பரலோகத்தில் தேவனோடு | சங்கீதம் 73:25
பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை. சங் 73:25
நாம் இரட்சிக்கப்பட்டது ஊழியம் செய்ய என அனேகர் கூற கேட்டிருப்பீர்கள். ஒரு வகையில் அது உண்மை என்றாலும் "நாம் இக்கியத்திற்காக இரட்சிக்கப்பட்டிருகிரோம்" என வேத போதகர் A.W Pink கூறுகிறார். அ்போஸ்தலனாகிய பவுல் இக்கருத்தை ஊர்ஜீதப்படுத்தும் வண்ணம் பின் வருமாறு எழுதுகிறார், "இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன்" (1 கொரி 1:9), "இந்தத் தேகத்தைவிட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும்" (2 கொரி 5:8), "இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்." (1 தெச 4:17)
நம் ஆண்டவர் மறித்துக்கொண்டிருந்த கள்ளனிடம் "நான் உனக்கு பரதீசில் ஓரிடம் தருவேன்" என்று சொல்லவில்லை. மாறாக "இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய்" என்று சொன்னார். (லூக் 23:42,43)
இயேசு கிறிஸ்து "பிதாவின் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போவேன்" என்றோ, "ஆயத்தம் பண்ணிய ஸ்தலத்திற்கு கொண்டு போவேன்" என்றோ சொல்லாமல், "நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன்." என்றார்.
நாம் பரலோகம் செல்வது நம்மை விட்டு பிரிந்த நம் சொந்தங்களை மீண்டும் பார்போம் என்பதாலோ, தங்க வீதி, ராஜ மாளிகை பரலோகத்தில் கிடைக்கப்பெறுவோமெனினும் கிறிஸ்துவோடு ஐக்கியமாக இருக்க போகிறோம் என்பதே அதிக அதிகமான சந்தோஷம்.
பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை. சங் 73:25
நம்மை ரட்சித்த தேவனை எண்ணிலா நன்றி நாவாற சொல்லி வாழ்த்துவோம். நம் தேவனும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மாத்திரமே சகல துதியும் கணமும் மகிமையும் மாட்சிமையும் வல்லமையும் இன்றும் என்றும் சதாகாலங்களிலும் உண்டாகட்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக