முடிந்தது - இரட்சகரின் வெற்றி முழக்கம்

18:4:2025 அன்று விருதுநகரில் சகோ. சிங்கராஜ் விக்டர் அவர்கள் மேற்பார்வையில் இயங்கிவருகின்ற கிறிஸ்தவ சபையில் சகோ. ஆண்ட்ரூ கிங்ஸ்லி ராஜ் பகிர்ந்துகொண்ட சிலுவை தியான செய்தியின் குறிப்பு 


இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.  (யோவான் 19:30)

இது கர்த்தருடைய வார்த்தை. இந்த வார்த்தையின் மூலமாக கர்த்தர்  நம்மோடு பேசுவாராக.

இயேசு கிறிஸ்து சிலுவையில் மொழிந்த ஆறாம் வார்த்தை எனக்கு கருப்பொருளாகக் கொடுக்கப்பட்டதற்காக கர்த்தரைத் துதிக்கிறேன். இந்த வார்த்தை கிறிஸ்துவின் வெற்றியைப் பரைசாற்றுகின்ற வார்த்தை. கடந்த இரண்டு அமர்வில் நம் இரட்சகர் இயேசு கிறிஸ்து சிலுவையில் பேசிய நான்காவது மற்றும் ஐந்தாவது வார்த்தைகளை சிந்தித்தோம். அங்கே இயேசு கிறிஸ்து என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று பிதாவை நோக்கி கதரினார், சிலுவையில் படுவேதனையின் நடுவில் தாகமாய் இருக்கிறேன் என்று மனிதரை நோக்கி கெஞ்சினார். ஆனால் இப்பொழுது அவருடைய வார்த்தை ஒரு கெம்பீர ஜெய முழக்கத்தை உள்ளடக்கி இருக்கிறதை நாம் கவணிக்க முடியும்.

இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, … ஆவியை ஒப்புக்கொடுத்தார்.

இங்கே நம் இரட்சகர் பேசிய வார்த்தை முடிந்தது.

இயேசு கிறிஸ்து பேசிய அராமாயிக் மொழியில் இந்த வார்த்தை TETELESTAI. இந்த வார்த்தையை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது என்றால், எல்லாம் முடிக்கப்பட்டது, பூரணமாக முடிக்கப்பட்டது”.

அதாவது, நாம் ஒரு கட்டுரை, அல்லது புத்தகம் எழுதுகிறோம் என்றால், அதன் கடைசி அத்யாயத்தின் கடைசி வார்த்தையை எழுதி முடித்து ஒரு முற்றுப்புள்ளி வைப்போமே அதே அர்த்தத்தில் நம் இரட்சகர் சிலுவையில் இந்த வார்த்தையை மொழிந்தார். இந்த வார்த்தையின் பயன்பாட்டைக்குறித்துப் பார்த்தால் இந்த வார்த்தை எவ்வளவு ஆளமானது என்பதை அறிந்துகொள்ளலாம். நாம் வங்கியில் ஒரு மிகப்பெறிய தொகையை கடனாக வாங்குகிறோம் என்றால், நாம் அதற்கான வட்டியை மாதந்தோரும் செலுத்த வேண்டும். கடனின் அசல் தொகையை செலுத்தி முடிப்பது வரை நாம் ஓயமுடியாது. வாங்கிய கடனை முழுவதுமாக செலுத்தி கடைசி காசு கொடுத்து தீரும்பொழுது அங்கே முழுவதும் செலுத்தி முடித்தாயிற்று – It is paid in full என்று ஒரு முத்திரை அடிக்கப்படும். அதேபோல, பிதாவாகிய கடவுள் குமாரனாகிய கடவுளை என்ன நோக்கத்திற்காக இந்த பூமிக்கு அனுப்பினாரோ அதை தான் முழுவதுமாக செய்துவிட்டேன் என முழங்குகிறார். தேவனுடைய குணங்களை முழுமையாக காட்சிபடுத்தினார். தேவன் அன்பாக இருக்கிறார், தேவன் இரக்கமாக இருக்கிறார். இவை தேவனுடைய குணாதிசயங்கள் தான். ஆனால், அதே தேவன் நீதிபரராக இருக்கிறார். பாவத்தை பாவத்தை செய்கிறவர்களையும் தீவிரமாக வெறுக்கிறவராக இருக்கிறார். இந்த தேவ கோபம் மனிதர்களாகிய நம்மனைவர்மீதும் வந்திருக்கவேண்டியது. ஆனால், தேவன் நம்மனைவருடைய பாவத்தையும் தம் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின்மீது வைத்தார். ஆகவே நம் மீது கொட்டப்படவேண்டிய தேவனுடைய கோபம் அனைத்தையும் சிலுவையில் இயேசு கிறிஸ்துவின் மீது கொட்டித் தீர்த்தார். இப்படியாக தேவன் தம்முடைய குணாதிசயங்கள் அனைத்தையும் காட்சிப்படுத்தினார்.

