தாயும் என் தலைவனும் பொன்.வ.க கவிதைகள்

ஆதியிலே இருந்ததுவும் அகிலம் செய்த ஆண்டவனோ டிருந்ததுவும் அனைத்துமான,
ஆதிபரம் பொருளான வாக்காய் நின்று
ஜோதிவடி வானவனும் நீயே! நீயே!

மானுடத்தின் இருளகற்ற மண்ணில் வந்த
வானுலகின் வரம்நீயே, மறைநூல் சொன்ன
மாசற்ற மெய்யொளியே, வடிவம் பெற்று
இயேசென்ற பேரேற்ற இறையே போற்றி!

மூவாத முதலவனே, மனித சாதி 
சாவாத படிகாக்க சிலுவை சேர்ந்து
பூவான மேனியதைப் பொற்றலாக்கி
கோவேநீ கொலைமரத்தில் நின்றதென்னே?

நாயேஎன் றெனையிகழ்ந்தோர் நகர்ந்து செல்ல,
சேயேஎன் றெனையழைத்து செந்நீர் தந்து
தாயேபோல் தாங்கியவா, தரும தேவா!
நீயேஎன் தலைவன்; நின் திருத்தாள் போற்றி!

   22.08.2025

#பொன்வக #பொன்வகலைதாசன் 
#பொன்வககவிதைகள் #ponvaka 
#ponvakalaidasan #ponvakapoems

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்