குறிப்பிட்டோருக்கான பாவ பரிகார பலி - வசன ஆதாரங்கள்

• இயேசுவின் நோக்கம்: சிலுவையின் மூலம் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்; எல்லா ஜனங்களையும் அல்ல.

"அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் »தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்« என்றான்." மத்தேயு 1:21

அநேகருக்காக ஜீவனைக் கொடுத்தார்; எல்லாருக்கும் அல்ல.
"அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், »அநேகரை மீட்கும்பொருளாகத்« தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்." மத்தேயு 20:28
"இது பாவமன்னிப்புண்டாகும்படி »அநேகருக்காகச் சிந்தப்படுகிற« புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது." மத்தேயு 26:28
"அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், »அநேகரை மீட்கும்பொருளாகத்« தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்." மாற்கு 10:45
"கிறிஸ்துவும் »அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு« ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்." எபி 9:28

செம்மரி ஆடுகளுக்காக; வெள்ளாடுகளுக்காக அல்ல.
"நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் »ஆடுகளுக்காகத் (Sheep) தன் ஜீவனைக் கொடுக்கிறான்."«
"நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; »ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்."« யோவான் 10:11,15
நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் தான் சுவிஷேசத்தை விசுவாசிப்பார்கள்.
"புறஜாதியார் அதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். »நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்."« அப் 13:48

தேவன் தமது சுயரத்தத்தினாலே குறிப்பிட்ட சிலரை (சபையை) சம்பாதித்தார்; எல்லோரையும் சம்பாதிக்கவில்லை.
"ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் »தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை« மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்." அப் 20:28

நாமெல்லாருக்காக - இரட்சிக்கப்பட்டவர்களாக திருச்சபையில் இருக்கிற நாமெல்லாருக்காக. (சூழல்: ரோம் நகர திருச்சபைக்கு எழுதப்பட்ட கடிதம்)
"32 தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் »நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர்,« அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? 33 தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். 34 ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல்செய்கிறவரும் அவரே." ரோமர் 8:32-34

திருச்சபையாகிய மனவாட்டிக்காக மரித்த கிறிஸ்து
"25 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, 26 தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், 27 கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் »தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்."« எபேசியர் 5:25-27

தமது சகோதரருக்கு ஒப்பான தேவகுமாரன்
"அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் »தம்முடைய சகோதரருக்கு ஒப்பாக« வேண்டியதாயிருந்தது." எபி 2:17

எல்லா ஜனங்களிலும் ஜாதிகளிலும் இருந்து குறிப்பிட்ட சிலரை வேறுபிரித்து அவர்களை தம்முடைய இரத்தத்தினால் மீட்டுக்கொண்டார்.
"9 தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து »எங்களைத்« தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, 10 எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்." வெளி 5:9-10

கருத்துகள்