மனிதனுடைய பார்வையில் சிலுவை என்பது ஒரு தோல்வியின் சின்னமாக இருந்திருக்கலாம், மனிதனை தண்டிக்கிற ஒரு சின்னமாக இருந்திருக்கலாம், ஒரு அவமானத்தின் சின்னமாக இருந்திருக்கலாம். ஆனால் தேவனுடைய பார்வையில், சிலுவை ஒரு வெற்றியின் சின்னம், இந்த சிலுவை மனிதனை நித்திய மரண தண்டனையிலிருந்து காப்பாற்றுகிற சின்னம், மனிதனுடைய பாவத்தைப் பரிகரித்து, அவனுடைய பாவ அவல நிலையைப் போக்கி, அவனுடைய பாவமாகிய நிர்வானத்தை மூடி அவனை நன்மையால் அலங்கரிக்கிற சின்னம். நான் இங்கே கழுத்தில் தொங்கவிடப்படுகின்ற சிலுவையைக் குறித்துப் பேசவில்லை. இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தைக் குறித்துப் பேசிக்கொண்டு இருக்கிறேன். இரட்சகரின் சிலுவையில் தேவனுடைய ஓங்கிய கரம் தம் ஒரே பேறான குமாரனை வெட்டியது. நம் ஆதி பெற்றோம் மீறுதலுக்குட்பட்டபோது அங்கே ஒரு ஆட்டை வெட்ட ஓங்கிய கரம் மெய்யான பழுதற்ற பலியாகிய கிறிஸ்துவை முழு தீவிரத்தோடு வெட்டியது. கிறிஸ்துவும் பிதாவினது இந்த கோப கலசத்தை சந்தோஷத்தோடு நமக்காக பருகினார். அங்கே பிதாவினது ஒரே பேறான குமாரனாகிய மீட்பர் இயேசு கிறிஸ்துவின் இரட்த்தம் முழுவதுமாக தரையில் சிந்தப்பட்டபோது பிதா தமது கோபம் யாவையும் தனித்துக்கொண்டார். அங்கே சிலுவையில் நமது பாவம் யாவுக்குமான தண்டனைகளை இயேசு கிறிஸ்து அடைந்துவிட்டதால் இனி நாம் தண்டனைக்கு உட்பட்டவர்கள் அல்ல. குமாரனுடைய இரத்தத்தால் பாவந்தீர கழுவப்பட்டவர்களாகிய நமக்கு இனி ஆக்கினைத் தீர்ப்பு இல்லை. ஒரு குற்றத்திற்கு இரண்டு முறை தண்டனை கொடுக்க முடியாது, அது அநியாயம். அதேபோல சிலுவையில் நம்முடைய பாவத்திற்கான தண்டனைகளை கிறிஸ்து சிலுவையில் சுமந்தது உண்மையானல், இனி நாம் அந்த பாவங்களுக்காக தண்டிக்கப்படப்போவதில்லை.

இரட்சகரின் இந்த வார்த்தை, கிறிஸ்து எதற்காக நியமிக்கப்பட்டாரோ அவைகளை நிறைவேற்றி முடித்து தீர்த்துவிட்டார் என்பதை சொல்கிறது:

ஆதாமுடைய வீழ்ச்சியைத் தொடர்ந்து ஏதேனில் தேவன் ஒரு ஆட்டை அடித்து, அதன் இரத்தம் முழுவதையும் சிந்தி, அந்த ஆட்டின் தோழினால் ஒரு ஆடையை தேவனே நெய்து, வீழ்ச்சியுற்ற நம் முதல் பெற்றோரின் நிர்வானத்தை தேவன் மூடினார். அதன் மூலமாக மனிதன் தேவனிடம் சேற குற்றமற்ற இரத்தம் சிந்தப்படவேண்டும் என்பதைக் காட்டினார். இப்படியாக மனிதன் கடவுளிடம் சேற குற்றமற்ற இரத்தம் சிந்தப்பட வேண்டும் என்று காட்டி, மெய்யான பழியாக தானே மேசியாவாக (மீட்பராக) வந்து மனிதனை விடுவிப்பேன் என்று கூறினார். இப்படியாக மோசேயின் ஆகமங்களும், சங்கீத புத்தகங்களும், தீர்க்கதரிசன புத்தகங்களும் மனிதனுடைய நிர்பந்தமான நிலையையும், அதன் விலைவையும், அதிலிருந்து காப்பாற்ற மீட்பர் வரவிருக்கிறார் என்று தான் தொடர்ந்து சொல்லி வந்தது. பழைய ஏற்பாடு முழுவதும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷ செய்தியை மாத்திரமே தொடர்ந்து பதிவுசெய்து வந்தது. வேதத்தில் இயேசு கிறிஸ்துவைக்குறித்து என்னென்ன காரியங்கள் சொல்லப்பட்டிருந்தது அவைகள் யாவையும் கிறிஸ்து செய்து முடித்து விட்டதாக கூறும் வார்த்தைதான் முடிந்தது. (வாசிக்க: லூக்கா 24:44)

