பாவ அறிக்கையும் விண்ணப்பமும் - தூய்மைவாதிகளின் ஜெபம்

பரிசுத்தமான தேவனே,
நான் எண்ணற்ற முறை பாவம் செய்திருக்கிறேன்,பெருமை, அவிசுவாசம் உடையவனாய், உமது வார்த்தையில் உமது மனதை கண்டுபிடிக்கத் தவறி, அன்றாட வாழ்வில் உம்மைத் தேடுவதைப் புறக்கணித்திருக்கிறேன்.
என்னுடைய மீறுதல்களும் குறைபாடுகளும் குற்றச்சாட்டுகளின் பட்டியலை என் முன்னே வைக்கின்றேன். 
ஆனால் நான் உம்மை ஸ்தோத்தரிக்கின்றேன், ஏனென்றால் அவைகள் எனக்கு எதிராக நிற்காதபடிக்கு அவை எல்லாம் கிறிஸ்துவின் மேல் சுமத்தப்பட்டிருக்கின்றன. 
என் கேடுகள் மீது நீர் ஜெயங்கொள்ளும், நான் அவைகளை மேற்கொள்வதற்கு எனக்கு கிருபை அருளும். 
மாம்ச இச்சைகளோ மனதின் இச்சைகளோ என் ஆவியை கீழ்படுத்தாதபடிக்கு என்னைக் காத்துக்கொள்ளும், ஆனால் நீர் என்னை சுதந்திரத்திலும் அதிகாரத்திலும் ஆண்டுகொள்ளும். 
எனது பல வேண்டுதல்கள் மறுக்கப்பட்டதைக் குறித்து நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன், 
நான் தவறாக கேட்டு அவைகளை பெற்றுக்கொள்ளவும் இல்லை, 
நான் இச்சைகளிலிருந்து ஜெபித்து நிராகரிக்கப்பட்டேன், 
நான் எகிப்துக்காக ஏங்கினேன், வனாந்திரம் கொடுக்கப்பட்டது.  
எனது தவறான வேண்டுதல்களுக்கு பதில் அளிக்காமலிருந்து, அதை ஏற்றுக்கொள்வதற்கு  என்னைத் தயார்படுத்தி, நீர் உமது வேலையை பொறுமையாய் செயல்படுத்தும்;
ஒவ்வொரு தவறான ஆசையிலிருந்தும், ஒவ்வொரு அடிப்படையான ஆசையிலிருந்தும், உமது ஆளுகைக்கு முரணான எல்லாவற்றிலிருந்தும் என்னை சுத்திகரியும்.
உமது ஞானத்திற்காகவும் உமது அன்பிற்காகவும்,
நான் உட்படுத்தப்படுகிற அனைத்து சிட்சைகளுக்காகவும்,
அல்லது என் பொன்னை புடமிட்டு என் களிம்பை அகற்றுவதற்கு சில சமயங்களில் என்னை உலையில் போடுவதற்காகவும், உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
நான் இன்பத்திலே வாழ்ந்து என் பாவங்களில் நிலைத்திருப்பதையோ, 
அல்லது அவைகள் சோதனையினால் எரிக்கப்படுவதையோ,
இவற்றில் ஒன்றை நீர் என்னை தெரிவு செய்ய சொல்லுவீரானால்,
பரிசுத்தமான உபத்திரவத்தை எனக்கு தந்தருளுவீராக. (என்று கேட்பேன்)
எல்லா தீய பழக்கங்களிலிருந்தும், முந்தைய பாவங்களின் ஒவ்வொரு பெருக்கத்திலிருந்தும், உமது கிருபையின் பிரகாசத்தை மங்கச்செய்யும் எல்லாவற்றிலிருந்தும், உம்மில் மனமகிழ்ச்சி அடைவதைத் தடுக்கும் எல்லாவற்றிலிருந்தும்,  என்னை விடுவித்தருளும்.
அப்பொழுது நான் நீதிமானாய் இருப்பதற்கு உதவிய எஷூரனின் தேவனாகிய உம்மை ஸ்தோத்தரிப்பேன்.
ஆமென் !!!!!

───── ♰ ─────

The Valley of Vision (The Collection of Puritan Prayers and Devotions)
CONFESSION AND PETITION 
Translation: Collin




கருத்துகள்