Te Deum - Tamil Version

தேவனே உம்மைத் துதிக்கிறோம்: 
உம்மைக் கர்த்தரென்று பிரஸ்தாபப்படுத்துகிறோம்.

நித்திய பிதாவாகிய உம்மை: பூமண்டலமெல்லாம்  வணங்கும் 
தேவதூதர் அனைவோரும் பரமண்டலங்களும் 
அவைகளிலுள்ள அதிகாரங்கள் அனைத்தும்
கேரூபின்களும் சேராபின்களும் தேவரீரை ஒயாமல் புகழ்ந்து போற்றி 
சேனைகளின் தேவனாகிய கர்த்தரே நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 
வானமும் பூமியும் உமது மகிமையுள்ள 
மகத்துவத்தால் நிறைந்தன என்று முழங்குகிறார்கள்.
அப்போஸ்தலராகிய மாட்சிமை பொருந்திய கூட்டம் உம்மைப் போற்றும். 
தீர்க்கதரிசிகளாகிய சிறப்புள்ள சங்கம் உம்மைப் போற்றும்.

இரத்தசாட்சிகளாகிய தைரிய சேனை உம்மைப் போற்றும்.

அளவில்லாத மகத்துவமுள்ள பிதாவாகிய தேவரீரையும். 
வணங்கப் படத்தக்க மெய்யான உம்முடைய ஒரே குமாரனையும்: 
தேற்றரவாளனான பரிசுத்த ஆவியையும்

உலகமெங்குமுள்ள பரிசுத்த சபை: பிரஸ்தாபப்படுத்தும்.

கிறிஸ்துவே தேவரீர் மகிமையின் ராஜா: நீரே பிதாவினுடைய நித்திய சுதன்

நீர் மனிதரை இரட்சிக்க ஏற்பட்டபொழுது 
கன்னியாஸ்திரியின் கர்ப்பத்தை அருவருக்கவில்லை

நீர் மரணத்தின் கொடுமையை வென்று: விசுவாசிகள் எல்லாருக்கும் 
மோட்ச இராஜ்யத்தைத் திறந்தீர்.

நீர் பிதாவின் மகிமையிலே: தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறீர்.

நீர் எங்களுக்கு நியாயாதிபதியாக: வருவீரென்று விசுவாசிக்கிறோம்.

உமது விலையுயர்ந்த இரத்தத்தால் மீட்டுக்கொண்ட உமது அடியாருக்குச் 
சகாயஞ் செய்ய உம்மை வேண்டிக்கொள்ளுகிறோம். 
எங்களை நித்திய மகிமையிலே உம்முடைய பரிசுத்தவான்களோடே சேர்த்துக் கொள்ளும்.

கர்த்தாவே உமது ஜனத்தை இரட்சித்து உமது சுதந்தரத்தை ஆசீர்வதியும்: 
அவர்களை ஆண்டுகொண்டு என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.

தினம் தினம் உம்மைத் தோத்தரிக்கிறோம்: எப்பொலுதும் சதாகாலங்களிலும் 
உமது நாமத்தை வணங்குகிறோம்.

ஆண்டவரே இந்நாளில் பாவஞ்செய்யாதபடி எங்களைக் காத்தருளும்: 
கர்த்தாவே எங்களுக்கு இரங்கும் எங்களுக்கு இரங்கும்.

கர்த்தாவே நாங்கள் உம்மை நம்பியிருக்கிறதால் 
உமது  கிருபை எங்கள் மேல் இருப்பதாக 
கர்த்தாவே  உம்மையே நம்பியிருக்கிறேன் 
நான் ஒருக்காலும் கலங்காதபடி செய்யும்.

English version
We praise thee, O God : we 
acknowledge thee to be the Lord.
All the earth doth worship thee : the 
Father everlasting.
To thee all Angels cry aloud : the 
Heavens, and all the Powers therein.
To thee Cherubin and Seraphin : 
continually do cry,
Holy, Holy, Holy : Lord God of 
Sabaoth;
Heaven and earth are full of the 
Majesty : of thy glory.
The glorious company of the 
Apostles : praise thee.
The goodly fellowship of the 
Prophets : praise thee.
The noble army of Martyrs : praise 
thee.
The holy Church throughout all the 
world : doth acknowledge thee;
The Father : of an infinite Majesty;
Thine honourable, true : and only 
Son;
Also the Holy Ghost : the Comforter.
Thou art the King of Glory : O Christ.
Thou art the everlasting Son : of the 
Father.
When thou tookest upon thee to 
deliver man : thou didst not abhor the 
Virgin's womb.
When thou hadst overcome the 
sharpness of death :
 thou didst open the Kingdom of 
Heaven to all believers.
Thou sittest at the right hand of God : 
in the glory of the Father.
We believe that thou shalt come : to 
be our Judge.
We therefore pray thee, help thy 
servants :
 whom thou hast redeemed with thy 
precious blood.
Make them to be numbered with thy 
Saints : in glory everlasting.

Latin version
Te Deum laudámus: te Dominum 
confitémur.
Te ætérnum Patrem omnis terra 
venerátur.
Tibi omnes Angeli; tibi cæli et 
univérsae potestátes.
Tibi Chérubim et Séraphim 
incessábili voce proclámant:
Sanctus, Sanctus, Sanctus, 
Dóminus Deus Sábaoth.
Pleni sunt cæli et terra majestátis 
glóriæ tuæ.
Te gloriósus Apostolórum chorus;
Te Prophetárum laudábilis 
númerus;
Te Mártyrum candidátus laudat 
exércitus.
Te per orbem terrárum sancta 
confitétur Ecclésia:
Patrem imménsæ majestátis;
Venerándum tuum verum et únicum 
Fílium;
Sanctum quoque Paráclitum 
Spíritum.
Tu Rex glóriæ, Christe.
Tu Patris sempitérnus es Fílius.
Tu ad liberándum susceptúrus 
hóminem, non horruísti Vírginis 
úterum.
Tu, devícto mortis acúleo,
 aperuísti credéntibus regna 
cælórum.
Tu ad déxteram Dei sedes, in glória 
Patris.
Judex créderis esse ventúrus.
Te ergo quǽsumus, tuis fámulis 
súbveni,
 quos pretióso sánguine 
redemísti.
Ætérna fac cum sanctis tuis in 
glória numerári.

கருத்துகள்