இவரே ப.ஏ தேவனுடைய பிள்ளைகளுக்கும், பு.ஏ தேவனுடைய பிள்ளைகளுக்குமான ஒரே பழியாக இருக்கிறார். குமாரனையல்லாமல், மனிதன் இரட்சிப்படைய வேறே வழி இல்லை. (ரோமர் 3:25-26)

வாசிக்க: ரோமர் 53:4-5

பக்தன் இதைக் குறித்துப்பாடும்பொழுது, பூரண வாழ்க்கையே! தெய்வாசனம் விட்டு, தாம் வந்த நோக்கம் யாவுமே இதோ முடிந்தது! என்று இப்படியாக முடிக்கிறார்.

முள் தைத்த சிரசில்

நம் பாவம் சுமந்தனர்;

நாம் தூயோராகத் தம் நெஞ்சில்

நம் ஆக்கினை ஏற்றார்.

முடிந்தது:

நம் அருமை இரட்சகர் இயேசு கிறிஸ்து சிலுவையில் மொழிந்த இந்த ஒற்றை வார்த்தை ஒட்டுமொத்த சுவிசேஷத்தையும் உள்ளடக்கியிருக்கிறது. வரவிருக்கும் மீட்பரைக் குறித்து வேதம் என்னென்ன தீர்க்கதரிசனமாக முன்னுரைத்திருந்ததோ யாவையும் இயேசு கிறிஸ்து நிறைவேற்றி முடித்துவிட்டமையால் இவர் தான் மேசியா என்றும், இவர் மீது நான் (நாம்) வைக்கும் விசுவாசம் வீனாகாது என்றும் நான் புரிந்துகொள்ளலாம். என்னுடைய (நம்முடைய) இரட்சிப்புக்கு என்னென்ன செய்யவேண்டுமோ, எல்லாவற்றையும் நமக்காக செய்து முடித்தவராய் சிலுவையில் முடிந்தது என்று சொல்லி ஜீவனை விட்டார். ஆகவே என் விசுவாசம் சந்தேகத்திற்கு இடம் அளிக்காக நம்பிக்கைக்குறிய ஒருவர் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது. என்னுடைய விசுவாசம் உறிதியான கிறிஸ்துவின் மீது கட்டப்படிருப்பதால், என்னை நோக்கி எப்பேற்பட்ட காற்று அடித்தாலும், பெருமழை சொரிந்தாலும், நான் இரட்சிப்பிலிருந்து வழுவிப்போவதில்லை. அவர் என்னை முற்றுமுடிய பாதுகாத்து இரட்சிக்க வல்லமையுடையவராக இருக்கிறார். இரட்சகரின் முடிந்தது என்ற இந்த ஒற்றை வார்த்தை நமக்கு ஒரு சந்தோஷத்தைக் கொடுக்கிறதாகவும், ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கையைத் தருகிறதுமாக இருக்கிறது. சிலுவையில் நம் இரட்சகர் தொங்கிக்கொண்டிருக்கிறபோது அங்கே

ஏதோ ஒன்றை ஆரம்பித்ததாக இங்கே சொல்லவில்லை, மாறாக எல்ல்லாம் முடிந்தது என்றார். என்ன ஒரு நம்பிக்கைக்குறிய வார்த்தை. இந்த வார்த்தை நமக்கு இரட்சிப்பின் நிச்சயத்தைக் கொடுக்கிற வார்த்தையாக இருக்கிறது.

