அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதிப்படுத்து 2 பேதுரு1:1-10
நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, ..................................................... இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் ..................................................... ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை.
2 பேதுரு 1:1-10
2 பேதுரு1:1-10: இயேசுகிறிஸ்து "நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க" வந்தார். பவுலடியார் 1கொரி.1:26-28ல் நம்முடைய தகுதியின் அடிப்படையில் அவர் நம்மை அழைக்கவில்லை என்பதை விளக்குகிறார். எல்லாரும் பாவம்செய்து தேவமகிமை இழந்துபோனார்கள். ஆனாலும் "தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தார்" என 2 பேதுரு1:3ல் வாசிக்கிறோம். "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக் கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத்தேயு 11:28)என எல்லாரையும் அழைத்தார். "தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந் தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்" (ரோமர் 8:29-30). நம்மை உலகத்தோற்றத்திற்கு முன்னமே முன்குறித்து, தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு நம்மை அழைத்தார். அவர் யூதரிலிருந்து மாத்திரமல்ல, புறஜாதிகளிலுமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே. தம்முடைய ராஜ்யத்திற்கும் மகிமைக்கும் உங்களை அழைத்த தேவனுக்கு நீங்கள் பாத்திரராய் நடக்கவேண்டும் (1தெச.2:11,12). ஆகவே நம்முடைய அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதியாக்கினவர்களாய் இனிவரும் நாட்களில் கர்த்தருக்கு அதிக கனிகொடுக்கிறவர்களாக வாழ கர்த்தர் நம்மனைவருக்கும் கிருபை செய்வாராக.
(ஸ்தானபதி பிறதியிலிருந்து Feb 3, 2024)
கருத்துகள்
கருத்துரையிடுக