சத்தியத்துக்காக எரிந்து மடிந்த ஜோன் ஹஸ் ஜூலை 6

திருச்சபை வரலாற்றில் இன்று, 6 July

ஜோன் ஹஸ் 1415 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி தனது எழுத்துகளின் மூலம் சத்தியத்தை வெளிக்கொண்டு வந்ததற்காக ரோமன் கத்தோலிக்க சபையால் உயிருடன் எரித்து கொள்ளப்பட்டார். ஆனால் இந்த தீய ரோமன் கத்தோலிக்கரால் சீர்திருத்த இயக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

சீர்திருத்தவாதியான ஜோன் ஹஸ்ஸின் காலடியில் நெருப்பை ஏற்றி வைக்கவிருந்தபோது மரணதண்டனையை நிறைவேற்றும் நிர்வாகி, ​​​​"இப்போது நாம் வாத்துக்கறி சமைப்போம்" என்று கூறினான். (போஹேமியன் மொழியில் ஹஸ் என்றால் வாத்து என்று பொருள்.) அதற்கு ஹஸ் *"ஆம், ஆனால் நூறு ஆண்டுகளுக்குப் பின் நீங்கள் எட்ட முடியாத கழுகு வரும்."* என்று பதிலளித்தார்.
சரியாக 100 ஆண்டுகளுக்குப் பிறகு, 31 அக்டோபர் 1517, சனி அன்று தேவன் மார்ட்டின் லூதரை எழுப்பி, பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில் சீர்திருத்த இயக்கத்தைத் தொடங்கினார்.

“போப்போ கார்டினல்களோ [உண்மையான] புனித, உலகளாவிய, கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் அல்ல. ஏனெனில், கிறிஸ்து ஒருவரே அந்த திருச்சபையின் தலைவராக இருக்கிறார்." என்று ஹஸ் எழுதினார்.

தலைமைத்துவ சர்ச்சைக்கு எதிராக:
 அவருடைய சகாப்தத்தில் பெரும்பாலான ரோமன் கத்தோலிக்க தலைவர்கள் உண்மையில் கிறிஸ்துவின் இறையாட்சியை இகழ்ந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டிய ஹஸ், "இயேசு கிறிஸ்துவை ஆண்டவர் (அல்லது தலைவர்) என்று நாள்தோரும் பிரசங்கிப்பவர்களையும் அழைப்பவர்களையும் வெறுக்கும் அளவுக்கு இந்த மதகுருமார்கள் தாழ்ந்துவிட்டார்கள்" என்று தம் மன வேதனையை பதிவிட்டார்.

பரிசுத்த வேதத்தைப் படிக்கவும், அதை விளக்கி பிரசங்கிக்கவும் நமக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரத்திற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோம்.

ஜான் ஹஸின் முழக்கத்தை நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன்,
"சத்தியத்தைத் தேடு,
சத்தியத்தைக் கேள்,
சத்தியத்தைக் கற்பி,
சத்தியத்தை நேசி,
சத்தியத்தைக் கடைப்பிடி,
மேலும் சத்தியத்துக்காக மரணம் வரை போராடு."

#ChurchHistory #ChurchHistoryToday #ChurchHistoryTamil

கருத்துகள்