அடுத்தபடியாக, இரட்சகரின் இந்த வார்த்தையைக் குறித்து சிந்திக்கும்போது, ஒரு சம்பவத்தைக் கூறி என் கருத்தை முன் வைக்க இருக்கிறேன். இங்கிலாந்தை ஆண்ட மகா ராணி எலிசபெத் அவர்கள் தம் மரணப்படுக்கையில் இருக்கையில் பின்வருமாறு கூறினார். ஓ கடவுளே! எல்லான் முடிந்தது. நான் என் வாழ்க்கையின் முடிவுக்கு வந்துவிட்டேன். எனக்கு ஒரே ஒரு வாழ்க்கைதான் உண்டு, அதுவும் முடிந்துபோகிறது. இனி என்னால் இந்த உலகில் வாழமுடியாது, இனி யார் என்னை நேசிப்பார்கள்? இனி எந்த நாட்டின்மீது நான் வெற்றி காண்பேன்? இத்தோடு என் வாழ்க்கை முடிந்தது. ஒருவன் எதை வேண்டுமானாலும் தோற்கடிக்கலாம், ஆனால் மரணத்தால் விழுங்கப்பட்டே தீர வேண்டும். இது ஒரு விரக்தியான முடிவு. ஆனால் ஆண்ட்வராகிய இயேசு கிறிஸ்துவின் முடிவு இப்படி விரக்தியாக இருக்கவில்லை. அவர் தாம் பிதாவினால் அனுப்பப்பட்ட நோக்கத்தை உணர்ந்தவராக, வேதவாக்கியங்களில் சொல்லிய யாவையும் முழுவதுமாக நிறைவேற்றி, பூரண சமாதானத்தோடு பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன். (யோவான் 17:4) என்று சொன்னார். முடிந்தது என்ற வார்த்தை கிறிஸ்துவின் ஊழியப்பணி வெற்றியோடு நிறைவடைந்ததை உணர்த்துவதாக இருக்கிறது.

சிலுவையில் இயேசு கிறிஸ்து நித்திய மீட்பை (இரட்சிப்பை) உண்டுபண்ணினார் (எபி 9:12)

பாவத்தில் இருந்த நம்மீது இருந்த தேவகோபத்தை தனித்தார். (கொலோ 2:14)

சாத்தானை ஜெயித்தார். (கொலோ 2:15)

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அதினால் இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு இனி ஆக்கினைத் தீர்ப்பு இல்லை. (ரோமர் 8:1)

மனிதர் எவர்க்கும் மீட்பின் தேவனாயிருக்கிற இயேசு கிறிஸ்து, பூமியில் எந்த மனுஷனும் தேவனுடைய கோபத்திற்கு தப்பிப் பிழைக்கும்படியாக நம்முடைய பாவ தண்டனைகளை ஆசையோடு சகித்து ஏற்றுக்கொண்டு சிலுவையில் மாண்டார். அவருடைய மரணம் வெற்றியின் மரணம். கல்வாரியில் பாவத்தின் தண்டனை மனிதன்மீது விழவில்லை. அது நம்முடைய பரிகாரி கர்த்த்ராகிய இயேசு கிறிஸ்துவின்மீது விழுந்தது. கிறிஸ்துவின் இரத்தம் தேவ கோபத்தைத் தனித்து முழுமையாக தேவனுடைய நீதியை சாந்தப்படுத்தியமையால் இனியும் அவர் பாவத்துக்கான ஆக்கினையை நமக்குக் கொடுக்கப்போவதில்லை. கிறிஸ்துவின் இந்த நித்திய பழி மனிதர் எவர்க்கும் இரட்சிப்பை அழிக்கத்தக்க பூரண பழியாக இருக்கிறது. தேவன் தம்முடையவர்கள் எல்லாரையும் கிறிஸ்து என்னும் பிளவுண்ட மலைக்குள் அடைத்துவைத்துவிட்டார். இனி நாம் பாதுகாப்பாக இருக்கலாம்.

மரணத்தின் மீது அதிகாரம் உடையவர். அவர் தம்முடைய ஜீவனைத் தாமே சிலுவையில் கொடுத்து மரணத்தைப் பரிகரித்தார். வாசிக்க: யோவான் 10:18

Song no. 111

பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே;

பக்கம் பட்ட காயமும் பாய்ந்த செந்நீர் வெள்ளமும்

பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும்

எந்தக் கிரியை செய்துமே உந்தன் நீதி கிட்டாதே

கண்ணீர் நித்தம் சொரிந்தும் கஷ்ட தவம் புரிந்தும்

பாவம் நீங்க மாட்டாதே நீரே மீட்பர் இயேசுவே

யாதுமற்ற ஏழை நான், நாதியற்ற நீசன் தான்;

உம் சிலுவை தஞ்சமே, உந்தன் நீதி ஆடையே

தூய ஊற்றை அண்டினேன்

தூய்மையாக்கேள் மாளுவேன்.

நிழல் போன்ற வாழ்விலே கண்ணைமூடும் சாவிலே

கண்ணுக்கெட்டா லோகத்தில், நடுத்தீர்வை தினத்தில்

பிளவுண்ட மலையே, புகலிடம் ஈயுமே.

தேவனுக்கே மகிமை உண்டாவதாக!



கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்