23/05/2024 அன்று இளம் மிஷினரி தம்பதி வட அமெரிக்காவில் கொல்லப்பட்டனர்

"என் இதயம் ஆயிரம் துண்டுகளாக நொறுங்கியது. நான் இதுவரை இப்படி ஒரு வலியை அனுபவித்தது இல்லை. உங்கள் அநேகருக்கு தெரியும், என் மகள் டேவியும், மறுமகன் நடாலீ லோயடும் ஹேய்ட்டி என்ற நாட்டில் முழுநேர மிஷினரிகளாக இருக்கிறார்கள். நேற்று மாலை (23/05/2024) இவர்கள் ஒரு கும்பலால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் ஒன்றாக பரலோகத்திற்குச் சென்றிருக்கிறார்கள். தயவுசெய்து எங்கள் குடும்பத்திற்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். உங்கள் ஜெபம் எங்களுக்கு மிகவும் அவசியம். நாங்கள் பலப்பட வேண்டும். தயவுசெய்து லோயடுவின் குடும்பத்திற்காகவும் ஜெபம் செய்யுங்கள். இப்போது என்னிடம் வேறு வார்த்தைகள் இல்லை." - பென் பேக்கர்.

ஜெபம்: இரக்கமுள்ள பரலோக தந்தையே, டேவி-நடாலி லோயட் தம்பதியினருக்காக நன்றி. தங்கள் உயிரை துட்சமாக எண்ணி உமது நற்செய்தியை ஹேய்ட்டி நாட்டிற்கு எடுத்துச்சென்ற அவர்களுடைய வாழ்க்கை எங்களை அசைக்கட்டும். இவர்கள் வாழ்ந்த சம காலத்தில்தான் நாங்களும் வாழுகிறோம். எங்களுடைய சோம்பேறித் தனத்தை மன்னியும். உமது மீட்கும் நற்செய்தியை அழிந்துகொண்டிருக்கிற மக்களுக்கு கொண்டு செல்லும் கருவிகளாக எங்களை மாற்றும். முற்காலத்தில் எங்கள் மூதாதையரிடம் இருந்த ஆத்தும பாரத்தை எங்களுக்கும் தாரும். எங்களை துன்புறுத்துபவர்களையும் மன்னித்து, உமது அன்பை மாத்திரம் காட்டும் சுத்தமான இருதயத்தை எங்களுக்குள் உருவாக்கும். விஷேசித்தவிதமாக, ஹேய்ட்டி நாட்டில் மிஷினரிகளைத் தாக்கிய கும்பலை நினைக்கிறோம். அவர்களை உம் அன்பின் நற்செய்தி சந்திக்கட்டும். டேவி-நடாலி லோயட் இளம் தம்பதியின் குடும்பங்களுக்காக ஜெபிக்கிறோம். அவர்கள் பெற்றோருக்கும், உடன் பிறந்தோருக்கும், சபை மக்களுக்கும் ஆறுதலின் இறைவன் ஆறுதல் அளிப்பீராக. இயேசு கிறித்துவின் பெயரில் ஜெபம் கேளும் எங்கள் நல்ல தந்தையே, ஆமேன்.

"இரத்த சாட்சிகளுடைய இரத்த துளிகள், 
திருச்சபையின் விதையாய் இருக்கிறது."

கருத்துகள்