ஓ, ஆண்டவராகிய தேவனே, நான் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்படி எனக்கு கட்டளை கொடுத்தீர். உம்மையன்றி எனக்கு வேறெந்த புகலிடமோ, என்னை சுத்திகரிக்கும் நீரூற்றோ, கற்பாரையான அஸ்திபாரமோ, பெற்றுக்கொள்ளும்படியான முழுமையோ, இழைப்பாருதலைக் கொடுக்கும் விடுதலையோ கிடையாது. நீரே என் எல்லாம்.
அங்கே சிலுவையில் செம்புலப் பெயல்நீர்போல ஓடிய அவரது இரத்தமும் தண்ணீரும் என் விசுவாச அறிக்கையிலும் அனுபவத்திலும் ஒன்றர கலந்திருக்க வேண்டும்.
பாவத்தினாலுண்டாகிற மாசு மற்றும் குற்றவுணர்வைக்குறித்த உணர்த்துதலை சமமாக நான் பெற வேண்டும். ராஜாதி ராஜாவும் இரட்சகருமான கிறிஸ்து இயேசு எனக்கு தேவை என்பதை நான் உள்ளாற உணர்ந்து மனந்திரும்புதலுக்காகவும் பாவமன்னிப்புக்காகவும் உம்மை நோக்கி வேண்டி மன்றாட உதவி செய்யும். பரிசுத்த வாழ்க்கையை நேசித்து, இருதயத்தில் சுத்தமுள்ளவனாக இயேசுவின் சிந்தையை தரித்து அவரது அடிச்சுவட்டை பின்பற்றுவதில் ஜாக்கிறதையாக இருக்க உதவி செய்யும்.
என்னுடைய சொந்த அறிவை சார்ந்துகொள்ளாதபடி, அறிவில் சிறந்தவரும் ஒருபோதும் தவறிழைக்காதவரும், ஒருபோதும் எங்களை காயப்படுத்தாத கருணையுடையோரும், ஒருபோதும் எங்களை நொறுக்கிப் போடாதபடி மிக மென்மையாக இருக்கிறவருமாகிய அவரது தெய்வீக பராமறிப்பின் கீழ் நான் இருந்து மகிழ வேண்டும்.
என்னுடைய நடத்தையோ, முன்கோபமோ யாருக்கும் இடறலாய் இராதபடிக்கு ஜாக்கிரதையாக நடந்துகொள்ள உதவி செய்யும். என்னை சுற்றியுள்ளவர்கள் கிறிஸ்துவை அறிந்துகொள்ளும்படியான வாழ்க்கை வாழ உதவி செய்யும். எனக்கு கிடைக்கிற சந்தர்ப்பங்களை ஒருபோதும் நழுவ விடாமல் நன்மை செய்வதில் தரித்திருக்க கிருபை செய்யும்.
என்னுடைய ஆஸ்தியைக் குறித்து வீண் பெருமை கொள்ளாதபடியும், ஆடம்பரித்தில் மூழ்கிவிடாதபடியும் இருக்க உதவி செய்யும். என் ஆஸ்தியையும் செல்வத்தையும் மற்றவர்களை தாங்குவதற்கும் பராமறிப்பதற்கும் பயன்படுத்த எனக்கு கிருபை தாரும்.
நான் மற்றவர்களுக்கு கருணைகாட்டுவதில் விவேகத்தோடு நடந்துகொள்ள இதவி செய்யும். எந்த மனிதனுக்கும் கடன்பட்டுவிடாதபடி, உண்மையில் தேவையுள்ளோருக்கு தவறாது உதவி செய்ய சத்துவம் தாரும். நான் இந்த கடமையைச் செய்கையில் உண்மையான இரக்க குணத்தோடும், மன்னிக்கும் மனப்பக்குவத்தோடும் இருந்து மகிழ உதவும். மொத்தத்தில் இந்த உலகிற்கு இயேசுவைக் காட்ட உதவி செய்யும்.
ஆமேன்!