சித்தமற்ற மனிதனை மீட்க சித்தங்கொண்ட இயேசு - Andrew Kingsly Raj
டிசம்பர் 3
சித்தமற்ற மனிதனை மீட்க சித்தங்கொண்ட இயேசு
- ஆண்ட்ரூ கிங்ஸ்லி ராஜ்
அவர் தமக்கு முன்பாக வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை நினைக்காமல், சிலுவையை சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபக்கத்தில் வீற்றிருக்கிறார். ஆகவே, நீங்கள் மனம் தளர்ந்தவர்களாக உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாமல் இருக்க, தமக்கு விரோதமாகப் பாவிகளால் செய்யப்பட்ட இந்தவிதமான வெறுக்கத்தக்க காரியங்களை சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள். (எபிரேயர் 12:2-3)
இயேசு கிறிஸ்து வெறுமனே சுவிசேஷத்தை போதிக்க வரவில்லை, அந்த சுவிசேஷத்தின் மையமான பலியாகும் பலியாக முழு மன விருப்பத்தோடு இந்த பூமிக்கு வந்தார். பாவத்தின் கொடூர குணம் என்னவென்றால், நம்முடைய விருப்பமின்மையைக் குறித்த அறிவு இல்லாமை. தேவன் எதை செய்ய சொல்கிறாரோ அது நமக்கு பிடிக்காத பட்சத்தில் அதை செய்ய நமக்கு மனம் இசைவதில்லை. மற்றவர்களுடைய தேவைக்காக நம்முடைய ஆசா பாசங்களை சுருக்கிக்கொள்ள நமக்கு மனம் வருவதில்லை. காத்திருப்பதை நாம் விரும்புவதில்லை. வெளிப்படைத்தன்மையோடு நேர்மையாக இருக்க நாம் விரும்புவதில்லை. மற்றவருடைய அன்பான கடிந்துகொள்ளுதலை நாம் விரும்புவதில்லை. நம்முடைய சொந்த தவறான எண்ணங்களுக்கும் விருப்பங்களுக்கும் மறுப்பு சொல்ல நாம் விரும்புவதில்லை. தேவன் ஊழியத்திற்காக அழைத்தால் 'இதோ வருகிறேன்' என்று சொல்ல நமக்கு மனம் வருவதில்லை. சல சமயங்களில் நாம் செய்துவிடும் தவறுகளை ஒத்துக்கொள்ளக்கூட நமக்கு மனம் வருவதில்லை. முழுவிருப்பத்தோடு சேவை செய்யவும், தாராளமாக கொடுக்கவும் நமக்கு மனம் வருவதில்லை. பாவம் நம்மில் ஏற்படுத்திய ஒரு மாபெரும் தாக்கத்தின் விழைவு விருப்பமின்மை.
ஆனால், கிறிஸ்து பிறப்பு திருவிழா எதைப்பற்றியது என்றால், தங்கள் பாவத்திலிருந்து விடுதலை பெற மனமில்லாத மனிதர்களைக் காப்பாற்ற இறைவன் முழு விருப்பத்தோடு பாடுபடுகிற இரட்சகராக இந்த பூமியில் பிறந்தார் என்பதே. இவரே மனிதரின் விடுதலைக்கான ஒரே வாய்ப்பு. இவர் மனிதனை மீட்கும்படியான பலியாக இந்த பாழடைந்த பூமிக்கு வரும்படியாக நித்தியத்தின் மகிமைகளை இழக்க விருப்பமுடையவரானார். மனுத நிலையில் காணப்படும் அனைத்து பலவீனங்களையும் முழுவிருப்பத்தோடு ஏற்று ஒரு பாலகனாக பிறந்தார். கொட்டகையில் ஒரு இழிவான பிறப்பை முழுவிருப்பத்தோடு தெரிந்தெடுத்தார். மற்றொருவரை சார்ந்து வாழும் குழந்தைப் பருவத்தை முழுவிருப்பத்தோடு இறைவன் ஏற்றுக்கொண்டார். வீழ்ச்சியுற்ற இவ்வுலகில் காணப்படும் அனைத்துவிதமான பாடுகளுக்கும் உள்ளாவதை விருப்பத்தோடு ஏற்று சகித்துக்கொண்டார். அவருடைய சொந்த கட்டளைகளுக்கு முழுமனதோடு கீழ்ப்படிய விருப்பம் கொண்டார். பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற எப்போதும் விருப்பத்தோடு இருந்தார். மற்றவர்களின் பனிவிடைகளைப் பெற்றுக்கொள்ள எல்லா தகுதிகளும் இருந்தபோதும் மற்றவர்களுக்கு பனிவிடை செய்ய விருப்பம் கொண்டார். தவறாக புறிந்துகொள்ளப்படுவதை தவறாக நடத்தப்படுவதையும் விருப்பத்தோடு சகித்துக்கொண்டார். தனக்குத் தனிப்பட்ட நிலையில் தீங்கு நேறும் என்று தெரிந்தபோதிலும் விரும்பி பிரசங்கம் செய்தார். பொதுவெளியில் நிந்தைகளை அனுபவிக்க சித்தம் கொண்டார். சரீரத்தில் பாடுகளை சகிக்க சித்தம் கொண்டார். பிதாவின் கைவிடுதலை முழுவிருப்பத்தோடு அனுபவித்து கடந்துசென்றார். மனிதனுடைய இரட்சிப்பிற்காக மரிக்கவும் ஆசை கொண்டார். நமக்காக நித்தமும் பிதாவிடம் பரிந்துபேசும்படியாக உயிர்த்தெழுந்து பரலோகத்திற்கு ஆசையோடு ஏறிச்சென்றார்.
