கிறிஸ்துவைப் பற்றி கேள்விப்படாதவர்கள் நரகத்திற்கு செல்கிறார்களா? - ஆர். சி. ஸ்ப்ரவுல்

 ஒரு கிறிஸ்தவரிடம் கேட்கப்படக்கூடிய மிகவும் உணர்ச்சிகரமான கேள்விகளில் இதுவும் ஒன்று. எந்தவொரு மனிதனுக்கும் நரகத்திற்குச் செல்கிறான் என்பது திகிலூட்டுகிற அல்லது சிந்திக்கவே மிகவும் மோசமான செய்தி. மேலோட்டமாக, நாம் அப்படி ஒரு கேள்வியைக் கேட்கும்போது, அதில் மறைந்திருப்பது என்னவெனில், “இரட்சகரைப் பற்றிக் கேட்கக் கூட வாய்ப்பில்லாத ஒருவரைக் கடவுள் எப்படி நரகத்திற்கு அனுப்ப முடியும்? அது எப்படி சரியாக இருக்க முடியது."


அந்தக் கேள்வியைப் பற்றி ஆய்வு செய்ய வேதாகமத்தின் மிக முக்கியமான பகுதி ரோமர்களுக்கு பவுல் எழுதிய கடிதத்தின் முதல் அத்தியாயம் என்று நான் கூறுவேன். ரோமர் புத்தகத்தின் கருப்பொருள் சுவிஷேசமே - கிறிஸ்துவில் கடவுள் மனிதகுலத்திற்கு வழங்கிய மீட்பின் அற்புதமான கதை, ஐசுவரியங்கள் மற்றும் கடவுளின் கிருபையின் மகிமை, கடவுள் நம்மை மீட்க எந்த அளவிற்கு சென்றார் போன்றவை. ஆனால் பவுல் சுவிசேஷத்தை அறிமுகப்படுத்துகிற, கடவுளின் கோபம் பரலோகத்திலிருந்து வெளிப்பட்டதாகவும், கடவுளின் கோபத்தின் இந்த வெளிப்பாடானது தெய்வ பயமற்ற மற்றும் அநீதியினால் நிறைந்த மனித இனத்திற்கு எதிராக இயக்கப்பட்டதாகவும் அறிவித்து முதல் அத்தியாயத்தைத் தொடங்குகிறார். எனவே கடவுளின் கோபத்திற்கு காரணம் பாவத்திற்கு எதிரான (நியாயமான) கோபம். கடவுளுக்கு அப்பாவி மக்கள் மீது கோபம் இல்லை; அவர் குற்றவாளிகள் மீது கோபமாக இருக்கிறார். கடவுள்  தம்மை தம் படைப்புகளின் மூலம் வெளிப்படுத்தியும் அவரை அவர்கள் நிராகரித்தமையால் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.


கடவுள் தனது நித்திய வல்லமை, இருப்பு மற்றும் குணாதிசயங்கள் ஆகியவற்றை படைப்பின் முதல் நாளிலிருந்தே தமது படைப்பின் மூலம் இந்த கிரகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்று பவுல் கூறுகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒவ்வொரு மனிதனும் ஒரு கடவுள் இருப்பதையும், அவன் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியவன் என்பதையும் அறிவான். இருப்பினும் எந்த ஒரு மனிதனும் கடவுளுக்குக் கீழ்ப்படிவதில்லை. பவுல் ஏன் அந்த இடத்தில் சுவிசேஷத்தை விளக்குகிறார்? அவர் என்ன செய்ய முயற்சிக்கிறார்? ரோமர் புத்தகத்தில் அவர் உருவாக்குவது இதுதான்: ஏற்கனவே, நரகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இந்த உலகத்திற்கே கிறிஸ்து அனுப்பப்பட்டார். கிறிஸ்து இழந்துபோன உலகத்திற்கு அனுப்பப்பட்டார். அவர்கள் தொலைந்துபோனவர்கள் - அதாவது அவர்கள் அறிந்த தந்தையை நிராகரித்த குற்றமாகும்.


இப்போது, “இயேசுவைப் பற்றி கேள்விப்படாத மக்களை கடவுள் நரகத்திற்கு அனுப்புகிறாரா?” என்ற உங்களின் அசல் கேள்விக்கு வருவோம். இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கவில்லை என்றால், இயேசுவை நிராகரித்ததற்காக கடவுள் ஒருபோதும் மக்களை தண்டிப்பதில்லை. நான் அதைச் சொன்னதும், மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள், “அப்படியானால், இயேசுவைப் பற்றி யாரிடமும் சொல்லாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் யாராவது அவரை நிராகரிக்கலாம். பின்னர் அவர்கள் உண்மையில் ஆழ்ந்த சிக்கலில் உட்படுகிறர்கள். ஆனால், நரகத்திற்குச் செல்ல வேறு காரணங்கள் உள்ளன. தந்தையாகிய கடவுளை நிராகரிப்பது மிகவும் தீவிரமான விஷயம். கடைசி நாளில் "நீங்கள் இருப்பதை நான் அறியவில்லை" என்று யாராலும் சொல்ல முடியாது. ஏனென்றால் கடவுள் தம்மைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். இப்பொழுது மக்களுக்கு கிறிஸ்து மிகவும் தேவை என்று வேதம் தெளிவுபடுத்துகிறது. கடவுள் சில சமயங்களில் தன்னிச்சையாக தனது கருணையை வழங்கலாம். ஆனால் அதில் அதிக நம்பிக்கை வைத்திருப்பதற்கு ஏற்ற காரணங்கள் இல்லை. உலகம் முழுவதற்கும், எல்லா உயிரினங்களுக்கும் சென்று, இயேசுவைப் பற்றி அவர்களிடம் சொல்ல வேண்டும் என்ற கிறிஸ்துவின் உணர்ச்சிமிக்க கட்டளைக்கு நாம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.



- ஆர். சி. ஸ்ப்ரவுல் (லிகோனியர் ஊழியங்கள்)

நற்செய்தியைக் கேட்காதவர்களுக்கு கடவுளிடமிருந்து கிருபை வழங்கப்படுகிறது என்று நாம் கருதினால், சுவிசேஷம் சொல்வதற்கான உந்துதலை நாம் இழக்கிறோம். நாமும் ஒரு பயங்கரமான பிரச்சனையில் சிக்குகிறோம். சுவிசேஷத்தைக் கேட்காதவர்கள் தானாக இரட்சிக்கப்பட்டால், யாரும் சுவிசேஷத்தைக் கேட்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவது நம் பொறுப்பு என்பதே தர்க்கரீதியானது - ஏனென்றால் அவர்கள் அதை நிராகரிப்பதற்கும் கண்டனம் செய்வதற்கும் ஒரு வாய்ப்பு இருக்கும். (www.GotQuestion.org)

கருத்துகள்