எபேசியர் 3:16,17 காஃபீ தியானம் 🍵

 எபேசியர் 3:16 "நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், ... வேண்டிக்கொள்ளுகிறேன்."

இந்த பாவம் நிறைந்த உலகில் துனந்தோறும் நுழைந்து தேவனுக்குப் பிரியமாக வாழ்வது என்பது அசாத்தியமானது. நம்முடைய உள்ளான மனிதன் மிகமிக பலவீனமானவன். இந்த உலகின் போராட்டங்களை தினந்தோறும் போராடி மேற்கொண்டு வீடு திறும்ப நம்முடைய உள்ளான மனிதன் பலப்படவேண்டும். சரீர பெலத்திற்கு நாம் என்ன உடற்பயிற்சி செய்தும் வலுவாகிவிடலாம். ஆனால், ஆன்மீக சரீரத்தை நம்மால் பெலப்படுத்த முடியாது. ஆகவேதான், நம் முற்பிதாக்கள் கர்த்தரையே சார்ந்து தங்கள் நாளைத் தொடங்கினர், "துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும், அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன். சங் 19:13"

எபேசியர் 3:17 "விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும்"
அதெப்படி கிறிஸ்து மனித உடலின் இருதயத்தில் வாசாமாய் இருக்க முடியும்? ஏன் கிறிஸ்து இருதயத்தில் வாசமாய் இருக்க வேண்டும்?

உள்ளான மனிதன் பலப்பட்டிருக்க வேண்டுமானால் அவனுடைய இதயக்கதவுத் திறக்கப்பட்டு, அங்கே கிறிஸ்துவுக்கு ஒரு பிரத்யேக தனித்த அரியனை எழுப்பப்பட்டிருக்க வேண்டும். அவனுடைய வாழ்க்கை கிறிஸ்துவின் கட்டுப்பாட்டிற்கு (ஆளுகைக்கு) உட்படுத்தப்பட்டிருக்கவேண்டும்.

எவன் ஒருவன் கிறிஸ்துவை வாயினால் உயர்த்திப்பாடித் துதித்துப்பாடினாலும், வேதத்தைக் கரைத்துக்கரைத்துக் குடித்த பேரறிஞனாக இருந்தாலும், அவனுடைய இருதயத்தில் கிறிஸ்து வாசமாய் இல்லாமல் இருக்க முடியும். கிறிஸ்துவை வாயில் வாசமாய் இருக்கச்செய்கிறவனும், கிறிஸ்துவை தலையில் வாசமாய் இருக்கச் செய்கிறவனும் விழுந்துபோவது மிக மிக எளிது.

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்