இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து... எபிரேயர் 11:26

ஒவ்வொரு இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும் மாறாத ஒரே நோக்கம் உண்டு. நாம் எதோ நோக்கம் இல்லாமல் அல்லது பலன் இல்லாமல் வாழ்வதற்கு தேவன் நம்மை அழைக்கவில்லை. நாம் அந்த நோக்கத்தை நோக்கி ஓட வேண்டும். ஒரு வேளை பயணம் செய்ய வேண்டிய ஓடுதளம் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், அடைய வேண்டிய இலக்கு ஒன்றுதான். நாம் அந்த இலக்கை நோக்கி ஓட வேண்டும். அதையே நோக்கமாக வைத்து ஓட வேண்டும். நாம் அடைய வேண்டிய இலக்கு கண்ணுக்கு தெரியாமல் இருக்கலாம். இயேசு கிறிஸ்துவும், அவருடைய சீஷர்களும், தேவ மனிதர்களும் அந்த பலனைக் குறித்து சாட்சி கொடுக்கிறார்கள். அந்த பலன் இன்னும் வரவில்லை, ஆனால் கண்டிப்பாக அது கிடைக்கக்கூடிய பலன்தான். அந்த பலனுடைய மகிமையை எதற்கு ஒப்பிட்டு சொல்ல முடியும்? இந்த பூமியும், அதில் உள்ள மகிமையும் குறைந்து கொண்டே போகும், ஆனால் இனிவரும் பலனாகிய பரலோக ராஜ்யமோ அதன் மகிமை குறைந்து போகாதது, ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே இருக்கக்கூடியது. 

நாம் செய்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் இது நம்முடைய நோக்கமாக மற்றும் ஒரு உந்து சக்தியாக அமைய வேண்டும். நாம் வாழ்கிற இந்த பூமி நமக்கு நிரந்தரமல்ல, இதிலே பரதேசிகளாக இருக்கிறோம். (இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளை கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள். எபிரேயர் 11:13)

நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் இருக்கிறது.(பிலிப்பியர் 3:20) அதை நோக்கியே தொடர்வோம்.


 அதிலே பொக்கிஷத்தை சேர்த்து வைப்போம். அந்த பலனுக்காக உழைப்போம். அந்த பலனுக்காக பரிசுத்தமாய் வாழ்வோம். அந்த பலனுக்காக உபத்திரங்களை சந்தோசத்தோடு ஏற்றுக்கொள்வோம். அந்த பலனுக்காக தேவனுக்காக ஊழியம் செய்வோம். 


Vaithilingam 

CEF Tenkasi

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்