மிகச் சிறந்த புத்தகம்: பரிசுத்த வேதாகமம் 📖

     வேதம் தேவனுடைய அனந்த ஞானத்தை உள்ளடக்கியது: மனிதனுடைய நிலை, இரட்சிப்பின் வழி, பாவிகளின் நியாயத்தீர்ப்பு, மற்றும் விசுவாசிகளின் மகிழ்ச்சி போன்ற சத்தியங்களை வேதத்திலிருந்து மட்டுமே நாம் அறிந்துகொள்ள முடியும். வேதத்தின் சத்தியங்கள் யாவும் பரிசுத்தமானவைகளும், அதன் கற்பனைகள் யாவும் இசைவாய் கட்டப்பட்டவைகளும், அதன் வரலாறுகள் யாவும் உண்மையானவைகளும், அதன் தீர்ப்புகள் யாவும் மாறாதவைகளுமாய் இருக்கிறது. நீங்கள் ஞானமாய் இருக்க வேதத்தை வாசியுங்கள். பாதுகாப்பாய் இருக்கும்படி வேதத்தை விசுவாசியுங்கள். பரிசுத்தமாய் இருக்கும்படி வேதத்தைப் பின்பற்றுங்கள். பாதையைக் காட்டும்படியான வெளிச்சத்தையும், ஆத்துமாவை ஆதரிக்கும்படியான ஆகாரத்தையும், உற்சாகப்படுத்தும்படியான ஆறுதலையும் வேதம் கொண்டிருக்கிறது. 

வேதமே வழிகாட்டி: 🧭
     இந்த வேதம் மோட்ச பிரயாணிகளின் வரைபடமாகவும், மோட்ச யாத்திரிகளின் தாங்கும் கோலாகவும், தேவனுடைய மாலுமியின் திசைகாட்டியாகவும், தேவனுடைய போர் வீரரின் பட்டயமாகவும், கிறிஸ்தவனின் அதிகாரப்பத்திரமாகவும் இருக்கிறது. வேதத்தில் பரதீசு மறுசீரமைக்கப்படுகிறது, பரலோகம் திறக்கிறது, நரகம் அம்பலப்படுத்தப்படுகிறது. 


     கிறிஸ்துவே வேதத்தின் மாபெரும் பொருளாக இருக்கிறார். நமது நன்மைக்காக வேதம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தேவனை மகிமைப்படுத்துவதே வேதத்தின் இலக்காக இருக்கிறது. வேதமே நமது நினைவுகளாகவும், நமது இருதயத்தை ஆளுகிறதாகவும், நமது கால்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும். 

வேதமே நமது இருதயத்தை ஆளுகை செய்ய வேண்டும்.


     வேதத்தை நிதானமாக, அடிக்கடி, ஜெப சிந்தையோடு வாசியுங்கள். இது செல்வக்கிடங்காகவும், மகிமையின் பரதீசாகவும், மகிழ்ச்சியின் ஆறாகவும் இருக்கிறது. இம்மையில் நமது நடைமுறை வாழ்வில் பயன்படுத்துவதற்காகவே வேதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மறுமையில் இந்த வேதம் திறக்கப்பட்டு என்றென்றும் நினைவு கூறப்படும். 

வேதத்தை நிதானமாக, அடிக்கடி, ஜெப சிந்தையோடு வாசியுங்கள்.

     மனிதனின் மிகப்பெரிய பொருப்பு என்னவென்பதை வேதமே நமக்கு காட்டுகிறது. இந்த பொறுப்பை நிறைவேற்றும்படி உழைக்கிறவனுக்கு வெகுமதியும், பரிசுத்த வேதத்தை அலட்சியமாய் எண்ணுகிறவனை கண்டனம் செய்கிறதாகவும் வேதம் இருக்கிறது.

தொடர்புக்கு:
Pastor D Stephenson,
Evangelical Baptist Church,
Madurai.
+91 99941 81010
ebcmdu@gmail.com
https://evangelicalbaptistchurch.in/


கருத்துகள்