திரித்துவ தேவனே என் இரட்சிப்பின் தேவனே - தூய்மைவாதிகளின் ஜெபம்

பரலோக பிதா, ஆசீர்வதிக்கப்பட்ட குமாரன், நித்திய ஆவியானவர்.

பாவிகள் உம்மை அறியவும் உம்முடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவும் செய்கிற ஒரே தேவனும் ஒரே சாரமும் மூன்று தனித்தனி நபர்களாயும் இருக்கிற திரியேக தேவனே உம்மை ஆராதிக்கிறேன்.

பிதாவாகிய தேவனே, நீர் என்னை நேசித்தும், என்னை மீட்டுக்கொள்வதற்கு உம்முடைய குமாரனை அனுப்பியும் இருக்கிறீர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே நீர் என்னை நேசித்தும், என்னுடைய சாயலை ஏற்றுக்கொண்டும், என்னுடைய பாவங்களை கழுவுகிறதற்காக உம்முடைய சுய இரத்தத்தை சிந்தியும், என்னுடைய தகுதியற்ற நிலைமையை மறைப்பதற்காக நீதியை சம்பாதித்தும் இருக்கிறீர்.

பரிசுத்த ஆவியானவரே, நீர் என்னை நேசித்தும், என் இருதயத்தில் பிரவேசித்தும், எனக்குள்ளே நித்திய ஜீவனை வைத்தும், கிறிஸ்துவின் மகிமைகளை எனக்கு வெளிப்படுத்தியும் இருக்கிறீர்.

உமது அன்பு கிருபையுள்ளதும், சொல்லிமுடியாததும், அதிசயமானதும், தொலைந்து போனவர்களை இரட்சிக்கவும், அவர்களை மகிமைப்படுத்தவும், வல்லமை உள்ளதாயும் இருக்கிறது.

மூன்றிலொன்றோனே, உம்மை துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன்.

பிதாவாகிய தேவனே, நான் அவருடைய ஆடாகவும், ஆபரணமாகவும், பங்காகவும் இருப்பதற்கு நீர் என்னை கிறிஸ்துவினிடத்தில் தந்திருக்கிறீர். கிருபையின் நிறைவோடே உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, நீர் என்னை ஏற்றுக்கொண்டும், எனக்குத் துணையாகவும், என்னை அணைத்துக்கொண்டும் இருக்கிறீர். கிருபையின் நிறைவோடே உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

பரிசுத்த ஆவியானவரே, இயேசுவை என் இரட்சகராக நீர் எனக்கு வெளிப்படுத்தியும், எனக்குள்ளே விசுவாசத்தை விதைத்தும், என் இருதயக் கடினத்தை அடக்கியும், என்றென்றும் கிறிஸ்துவுடனே என்னை ஒன்றிணைத்தும் இருக்கிறீர் கிருபையின் நிறைவோடே உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

பிதாவாகிய தேவனே, என் ஜெபத்தைக் கேட்பதற்கு சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறீர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, என் விண்ணப்பங்களை விசாரிப்பதற்கு உமது கரம் நீட்டப்பட்டிருக்கிறது.

பரிசுத்த ஆவியானவரே, என்னுடைய தேவைகளை எனக்கு காண்பிக்கிறதற்கும், எனக்கு வார்த்தைகளை வழங்குவதற்கும், என்னோடு ஜெபிப்பதற்கும், நான் ஜெபத்திலே சோர்ந்து போகாமல் இருப்பதற்கு என் பெலவீனங்களிலே எனக்கு உதவி செய்கிறவருமாய் இருக்கிறீர்.

திரித்துவ தேவனே, நீர் அண்டசராசரத்தை ஆள்பவர், உமது ராஜ்யத்திற்கும் என் ஆத்துமாவுக்கும் ஏற்றவைகளை கேட்கும்படி எனக்கு கட்டளை விதித்திருக்கிறீர்.

மூவித நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றவனாக நான் வாழ்ந்து ஜெபிக்கக்கடவன். ஆமென்.

The Valley of Vision (The Collection of Puritan Prayers and Devotions)
The Trinity 
Translation: Collin

_*_


கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்