மறுபிறப்பு - சுவிசேஷம் - அதிகாரம் - ஆட்சி

நாம் மறுபிறப்பு என்று சொல்லும் பொழுது (யோ 3:3)
அதன் அர்த்தம்
ஒரு காலத்தில் நாம் அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாக இருந்தோம்
இப்பொழுதோ கர்த்தருடைய பெரிதான கிருபையினால்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீது உள்ள விசுவாசத்தின் மூலம்
முதலாம் உயிர்த்தெழுதலுக்கு பங்குள்ளவர்கள் ஆனோம் 
ஆம் மறுபடியும் ஜெனிபிக்கப்பட்டோம் (பிறப்பிக்கப்பட்டோம்) (எபே 1,2)

நாம் உன்னதங்களில்
கிறிஸ்துவோடு அரியணையில் அமர்த்தப்பட்டோம்
கர்த்தர் நமக்கு கொடுத்த அதிகாரத்தினால் (சுவிசேஷம் - கொலோ 1)
இந்த உலகத்தை ஆட்சி புரிகிறோம். (1 யோ 5:4)
நாம் சொல்லும் நற்செய்தி வெறுமையாக திரும்பாது. (ஏசா 55:11, அப் 13:48)

சாத்தான் சிலுவையில் தோற்கடிக்கப்பட்டான் (கொலோ 2:15)
பாவத்தின் கூர் ஒடிக்கப்பட்டது (1 கொரி 15)
 முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கு பெற்றவர்களின் மீது அதற்கு ஒரு அதிகாரமும் இனி இல்லை.
 அது அவர்களை மேற்கொள்ளாது. (ரோமர் 6:14)

ஆகையால் எழுந்திருந்து அவருடைய நாமத்தை தைரியமாக அறிவிப்போம்.
கர்த்தர் நம் சார்பில் இருக்கிறார். அவருக்கு தோல்வி இல்லை. வெற்றி நமதே!

அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவருக்கு ஸ்தோத்திரம்.

(June 7, 2023)

கருத்துகள்