கிறிஸ்துவின் விண்ணேற்பத்திற்கான 3 காரணங்கள்
1. அவரை ஆவியில் அறிய வேண்டும்
நாம் கிறிஸ்துவை உடல் அளவில் மட்டும் அறிந்து, அவர் ராஜ பதவியேற்று தேவபக்தியற்ற ரோம பேரரசை வீழ்த்தி தம் செங்கோலினை நிலைநாட்டுவார் என கனவு காணாமல், அவரை ஆவியில் அறிய வேண்டும். அவர் தமது சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலினால் எப்படி தம்முடைய (தேவ/பரலோக) ராஜ்யத்தை இப்பூவில் ஸ்தாபித்து அதில் நம்மை உட்புகுத்தினார் என்பதை அறிய வேண்டும். சுவிஷேசம் என்ற செங்கோலினால் (சபையாகிய)நம்மைக்கொண்டு ஆட்சி செய்வதை உணர வேண்டும்.
2. கிறிஸ்துவின் உபத்திரவங்களுக்கு பரிசு
கிறிஸ்து அடைந்த உபத்திரவங்களுக்கு (இழப்)ஈடாக அவர் பரலோகத்திற்கு உயர்த்தப்பட்டார். அவர் சிலுவை மரணம் மட்டுக்கும் கீழ்ப்படிந்தவர் ஆனார். ஆதலால் பிதா அவரை உயிர்ப்பித்து, எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். (பிலி 2:8-9)
சங் 110:7 -> "வழியில் உள்ள நீரோடையிலிருந்து அவர் பருகுவார்; ஆகவே அவர் தலை நிமிர்ந்து நிற்பார்."
எபி 2:9 “தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.”
3. கிறிஸ்துவின் தெய்வீகத்தை நிருவுதல்
கிறிஸ்துவின் உடல் வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது, அவர் உண்மையான மனிதன் மட்டுமல்ல, உண்மையான கடவுள் என்பதை நிருவிகிறது.
கிறிஸ்துவின் விண்ணேற்பம், அவர் விண்ணிலிருந்து வந்தவர் என்பதை மெய்ப்பிக்கிறது. (எபே 4:9-10)
கிறிஸ்துவின் வார்த்தையில் -> "மனுஷகுமாரன் (இயேசு) தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்?" (யோவான் 6:62)
ஆக, கிறிஸ்துவின் விண்ணேற்பம், கிறிஸ்து இப்புவியில் வாழ்ந்த நாட்களுக்கு முன்பாகவே விண்ணகத்தில் இருந்தார் என்பதை நிருவுகிறது. அவர் தந்தையாம் கடவுளுக்கு சமமானவரும் நித்தியருமானவர் என்பதைக் காட்டுகிறது.
சுருக்கமாக,
• கிறிஸ்துவின் சரீர விண்ணேற்பம் அவர் கடவுளுக்கு சமமானவர், அதாவது அவரே கடவுள் என்பதை நிருவுகிறது.
• கடவுள் அவரின் பலியில் திருப்தி கொண்டு, அதன் (இழப்)பீடாக அவரை உயர்த்தினார். (ஆவியில் மாத்திரம் அல்ல, சரீரத்தில் பாடநுபவித்தார்)
• கிறிஸ்துவை ஆவியில் அறிந்து, விசுவாசத்தினால் பரலோக ராஜ்யத்தின் மீது கண்களை வைத்து வாழ.
மேலும் படிக்க: “The Saint's Advantage by Christ's Ascension and Coming Again from Heaven” by Christopher Love
கருத்துகள்
கருத்துரையிடுக