புத்தாண்டு பிராத்தனை

 என் ஆண்டவரே, நீர் நீட்டித்துக் கொடுக்கும் இந்த ஆண்டில் உமது சமூகத்திலும், உமது ஊழியத்திலும், உமது மகிமைக்காகவும் என் வாழ்க்கையை நான் வாழாவிட்டால் அது வீனானதாகவே இருக்கும். 

இந்த புதிய ஆண்டிலும் எனக்கான இக பர நன்மைகளைத் தரும் ஆசீர் ஊற்றான உம்மையே என் நம்பிக்கையாக கொண்டுள்ளேன். உமது தொடர்ந்து வரும் கிருபையால் என்னை நிறப்பி, என் சிந்தையும், என் பேச்சும், என் செயலும், என் ஒவ்வொரு முயற்சியும் உம் அன்பை பிரதிபளிக்கிறதாகவும், உம்மை மாத்திரம் மகிமைப்படுத்துகிறதாக, உம்மை மாத்திரம் உயர்த்துகிறதாக, உம் ராஜியத்தை விருத்தியடையச் செய்கிறதாகவும் இருக்கத்தக்கதாக என்னை ஆளுகை செய்து பயன்படுத்தும். பரிசுத்தமான ஜீவியத்தைத் தாரும்; பாதுகாரும். 

நீர் என் நம்பிக்கையாக இருப்பதால், என் படகை நான் அறியாத கடற்பகுதியான இந்த புதிய ஆண்டினூடாக செலுத்துகிறேன். பிதாவியாகிய தேவன் என் துறைமுகமாகவும்,  குமாரனாகிய தேவன் என் சுக்கான் பிடியாகவும், பரிசுத்த ஆவியான தேவன் என் பாய்மரத்துணியாகவும் இரும். உம் அண்டை சேர்வதே என் தஞ்சம்;  உம்மால் இயக்கப்படுவதே என் பாதுகாப்பு; பாதை காட்டும் மாதேவன் உம்மையே சார்ந்து என் படகை செலுத்துகிறேன்.

இடைக்கச்சை கட்டப்பட்டவனாக, எரியும் விளக்கோடு, உம் அழைப்பின் சத்தத்தைக் கேட்கும் திறந்த காதுகளோடு, அன்பினால் நிறைந்த இதயத்தோடு, விடுதலையின் ஆவியோடு பரலோகப் பாதையில் பயணிக்க கிருபை செய்யும். 

உமது கிருபையால் என்னை பரிசுத்தப்படுத்தும்; ஆறுதற்படுத்தி உற்ச்சாகப்படுத்தும். உமது ஞானத்தால் நான் நடக்க வேண்டிய வழியை போதித்து, உமது வலக்கரத்தால் என்னை வழிநடத்தும். உமது ஆலோசனையால் என்னை போதியும், உமது கட்டளைகளால் என்னை ஆராய்ந்து பாரும். உமது சமூகத்தால் என்னை நிலைவரப்படுத்தும். 

இந்த ஆண்டு முழுவதும் உமக்கு பயப்படும் பயத்தாலும், உமது இரட்சிப்பின் சந்தோஷத்தாலும்  என்னை தயவாக நிறப்பும். 

இந்த புதிய ஆண்டை உம்முடைய கரங்களில் தந்து எவ்விதக் கவலையும் இன்றி உம்மையே நம்பி நுழைகிறேன், வேண்டுதலைக் கேட்கும் என் ஆண்டவரே, ஆமேன்.


Source: The Valley of Vision (The Collection of Puritan Prayers and Devotions)

(திருத்தியும் மாற்றியும் எழுதப்பட்டது)



கருத்துகள்