யோவான் 3:16). ஆனால், மறுபடியும் பிறந்தவர்கள் மாத்திரமே தேவனுடைய பிள்ளைகளாக இருக்கமுடியும். (யோவான் 1:12,11:52, ரோமர் 8:16, 1 யோவான் 3:1-10)
வேதபுத்தகம் ஒருபோதும் கெட்டுப்போகிறவர்களை தேவனுடைய பிள்ளைகள் என்று அழைப்பதில்லை. எபேசியர் 2:3 சொல்லுகிறது, இரட்சிக்கப்படும்முன் நாம் கோபாக்கினையின் பிள்ளைகளாக இருந்தோம். அப்படியானால் இந்த வசனம், இரட்சிக்கப்படும்முன் நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கவில்லை என்ற சத்தியத்தை தெளிவுபடுத்துகிறது. "மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள்." ரோமர் 9:8. நாம் தேவனுடைய பிள்ளைகளாக பிறவாமல், பாவத்தில் பிறந்தோம். அது நம்மை தேவனிடம் இருந்து பிரிக்கிறதாகவும், சாத்தானோடு ஒப்புரவுள்ளவர்களாகவும் வைத்தது. நாம் தேவனுக்கு சத்துருக்களாக இருந்தோம் (யாக்கோபு 4:4, 1 யோவான் 3:8). இயேசு சொன்னார், "தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்." (யோவான் 8:42). அடுத்து 44ஆவது வசனத்தில் பரிசேயர்களைப் பார்த்து இயேசு, "நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்" (யோவான் 8:44). இரட்சிக்கப்படாதவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல என்ற சத்தியத்தை சுட்டிக்காட்டும் இன்னொரு வசனம் 1 யோவான் 3:10. "இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல."
நாம் இரட்சிக்கப்படும்பொழுது தேவனுடைய குடும்பத்தில் இணைக்கப்படுகிறதினாலே தேவனுடய பிள்ளைகளாகிறோம் (கலா 4:5-6, எபே 1:6). இவற்றையே ரோமர் 8:14-17 வசனங்களில் பார்க்கிறோம். "14 மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். 15 அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். 16 நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார். 17 நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்." இரட்சிக்கப்பட்டிருக்கிற நாம் எல்லாரும் "கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினாலே" தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம் (கலா 3:26).
எபே 1:6
"தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்."
Source: GotQuestion.com