நிரூபங்களில் அப்போஸ்தலர்களுடைய வாழ்த்து மடல்களில் திரித்துவத்தின் முதல் இரண்டு நபர்களையும் பதிவு செய்து பரிசுத்த ஆவியானவரைத் தவிர்த்தது ஏன்? இது தான் கேள்வி.

பதில் 1: வாழ்த்து மடல் என்பது தொலைதூரத்தில் இருந்து ஒருவர் அனுப்புவது. அப்படி அனுப்புகையில், அனுப்புனரோடு பயனம் செய்கிற (அ) தங்கியிருக்கிற ஏனைய வேண்டப்பட்டவர்களுடைய வாழ்த்துதலையும் சேர்த்து பதிவு செய்வது வளக்கம். கவணியுங்கள், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுதலைத் தொடர்ந்து பரலோகத்திற்கு ஏறிச்சென்றுவிட்டார். அதன் தொடர்ச்சியாக தேற்றரவாளராகிய பரிசுத்த ஆவியான தேவன் மனிதர்களோடு இருக்கும்படியாக அனுப்பிவைத்தார் (யோவான் 16:7). இப்போது, சபை துவங்கப்பட்டுவிட்டது. சபையானது பரிசுத்த ஆவியானவருடைய ஐக்கியத்தில் இருக்கிறது. சபையும் பரிசுத்த ஆவியானவரும் ஒன்றினைந்து இருப்பதால் சபைக்கு அனுப்பும் வாழ்த்து மடலில் திரித்துவத்தின் மூன்றாம் நபர் இடம் பெற வில்லை.

பதில் 2: திரித்துவத்தைப் பற்றிய போதனையில் "ஃபிலியொக்வீ" என்ற பதத்தை மேற்கத்திய கிறிஸ்தவம் பயன்படுத்தி வந்தது. அதையே நாமும் ஏற்று நம்புகிறோம். இதன் பொருள் என்னவென்றால், பரிசுத்த ஆவியான தேவன் திரித்துவத்தின் முதல் இரண்டு நபர்களான பிதாவாகிய தேவனிலிருந்தும் குமாரனாகிய  தேவனிலிருந்தும் புறப்பட்டு வருகிறவராக இருக்கிறார். பரிசுத்த ஆவியான தேவன் பிதாவாகிய தேவனிடம் இருந்து மட்டுமே புறப்பட்டு வருகிறவராக இருக்கிறார் என்ற எதிர்மறையான போதனை கிழக்கு கிறிஸ்தவத்தில் இருந்து வருகிறது. நாம் ஏற்கும் திரித்துவத்தைப்பற்றிய போதனையின்படி, பிதா மற்றும் குமாரனின் கிருபை ஒருவரோடு இருக்கையில் உள்ளியல்பாகவே பரிசுத்த ஆவியானவரின் கிருபையும் அவருக்கு கிடைக்கப்பெறுகிறது என்பது திண்ணம். "கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்." 2 கொரி 13:14

கருத்துகள்