பெரிய தேவன் - தூய்மைவாதிகளின் ஜெபம்
அனைத்து நன்மைகளின் ஊற்று
தேவனே! என்னுள் இருக்கிற ஒவ்வொறு மேட்டிமையான சிந்தனையையும் அழித்து விடும்.
பெருமையை துண்டு துண்டாக உடைத்து காற்றில் சிதறடியும்.
என் மீது ஒட்டிக்கொண்டிருக்கும் சுயநீதியின் எந்த ஒரு சுவடையும் அழித்து விடும்.
உண்மையான மனத்தாழ்மையை என்னுள் விதைப்பீராக. சுய வெறுப்பை என்னுள் கட்டளையிடும்.
வருந்தத்தக்க கண்ணீரின் ஊற்றை என்னுள் திறவும். என்னை உடைத்து பிறகு என்னை உருவாக்கும்.
என் இருதயத்தை தேவன் வாசம் செய்வதற்கு ஏற்ற இடமாக ஆயத்தப்படுத்தும். அப்பொழுது என் பிதா என்னுள் நிலைத்திருக்க முடியும். துதிக்கு பாத்திரராகிய கிறிஸ்து இயேசு தன்னுடைய சுகமளிக்கும் தொடுதலோடு வர முடியும். பரிசுத்த ஆவியானவர் பரிசுத்தமாக்கும் கிருபையோடு இறங்க முடியும்.
ஒரே தேவனும், மூன்று தனித்தனி நபர்களாயும் இருக்கிற திரியேக தேவனே, உமது மகிமைகக்காகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயமாகிய என்னுள் வாசம் செய்யும்.
நீர் இருக்கும் பொழுது தீமை நிலைத்திருக்க முடியாது. உமது ஐக்கியத்தில் பரிபூரண ஆனந்தம் உண்டு.
உம் பக்கத்தில் இருக்கும்பொழுது பயம் இல்லை. எந்த ஒரு அச்சமும் மனதைத் தடுக்காது.
என் இதயம் நறுமணத்தால் பூக்கும்.
நீர் என்னுள் வாசம் செய்வதற்கு மனந்திரும்புதலின் மூலமாக என்னை உம் பிரசன்னத்தில் அமரச் செய்யும்.
உமது வல்லமைக்கு மிஞ்சினது எதுவும் இல்லை.
உம்மால் செய்ய முடியாத பெரிதான காரியம் எதுவும் இல்லை.
உம்மால் தர முடியாத பெரிதான நன்மை எதுவும் இல்லை.
உமது வல்லமை எல்லையற்றது. உம் அன்பு எல்லையற்றது.
உமது கிருபை எல்லையற்றது. உமது இரட்சிப்பின் நாமம் மகிமை உள்ளது.
பாவிகள் மனந்திரும்புகிறதினாலே, கெட்ட குமாரர்கள் மீட்டெடுக்கப் படுகிறதினாலே,
பின்மாறியவர்கள் மீட்டெடுக்கப் ப்டுகிறதினாலே,
பிசாசினால் சிறைப்பிடிக்கப் பட்டவர்கள் விடுவிக்கப் படுகிறதினாலே,
குருடான கண்கள் திறக்கப்படுகிறதினாலே,
உடைக்கப்பட்ட இதயங்கள் கட்டப்படுகிறதினாலே,
நம்பிக்கையற்றவர்கள் மகிழப்பண்ணப் படுகிறதினாலே,
சுயநீதிக்காரர் வெட்கப்படுகிறதினாலே,
பரிசேயர்கள் பொய்களின் புகலிடத்திலிருந்து துரத்தப்படுகிறதினாலே,
பேதைகள் வெளிச்சத்தை அடைகிறதினாலே,
பரிசுத்தவாங்கள் தங்களின் பரிசுத்தமுள்ள விசுவாசத்தில் பெலப்படுகிறதினாலே,
தூதர்கள் பாடி மகிழட்டும்!!!!!!
நான் பெரிய தேவனிடத்தில் பெரிய காரியங்களை கேட்கிறேன். ஆமென் !!!!!
───── ♰ ─────
யார் தூய்மைவாதிகள்? அழுத்தவும்
கருத்துகள்
கருத்துரையிடுக