எஜமானனே புயல் பொங்கி எழும்புகிறது! மாற்கு 4

 Master, the tempest is raging!

எஜமானனே புயல் பொங்கி எழும்புகிறது!

கருமேகங்கள் சூழ,
வானம் இருளடைய,
உதவுவாரில்லை;
மறைவிடமுமில்லை.
மூழ்கும் எங்கள்மீது;
அக்கரையில்லையோ உமக்கு.
பாதளத்தின் விளிம்பில் நாங்கள்,
வெறித்தனமாக அச்சுருத்தும் புயல்;
எப்படி தூங்குகிறீர்.

காற்றும் கடலும் கீழ்ப்படியும்
உம் சித்தத்திற்கு,
சீராதே, அமைதியாக இரு.
புயலின் சீற்றமோ,
பிசாசோ, மனிதனோ,
எதுவாயிருப்பினும்
எஜமானன் உறங்கும் படகு
நீரினால் மூழ்காது.
கடலின் மீதும் பூமியின் மீதும்
செங்கோல் கொண்டு ஆள்பவர்
என் படகில்.
எல்லாம் கீழ்படியும் அவர் சித்தத்திற்கு
சீராதே, அமைதியாக இரு.




கருத்துகள்