பாருங்கள், இது வெறும் கிறிஸ்துமஸ் கதை அல்ல; ஒட்டுமொத்த மீட்பின் வரலாறும் இயேசு கிறிஸ்துவின் நித்திய விருப்பத்தில் (அ) சித்தத்தில் அடங்கியிருக்கிறது. அவர் விருப்பங்கொள்ளவில்லையென்றால், நாம் நம்பிக்கை அற்றவர்களாகவும் தேவன் அற்றவர்களாகவும் இருந்திருப்போம். அவர் விருப்பங்கொள்ளவில்லையென்றால், பாவத்தின் வல்லமையினாலும் சாபத்தினாலும் ஆட்கொள்ளப்பட்டவர்களாக இருந்திருப்போம். அவர் விருப்பங்கொள்ளவில்லையென்றால், நித்தியமாக தண்டனைத்தீர்ப்புக்கு உட்பட்டிருப்போம். இந்த கிறிஸ்து பிறப்பு விழா காலங்களில் இயேசு கிறிஸ்துவின் பூரண விருப்பத்தை நினைத்துக் கொண்டாட மறக்க வேண்டாம். அவருடைய தியாகம் நிறைந்த விருப்பம் மட்டுமே உங்கள் வாழ்க்கை, மரணம் மற்றும் நித்தியத்தின் நம்பிக்கையாக இருக்கிறது.
இறைவன் இயேசு கிறிஸ்து பாலனாய் பிறக்க விருப்பம் கொண்டது உனது இரட்சிப்புக்கு உத்திரவாதமாக இருக்கிறது. இப்போதும், இந்த வேளையிலும் உன்னுடைய மோசமான நிலையிலும் உன்னை நேசிக்க விருப்பம் உடையவராக இருக்கிறார். உன்னை மறுபடியும் மறுபடியும் மன்னிக்க இப்போதும் விருப்பம் உடையவராக இருக்கிறார். நீ வளர்சியடையவும் முதிர்ச்சியடையவும் விருப்பமுடையவராக பொருமையோடு இருக்கிறார். உனக்குள்ளாகவும் உன்னை சுற்றியும் இருக்கிற பாவத்திலிருந்து உன்னை காப்பாற்றவும் விருப்பமுடையவராக இருக்கிறார். இப்போதும், இந்த வேளையிலும், அவருடைய வார்த்தையின் மூலமாக உனக்கு போதிக்க விருப்பமுடையவராக இருக்கிறார். உனக்கு தேவையான ஆவிக்குறிய சகல தேவைகளையும் சந்திக்க விருப்பமுடையவராக இருக்கிறார். நீ அவருக்கு உண்மையாக இல்லாதபோதும், இப்போதும் அவர் முழுவிருப்பத்தோடு உண்மையுள்ளவராக இருக்கிறார். இப்போதும், நீ பலவீனமாக இருக்கிற வேளையில் உனக்கு பெலன் தரவும், நீ வீழ்ந்துபோகும்போது உன்னை தூக்கி நிருத்தவும் விருப்பமுடையவராக இருக்கிறார். இப்போதும், நீ சோர்ந்துபோகும்போது உன்னைத்தேற்றவும், நீ தீமையில் அகப்படும்போது அதிலிருந்து உன்னை காப்பாற்றவும் விருப்பமுடையவராக இருக்கிறார். நித்தியத்தில் நீ சேரும்வரை உன்னுடைய தேவைகளை சந்தித்து, போஷித்து, வழிநடத்தி, பாதுகாத்து நிலைநிருத்த விருப்பமுடையவராக இருக்கிறார்.
பாருங்கள், கிறிஸ்து பிறப்பு நிகழ்வு நமக்கு நியாபகப்படுத்துவது ஒன்றே. நம்முடைய முக்கால நம்பிக்கையும் நம்முடைய சித்தத்தில் அல்ல, தூதர்களால் போற்றப்பட்ட, மேய்ப்பர்களால் பணியப்பட்ட, சாஸ்திரிகளால் தேடப்பட்ட இயேசு கிறிஸ்துவின் சித்தத்தில் அடங்கியுள்ளது. விருப்பமுள்ள இயேசு கிறிஸ்துவே விருப்பமில்லா பாவிகளின் ஒரே நம்பிக்கை!
பெற்றோர்கள் பகுதி: விருப்பம் கொள்ளுதல் என்றால் என்ன?, நம்முடைய இருதயத்தில் இருக்கும் பாவம் எப்படி நம்மை விருப்பமற்றவர்களாக மாற்றுகிறது என்று உங்கள் பிள்ளைகளிடம் கேள்வி கேட்டுப்பாருங்கள். எந்தெந்த இடங்களில் அவர்கள் விருப்பமற்றவர்களாக நடந்துகொண்டார்கள் என்று பேச உற்சாகப்படுத்துங்கள். இயேசு கிறிஸ்து நம்மை நேசித்ததால் இப்பூமிக்கு வந்து எப்படி விருப்பத்தோடு கடினமான சூழ்நிலைகளை சகித்தார் என்பதைப் பற்றி அவர்களோடு பேசுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக